This entry is part 7 of 8 in the series 4 ஏப்ரல் 2024

அமீதாம்மாள்

எனக்குள்
இன்னொரு உயிர்
பேசுகிறது
பேசுகிறேன்
அழுகிறது
அழுகிறேன்
சிரிக்கிறது
சிரிக்கிறேன்
மௌனிக்கிறது
மௌனிக்கிறேன்
வெளியே
எவர் பேசுவதும்
எனக்குப் புரிவதில்லை
நான் பேசுவதும்
எவர்க்கும் புரிவதில்லை
அந்த இன்னொரு
உயிரைத் தவிர


Series Navigationஅனுபவம்கன்னியப்பன் கணக்கு