author

கம்பனின் சகோதரத்துவம்

This entry is part 1 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஹாங்காங்கில் மார்ச் 17ஆம் தேதி நடந்த இலக்கிய வட்டத்தின் போது பேசியது. சித்ரா சிவகுமார் உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டு உடையார் – அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே. கம்பனின் கடவுள் வாழ்த்துடன் கம்பன் பற்றிய என் கருத்தினை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன். பள்ளி நாட்களிலும் கல்லூரியிலும் கம்பன் பற்றி என் ஆசிரியர்கள் மிகச் சீரிய முறையில் அறிமுகப்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும். பாடல்களின் பொருளை […]

கசீரின் யாழ்

This entry is part 26 of 45 in the series 4 மார்ச் 2012

இளவரசன் கசீர் போர்களத்திலிருந்து குதிரையில் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் வகடு பழங்குடியினரை ஆளும் நகம்பாவின் மகன். வகடு பேரரசை ஆள வேண்டும் என்று போர்டுமா பழங்குடியினர் அவர்கள் மேல் போர் தொடுத்திருந்தார்கள். வகடு இனத்தவரும் சற்றும் மனந்தளராமல் அவர்களை எதிர்த்து வந்தார்கள். வெற்றி அல்லது செத்து மடி என்ற உறுதியான கொள்கையிடன் இருந்தான் இளவரசன். நகம்பா வயதான போதும், எட்டு குழந்தைகளுக்குத் தந்தையான கசீருக்கு பட்டத்தை கொடுக்காமல், போர் தொடுக்க அவனை அனுப்பிய வண்ணம் இருந்தார். இந்தப் […]

பேஸ்புக் பயன்பாடுகள் – 3

This entry is part 13 of 45 in the series 26 பிப்ரவரி 2012

“என்னப்பா ஸ_ப்பரான டீ-சர்ட் போட்டிருக்கே..” “ஆமாம் சுரேஷ்.. எனக்கு பேஸ்புக் போட்டி ஒண்ணுல டீ-சர்ட் பரிசாக கிடைச்சது” “என்ன பேஸ்புக் போட்டியா? அதுல பரிசா? அது எப்படி?” “காதே பசிபிக் விமான நிறுவனம் பேஸ்புக்ல்ல சுனாமி வந்த ஜப்பான் பக்கமா வியாபாரத்தைப் பெருக்க ஒரு போட்டி நடத்தினாங்க. ஹாங்காங் மக்கள் ஜப்பான் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும், ஜப்பான் மக்கள் ஹாங்காங் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும் பேஸ்புக்கிலேயே பதிய வேண்டும். அதில் நல்லப் பதிவுகளுக்குப் பரிசுன்னு […]

பேஸ்புக் பயன்பாடுகள் – 2

This entry is part 5 of 40 in the series 12 பிப்ரவரி 2012

“கீதா.. இன்னிக்கு ராதாவுக்குப் பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறதா?” “எனக்கு ஞாபகம் இருக்கவில்லை.. ஆனால் தெரியும்..” “என்ன சொல்லறே.. புரியலையே!” “எனக்கு அவள் பிறந்த நாள் இன்று என்பது ஞாபகம் இல்லை. ஆனால் இன்று என்பதை பேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்டேன். இப்போ புரியதா?” “அப்படியா? அவளுக்கு என்ன பரிசு தரலாம்?” “நான் பரிசும் கொடுத்துட்டேன்..” “கொடுத்துட்டியா? என்னை விட்டுட்டியே?” “பைசா செலவில்லாமே.. பரிசை அனுப்பிட்டேன். நீயும் பரிசு கொடுக்கலாம்..” “என்னது செலவில்லாமையா? அப்படி என்ன பரிசு?” […]

பேஸ்புக் பயன்பாடுகள் – 1

This entry is part 28 of 31 in the series 5 பிப்ரவரி 2012

“சேகர்.. உங்க அப்பா இப்போ எப்படி இருக்காரு?” “நாளைக்கு அவசரமா அறுவை சிகிச்சை செய்யணுமாம்.. அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது.. அதுக்குத்தான் அலையறேன்..” “என்ன இரத்தம் தேவை?” “ஓ-பாசிடிவ்..” “அப்படியா.. இரு.. இன்னும் ஐந்தே நிமிஷத்திலே உனக்கு கிடைக்கச் செய்யறேன்” “ஐந்து நிமிஷத்திலையா.. நான் நேத்துலேந்து அலையறேன்..” “சோசியல் பிலட்-ன்னு பேஸ்புக்ல ஒரு பயன்பாடு இருக்கு. அதில் நமக்குத் தேவையான இரத்த வகையைச் சேர்ந்தவரை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம்..” “அப்ப உடனடியா செய்து, இரத்த தானத்துக்கு ஏற்பாடு செய்தா.. […]

புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)

This entry is part 18 of 30 in the series 22 ஜனவரி 2012

அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள். “கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல். “இந்தப் புத்தகம் கமலாவுக்கு நல்லா அறிவியல் கத்துத் தரும்ன்னு நினைக்கிறேன்” என்று மற்றொரு குரல். “வைரமுத்து எழுதிய புத்தகம் இருக்கிறதா?” “சுஜாதா எழுதிய புத்தகம் இருக்கிறதா?” சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர். அதற்கிடையில், […]

காணாமல் போன ஒட்டகம்

This entry is part 4 of 39 in the series 4 டிசம்பர் 2011

வளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர். வளமான நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாதிருந்த காலத்தில் வியாபாரி ஒருவனின் ஒட்டகம் காணாமல் போனது. பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஒட்டகத்தைத் தேடிச் சென்ற வியாபாரி வழியில் நால்வரைச் சந்தித்தான். “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான். “நாங்கள் பெருத்த துயரத்தில் இருக்கிறோம். […]

யாருக்கும் பணியாத சிறுவன்

This entry is part 18 of 37 in the series 27 நவம்பர் 2011

சித்ரா சிவகுமார், ஹாங்காங் தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் சமூகத்தினர், மழைக்கடவுளாக சேக்கை நம்பினார்கள். அவர் மேகங்களுக்கு அப்பால், வானத்தின் மத்தியில், மிகவும் உயர்ந்த இடத்தில் அழகான தோட்டத்தின் நடுவே அமைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் அதிகம் தங்க மாட்டார். சூரியன் எங்கெல்லாம் தன் முழுச்சக்தியைக் காட்டி வரண்டு போகச் செய்கிறாரோ, அங்கெல்லாம் சென்று, தன் மழைக்குடுவையைத் திறந்து, மழை பெய்யச் செய்து, செடி கொடி, விலங்குகள் மனிதர்களுக்கு இதம் அளிப்பார். அதனால் இரக்கம் […]

அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை

This entry is part 40 of 53 in the series 6 நவம்பர் 2011

ஜப்பானில் கசுமியும் இசிரௌவும் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, குழந்தை இல்லாததால், அவர்கள் வாழ்வில் துயரம் எட்டிப் பார்த்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வேண்டுதலுக்குப் பிறகு, ஒரு அழகிய மகனை ஈன்றெடுத்தாள் கசுமி. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, “அதிர்ஷ்டச் சிறுவன்” என்ற பொருள் படும்படி, குழந்தைக்கு “கிசிரௌ” என்று பெயரிட்டனர். கசுமியும் இசிரௌவும் மகனைப் பெரிதும் நேசித்தனர். அவனுக்கு எதையும் இல்லை என்று சொல்லாமல், அழுதாலும், கோபித்தாலும், […]