author

தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்

This entry is part 11 of 41 in the series 10 ஜூன் 2012

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, தற்கால சந்ததியினர் வலுவிழந்து கொண்டே போகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். டஜன் கணக்கில் பிள்ளை பெற்றவர்கள் பலமுடன் இருக்க, முதல் குழந்தைக்கே பற்பல சிகிச்சைகள் செய்யும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டனர். கருத்சிதைவும் சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு குழந்தை அல்லது அதிக பட்சம் இரு குழந்தைகள் மட்டுமே போதும் என்ற மனோநிலை வந்துவிட்டது. ஒரு குழந்தை என்றால், அது குடும்பத்தினரைப் பிற்காலத்தில் பாதுகாக்கும் ஆண் பிள்ளையாக […]

தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்

This entry is part 3 of 28 in the series 3 ஜூன் 2012

இன்று உலகில் தங்கத்தின் மதிப்பு உயர உயர, அதைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. தங்கக் குழுமங்கள் பல நாடுகள் உருப்பெற்று, தங்கச் சந்தையின் நிலவரத்தை உடனுக்குடன் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, கணினி மூலம், தங்க விலை நிலவரம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்;டுள்ளது. பல நாட்டு வர்த்தகர்கள் சேர்ந்து ஒரு பொதுக் குழுமத்தை 1987இல் உருவாக்கினர். அது தான் இயன் டெல்பெர்ரைத் தலைவராகக் கொண்ட உலகத் தங்கக் குழுமம். […]

தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்

This entry is part 1 of 33 in the series 27 மே 2012

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தங்கம் அதிக மதிப்புக்  கொண்ட உலோகமாகவே கருதப்பட்டு வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அதை ஆபரணங்கள் செய்யவே பயன்படுத்தி வருகின்றனர்.  பெண்ணின் திருமணத்தின் போது, தங்கமாகவும், ரொக்கமாகவும் வரதட்சிளையாகத் தருவது நம்மில் ஊறிப் போன பண்பாகவே ஆகிவிட்டது.  பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லாத காலத்தில், தங்கத்தையே சொத்தாக எண்ணி, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிற்கு வரும் போது நிறைய நகைகளைப் போட்டு வர வேண்டும் என்று விரும்பினர்.  தற்போதும் அந்நிலையில் எந்தவித மாற்றமும் […]

தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்

This entry is part 21 of 29 in the series 20 மே 2012

நாம் பொருட்களின் மதிப்பை உயர்த்திக் காட்ட, தங்க முலாம் பூசிய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம். அவற்றை வீட்டில் பல பகுதிகளிலும் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்போம். ஆனால் 2001 முதல் ஹாங்காங்கின் தங்கக் கழிப்பறை வசித்திரங்களில் ஒரு விசித்திரம். 380 இலட்சம் ஹாங்காங் டாலர்கள் செலவில் இதை அமைத்தவர் லம் சாய் விங் என்பவர். இரு அறைகள் முழுவதுமே 380 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, கழிப்பிடமும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கைக்கழுவும் இடமும், கழிப்பறை பிரஷ்களும், காகிதத் தாங்கும் கொக்கிகளும், […]

6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.

This entry is part 10 of 41 in the series 13 மே 2012

இந்தியாவில் முதன்முதலில் தானியங்கி பணப் பட்டுவாடா கருவியை அறிமுகப்படுத்திய போது, அதில் வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இருபத்தி நான்கு மணி நேர சேவை காரணமாகவும், அது தரக்கூடிய இன்னபிற வசதியின் காரணமாகவும் இன்று இந்தியா முழுவதும் எண்ணற்ற கருவிகள் மக்களுக்கு பேருதவி செய்து கொண்டிருக்கிறது. இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை பல நாடுகளிலும் பலரும் பல வழிகளில் பயன்படுத்த எண்ணம் கொண்டு, புதுப்புது உபயோகங்களைப் புகுத்தி வருகின்றனர். தானியங்கி விற்பனைக் […]

தங்கம் 5- விநோதங்கள்

This entry is part 5 of 40 in the series 6 மே 2012

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்? தோடு, வளையல், அட்டிகை, ஒட்டியாணம், மோதிரம், வங்கி, காப்பு இவையெல்லாம் தான் நாம் அறிந்தவை. ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை பல்வேறு விதமாக பயன்படுத்த முயல்கிறார்கள். அவை பெரும்பாலும் விளம்பரத்திற்கென்றாலும், செய்திருக்கும் பொருட்கள் விசித்திரமானவை. சென்ற ஆண்டு 2011 முடிவில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஜப்பானைச் சேர்ந்த தனாகா என்பவர், ஒரு தங்க கிறிஸ்துமஸ் மரத்தையே உருவாக்கியிருந்தார். அவர் டோக்கியோவின் முக்கிய வணிகச் சந்தையான கின்சாவில் சிறந்த நகைக்கடையை வைத்திருப்பவர். 12 […]

தங்கம் 4 – நகை கண்காட்சி

This entry is part 17 of 28 in the series 29 ஏப்ரல் 2012

உலகிலேயே மிகவும் விலை கொண்ட கற்கள் வைரக் கற்கள். ஒரு வைரக் கல்லே பல கோடி பெறுமானம் கொண்டது. அப்படிப்பட்ட வைரக் கற்களும் இன்னும் உலகிலே கிடைக்கும் பல கற்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? வைரங்கள் பதித்த நகைகள், மரகதம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து என்று பல தரப்பட்ட கற்கள் கொண்ட நகைகள், அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டு விற்கப்படும் கண்காட்சி தான் ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் ஹாங்காங்கில் நடக்கும் நகை மற்றும் கற்கள் […]

தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்

This entry is part 2 of 44 in the series 22 ஏப்ரல் 2012

1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? 2560 ரூபாய். 2012 இல் அதன் விலை என்ன தெரியுமா? 21500 ரூபாய் வரை வந்தது. சென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும். இப்போது வெள்ளைத் தங்கம் என்று சொல்லப்பட்ட மிக அதிக விலை கொண்ட பிளாடினத்தின் விலையை விடவும் தங்க விலை அதிகம். தற்போது பல்வேறு வங்கிகளும் தங்கக் கணக்கில் சேமிக்குமாறு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லி வருகிறார்கள். […]

தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்

This entry is part 13 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவோர் யார் தெரியுமா? இந்தியர்கள் தாம். 2010இல் ஒரு வருடத் தேவை 963 டன்னாக இருந்தது. உலகிலேயே தங்கத்தை அதிகம் உற்பத்திச் செய்வோர் யார் தெரியுமா? சீனர்கள். 2010இல் 340.88 டன்கள் உற்பத்தி. இரண்டாம் மூன்றாம் இடங்களில் அமெரிக்காவும், தென் ஆப்பிரிக்காவும் இருந்தன. 2010இன் மொத்த உற்பத்தி 4108 டன்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகள் தாம் தங்கத்தின் முக்கியஸ்தர்கள் என்றால் மிகையாகாது. அதனால் தங்கத்தில் விவரங்களைப் […]

தங்கம்

This entry is part 6 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  1 அறிமுகம் ஒரு உலோகம். அதிக விலை மதிப்புடையது. உலகெங்கிலும் மக்களால் விரும்பி வாங்கப்படுவது. தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது. மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது. இதுவே தங்கத்தைப் பற்றிய பொதுவான கருத்து. நானும் உங்களில் ஒருத்தி. வணிகவியலிலோ பொருளாதாரவியலிலோ பட்டம் பெற்றவள் இல்லை. எந்தவொரு தங்கம் பற்றிய முதலீடு மற்றும் வியாபார அறிவும் இது வரை இருந்தது கிடையாது. கடந்த பத்து வருடங்களில் தங்கத்தைப் பற்றிய விலையை மட்டும் தொடர்ந்து […]