அகம் புறம்

    அகம் புறம்   படுக்கை தட்டவில்லை பாத்திரம் கழுவவில்லை கூடம் பெருக்கவில்லை குப்பை அகற்றவில்லை துணிஈரம் உலர்த்தவில்லை உண்ட ரொட்டி மூடவில்லை அம்மையாருக்கு அவசர வேலை   தூய்மைநாள் விழாவுக்கு அமையார் தலைமையாம் மகளிர் மன்றத்துக்கும் அவரே  தலைவியாம்…

கழுவுவோம்

    ‘தகுதியே இல்லை அவன் எப்படித் தலைவன்’   அணையப்போகும் தீபமவன் ஆடட்டும்’   ‘சுயநலவாதி அவன் சூனியமாவான்’   ‘எரிகிற வீட்டிலும் அவன் இருப்பதைப் பிடுங்குவான்’   ‘கண்ணியம்இல்லை காணாமல் போவான்’   ‘அவன் தலைக்கனமே அவனைத் தாழ்த்தும்’…

பூமி தொழும்

      பறந்த வெளி பச்சைத் தீ   மிதித்தால் நிமிரும் ஒடித்தால் துளிரும்   உடம்பே விதை தொடரும் கதை   ஆயுள் கணக்கில்லை தேடல்கள் மிகையில்லை   மூங்கில் தானியம் சகோதரம்   தர்மத்தின் தாய் இயற்கையின்…

சந்திப்போம்

    அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம்   உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம்   ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம்   பழங்கள் தரும்போது நீ இருக்கப்போவதில்லை ஆனாலும் நீர் வார்க்கிறாய்…

சாம்பல்

      அந்த வீட்டின் பெயரே கோழிக்குஞ்சு வீடுதான் வீடு நிறைய கோழிகள்   பஞ்சுக்குஞ்சுகள் பின்தொடர இதோ சாம்பல்நிறக் கோழி எல்லாக் கோழிக்குமே தாய்க்கோழி சாம்பல்தான்   குஞ்சுக் காலங்களில் சாம்பலின் முதுகு பல்லக்கு றெக்கைகள் குடைகள் மிதிகள்…

தந்தைசொல் தட்டினால்…

      (ஒரு கதை கவிதையாக)   மகன், மருமகள் பேரன் பேத்தியுடன் அம்மா   ‘பிள்ளைகளுக்காக அம்மா தொல்லையின்றி நாம்’   என்பது மகனின் கொள்கை     பணிப்பெண்ணாய் அம்மா எப்போதும் அடுக்களையில் அனைவரும் தனி அறையில்…
பூ

பூ

மனிதன் பூமிக்கு வருமுன் பூமியில் பூத்தது முதல் பூ அழகும் மணமும் அதிசயமானது   அன்று பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன பூவைக் கண்டதில் சிறகு பெற்றன பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன பிறகுதான் வந்தான் மனிதன்   இன்று கற்காலம் கணினிக்காலமானது…

இளமை வெயில்

    என்னைச் சுமந்தபடி அம்மா சூட்டில் நடந்தது   அம்மாவும் நானும் காய்ந்த நெல்லைக் கோணியில் சேர்த்தது   மதியம் அத்தா சாப்பிட நான் விசிறிவிசிறி நின்றது   அம்மை ஊசிக்கு ஓடி ஒளிந்தது   பனந்தோப்பில் காணல்நீர் கண்டது…

சிதறல்கள்

சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது   நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது   ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு?   மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில்   பச்சத்தண்ணியானால் பத்திரமாய் இருக்கலாம கொதித்தால்…

என்னெப் பெத்த ராசா

  அன்னையர் தினக் கவிதை     கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய்   என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய்   உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய்   துளி எனைத் தந்த நதியே…