முதுமை

    கட்டிப்பிடித்திருந்த ஆசைகள் காணவில்லை நம்பிக் கைகள் தட்டிக் கொடுக்கிறது   ‘அடுத்து என்ன’ கேள்வி துரத்துகிறது   அறியமுடியாததை அலசத் தெரியவில்லை அறிந்த்தை அலசுகிறேன்.   நியாயமான வாழ்க்கை விரக்தி வியர்வையாகக் கூட வெளிப்படவில்லை   எத்தனை சந்தோசங்களைத்…

அன்னையர் தினம்

      நாற்பதாண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நெஞ்சைவிட்டு நகரமறுக்கும் நிகழ்வு   சுவர் ஒன்றெழுப்ப வானம் வெட்டி ஆறப்போட்டேன் வாடிக்கை நாயொன்று வானத்தில்  இறங்கி குட்டிகளை ஈன்றது   அன்று இரவு இடியோடு அடமழை இடிந்து விழுந்த…

பயம்

    பரதேசிகள் பயப்படுவதில்லை மடியில் கனமில்லை   அந்த மலரை இழப்போமோ செடிக்கு பயம் உதிக்கும் இன்னொன்றென்று ஏன் புரியவில்லை ?   வலக்கை இடக்கைக்குப் பயந்தால் வணங்குவது எப்படி   பட்டுப்புழுவென்றால் பயம் பட்டுச்சேலை பிடிக்குமாம்   ஆயுதபாணிகள்…

நம்பலாமா?

  அமீதாம்மாள்   மருத்துவ உலகின் மாமன்னன் அவர் ஆராய்ச்சிக்காகவே ஆயுளைத் தந்தவர் உலகெங்கும் வாழ்ந்தாலும் ஜெர்மனியில் வசிக்கிறார் அங்குதான் வசிக்கிறார் என்னுடைய மகளும்            எனக்கும் ஒரு முடக்கு நோய்   ஊடு கதிர் ஊடாக் கதிர் ஒளிக்கதிர்…

இங்கு

அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே  இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும் அறுவடையும் இங்குதானாம் பூட்டும் சாவியும் இடம்…

இதுவும் ஒரு காரணமோ?

    அமீதாம்மாள் போக்குவரத்து போகாவரத்தானது முதுகும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வாகன நெருக்கடி என்ன காரணமாம்?   அட! பெரிய குப்பை வாகனம் குப்பை அள்ளுகிறது   நிமிட தாமதங்கள் நெருப்பாய் அவசரங்கள் ஒலிப்பான்கள் இரைச்சல்கள்   பாதசாரியாய் நான் அந்தக்…

இலைகள்

ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி உயிர்களின் குடை உடை வீடு கூடு மருந்து விருந்து இலைகள் இல்லாதிருந்தால் செவ்வாயாகி யிருக்கும் பூமிப் பிரதேசம் மொத்த…

முகநூலில்…

அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள் அன்று தலைவர் நிதியளித்தார் பெற்றுக்கொண்டார் இல்ல நிர்வாகி நிகழ்ச்சி முடிந்தது அந்த நிர்வாகியை…

யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன் அடாவடிப் பேச்சு அடிதடியில் முடியலாம் ‘ஆளுக்குப் பாதியே நியாயம்’ என்றான் இன்னொருவன்…

மாலையின் கதை

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் பூக்கள் ‘நலமா..நலமா..’ என்றது அதன் மோகனப் புன்னகையில் நான் மேகமென மிதந்தேன் மாலையில் ஒரு விழா... தலைவரின் கழுத்தில்…