ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும்போதே அன்று மாலையில் தூண்டில் போடச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.பசியாறினேன். காலையிலேயே தோசைக்கு ருசியான கோழிக்குழம்பு. உண்ட களைப்பில் நன்றாக தூக்கம் சுழற்றியது. வேப்ப மரத்து காற்றில் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டேன். மதிய உணவின்போதுதான் அம்மா எழுப்பினார். அவ்வளவு தூக்கம். எந்தக் கவலையும் இல்லாத நிம்மதியான தூக்கம். பிறந்த மண்ணில் படுத்தாலே தனிச் சுகம்தான். காலையிலிருந்து கோகிலத்தைக் காணவில்லை. ஒருவேளை வயல்வெளிக்கு வேலை செய்ய போயிருப்பாள். அவள்தான் விடியலிலேயே என்னிடம் […]
நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி, இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம். கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 சதவிகிதம் […]
பெண்களுக்கு அடி வயிறு வலித்தால் பல கோணங்களில் அதை ஆராய வேண்டியுள்ளது. முதலில் வலியின் தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். வலி எத்தனை நாட்களாக உள்ளது, எந்தப் பகுதியில் அதிகம் உள்ளது, எப்போது வருகிறது, என்ன செய்தால் கூடுகிறது, எப்போது குறைகிறது, வயிற்றுப்போக்கு உள்ளதா, வாந்தி உள்ளதா, மலச்சிக்கல் உள்ளதா, மாதவிலக்கு சரியாக வருகிறதா, பசி எடுக்கிறதா,மணமானதா , குழந்தைகள் உள்ளதா, வேறு நோய்கள் உள்ளதா என்பவைபற்றி மருத்துவர் கேட்டு தெரிந்துகொள்வார். பின்பு வயிற்றைப் […]
அற்புதநாதர் ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குப் புத்துயிர் பிறந்தது. அது கிராமத்தின் சிற்றாலயமாக இருந்தாலும் அங்கே பல அற்புதங்கள் நடந்துள்ளது எனக்கு ஞாபகம் வருவதுண்டு. அம்மாவுக்கு நல்ல பாம்பு கடித்து விஷம் ஏறி நினைவிழந்தபோது சிறுவனான அண்ணன் அங்கு மெழுவர்த்திகளுடன் ஓடி ஜெபம் செய்தபோது ஊரே வியக்கும்வண்ணம் அற்புதமாக உயிர் பிழைத்துள்ளார்! ? இஸ்ரவேல் உபதேசியார் ஜெபம் செய்து எண்ணெய் தருவார். அதைப் பயன்படுத்திய பல நோயாளிகள் குணமாகி, அந்த செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்குப் பரவியபின்பு கூட்டம் […]
விடுமுறை நாட்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. தரங்கம்பாடியின் பாடும் அலைகளின் கீதம் நாட்களை ரம்மியமாகியது. அண்ணியின் ருசியான சமையல் அங்கேயே இருந்துவிடலாம் போன்றிருந்தது. அன்றாடம் வகைவகையான மீன்கள்,இறால், நண்டு, ஊளான் குருவி, கோழி என்று விதவிதமாக சமைத்து தந்தார். அவை அனைத்துமே சுவையோ சுவை. அவருடைய விருந்தோம்பல் என்னை திக்குமுக்காட வைத்தது. பத்து வருடங்கள் சிங்கப்பூரில் அப்பாவிடம் தனிமையில் பட்ட பாடு, பின் சென்னையில் ஒரு வருடம் விடுதி வாழ்க்கை என்று ஒரு குடும்பத்தின் வாசம் இல்லாமலேயே […]
தலை சுற்றலை ” வெர்ட்டைகோ ” என்று ஆங்கில மருத்துவம் கூறும். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஒரு செய்தி அல்லது சம்பவம் குழப்பமாக இருந்தாலும் அதையும் ” தலையே சுற்றுகிறது ” என்றும் கூறுவோம். அது மருத்துவம் தொடர்பு இல்லாதது. அதுபோன்று நம் அனைவருக்கும் எப்போதாவது தலை சுற்றல் உண்டாகியிருக்கலாம்.மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் […]
பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு […]
இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள். குறைவான உடல் உழைப்பும் ( உடற்பயிற்சியின்மை ), உப்பு அதிகமுள்ள பதனிடப்பட்ட உணவுவகைகளையும், அதிகம் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் பருகுதல் முக்கிய காரணங்களாகும். இரத்த ஓட்டத்துக்கு முக்கியமானது இருதயம். அது சுருங்கும்போது இரத்தம் வெளியேறி […]
85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை. சரித்திரப் புகழ்மிக்க பண்டைய தமிழகத்தின் துறைமுகப் பட்டினங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது இன்பமானது. நாம் என்னதான் சரித்திரத்தை நூல்களில் படித்திருந்தாலும்,அந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஒருவித எழுச்சி மனதில் தோன்றுவது இயல்பு. நான் பூம்புகார் கடற்கரையில் நின்றபோது என் கண்முன்னே சங்க காலத்தில் அங்கு இருந்த காவிரிப்பூம்பட்டினம் என் கண் முன்னே தோன்றியது. அது கடலுக்குள் மூழ்கி அழிந்து போயிருந்தாலும், இளங்கோ […]
டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு வலி என்றாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அது நல்லதுதான்.அனால் வேறு உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் நெஞ்சு வலி உண்டாகலாம். இத்தகைய உறுப்புகளில் உண்டாகும் பிரச்னைகளை வைத்து நெஞ்சு வலியை […]