மாதந்தோறும் அப்பா தவறாமல் பணம் அனுப்புவார். ஆனால் அந்த மாதம் பணம் வரவில்லை. கடிதம் வந்திருந்தது. அதைப் பிரித்துப் படித்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்! ” நான் உனக்கு பணம் அனுப்புவது உன் படிப்புச் செலவுக்காக. அருமைநாதனை உன்னுடன் வைத்துக்கொண்டு அவனுக்கும் செலவு செய்ய அல்ல. அவன் அங்கு உன்னிடம் இருக்கும்வரை உனக்கு இனி பணம் அனுப்பமாட்டேன். ” என்னும் வரிகள் கண்டு தலை சுற்றியது. அருமைநாதன் வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. […]
அருமைநாதன் தன்னுடைய சோகக் கதையைக் கூறலானான். காவலர்கள் கண்காணிப்பில் அவன் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டான். அவனுடைய கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் அவனால் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. காரைக்குடிக்கும் குன்றக்குடிக்கும் நடுவில் உள்ள பாதரக்குடி என்னும் கிராமம் அவனுடைய பூர்வீகம். அங்கு உறவினர்களுடன் தங்கவேண்டிய நிலை உண்டானது. ஒரு வருடத்தில் அவனுடைய அத்தை மகளை திருமணம் செய்து வைத்தனர். அதன்மூலம் அவனுடைய சிங்கப்பூர் திரும்பும் கனவு முற்று பெற்றது. ஒரு மகளும் ஒரு கைக்குழந்தை மகனும் உள்ளனர். […]
மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும். பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை இதயவியல் ( Cardiology ), நரம்பியல் ( Neurology ), சிறுநீரகவியல் ( Nephrology ) , தோலியல் ( Dermatology ) , கதிரியல் ( Radiology ) , கதிரியக்கப் பண்டுவம் ( Radio – Therapy ) […]
(நான் வரவேற்பு நிகழ்த்துகிறேன். அமர்ந்திருப்பவர்கள்: இடமிருந்து : நாவலர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி, டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் ஜோப் .) அறுவைச் சிகிச்சை பயின்றபோது அதன் கிளைப் பிரிவாக எலும்பு நன்னியல் ( Orthopaedics ) வகுப்புக்கும் செல்வோம். இதை நடத்தியவர் டாக்டர் செல்வபாண்டியன்.தமிழர். இவர் அப் பிரிவின் தலைமை மருத்துவர். எலும்பு நன்னியலில் எலும்புகளில் உண்டாகும் நோய்கள், விபத்துகளில் உண்டாகும் எலும்பு முறிவு ஆகியவற்றைப் பயில்வோம். அதோடு தொழுநோய் தொடர்புடைய எலும்புகள் […]
மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக சுகாதார நிலையத்தில் இதன் தலைமையகம் இருந்தது. அந்த சுகாதார நிலையம் ஒரு கிராம மருத்துவமனைபோல் இயங்கியது. அங்குதான் நாங்கள் சமூக சுகாதாரம் பயின்றோம். சற்று தொலைவிலிருந்த கல்லூரி வகுப்பறையில்தான் வகுப்புகள் நடந்தன. அவற்றை நடத்தியவர் டாக்டர் வீ.பெஞ்சமின்.மலையாளிதான். மிகவும் அன்பானவர். எல்லாரிடமும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 136. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் மருத்துவக் கல்வியில் அதிகமாக நாட்டஞ் செலுத்தச் ( Interesting ) செய்யும் ஒரு பாடம் உள்ளது. அது துப்பறியும் நாவல் படிக்குபோது உண்டாகும் ஆர்வத்தைக்கூட உண்டுபண்ண வல்லது. அதை நான்காம் ஆண்டில் ஒரு வருடம் பயிலவேண்டும். அதுதான் சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியல் இயலும் ( Forensic Medicine and Toxicology ). நோய்கள், அறிகுறிகள், பரிசோதனைகள். கிருமிகள், மருந்துகள் என தொடர்ந்து பயின்றுகொண்டிருந்த எங்களுக்கு சிறிது இடைவெளி […]
(ஜோசப் லிஸ்டர்) மருத்துவக் கலவியின் நான்காம் வருடத்தில் ” மைக்ரோபையோலாஜி ” ( Microbiology ) அல்லது நுண்ணுயிரி இயல் பயிலவேண்டும். மைக்ரோபையோலாஜி என்பது கிரேக்க சொல். மைக்ரோ என்பது நுண். பையாஸ் என்பது உயிர். நுண் உயிர்களைப் பற்றிப் பயில்வது நுண்ணுயிரி இயல் என்று அழைக்கப்படுகிறது. நுண்ணுயிரிகள் கண்களுக்குத் தெரியாத அளவு சிறியவை. இவற்றை நுண்ணோக்கி வழியாகவே காணலாம். இவை ஒரு செல், பல செல்கள், அல்லது செல் இல்லாத உயிரிகள். நுண்ணுயிரி இயலில் நச்சுயிர் […]
தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 135. மருந்தியல் நான்காம் வருடத்தில் இன்னொரு பாடம் மருந்தியல் ( Pharmacology ). மருத்துவப் படிப்பில் இது மிகவும் முக்கியப் பிரிவாகும். நோயின் தன்மையைக் கண்டறிந்தால் மட்டும் போதாது. அதைக் குணப்படுத்துவது இன்றியமையாதது. அதற்கு சரியான மருந்துகள் தந்தாகவேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எவ்வளவுதான் சிறப்பாக ஒரு மருத்துவர் நோயின் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் வல்லுனராக இருந்தாலும், அதை அவர் சரியான மருந்துகள் மூலம் குணமாக்கினால்தான் […]
நான்காம் வருடத்தில் கண்ணியல் ( Ophthalmology ) பயிலவேண்டும். இது ஒரு வருட பாடம். இதை மேரி டேபர் ஷெல் கண் மருத்துவமனையில் ( Mary Taber Schell Eye Hospital ) பயின்றோம். இது வேலூர் ஊரீஸ் கலைக் கல்லூரியின் பின்புறம் உள்ளது. இந்த மருத்துவமனைதான் டாக்டர் ஐடா ஸ்கடர் தமது இளம் வயதில் உருவாக்கிய முதல் மருத்துவமனை. இது அவர் வாழ்ந்த எளிய வீட்டில் உருவாகியது. ஒரு படுக்கையடன் துவங்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் […]
(சர் லட்சுமணசாமி முதலியார்) மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய பாடம் மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும் ( Obstetrics and Gynaecology ). இதை சுருக்கமாக O & G என்போம். இதையும் இரண்டு வருடங்கள் படித்தாகவேண்டும். இதுவும் பொது மருத்துவம், அறுவை மருத்துவம் போன்று மூன்று பிரிவுகளில் இயங்கியது. எனக்கு மூன்றாம் பிரிவு ( ஓ ஜி 3 ) கிடைத்தது. […]