தொலைக்காட்சிகள் இல்லாத காலம் அது. வானொலிகளில் பாடல்கள் கேட்கலாம். நான் வானொலி கொண்டுவரவில்லை. பத்திரிகை வாங்கினால்தான் செய்திகள் தெரியும். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. திரு. பக்தவத்சலம் தமிழக முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி எதிர் கட்சித் தலைவர். அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினர். எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திகள் அதிகம் பத்திரிகைகளில் வெளிவராது. விடுதலை,முரசொலி, தென்றல், மன்றம் போன்ற இயக்க பத்திரிகைகள்தான் கழகத்தின் செய்திகளை வெளியிட்டன. ஆனால் தாம்பரம் டவுனில் உள்ள கடைகள் […]
நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க நீரிழிவுக் கழகம், ” நீரிழிவு உள்ளது மாரடைப்பு உண்டான ஒருவர் அடுத்த மாரடைப்புக்குக் காத்திருப்பதற்கு சமமானது ” என்று எச்சரிக்கிறது.ஆகவே நீரிழிவு நோயாளிகள் இருதயங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது. மாரடைப்பு வராமல் இருப்பதற்கு […]
டாக்டர் ஜி. ஜான்சன் தமிழ் வகுப்புக்குள் பெருமிதத்துடன் நுழைந்தேன். மூன்று விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்கள். பேராசிரியர் இன்னும் வரவில்லை.நாங்கள் கைகள் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். இனி ஒரு வருடம் தமிழ் வகுப்பில் ஒன்றாகப் பயில்வோம். பேராசிரியர் நுழைந்ததும் நாங்கள் எழுந்து நின்று வணக்கம் கூறி அவரை வரவேற்றோம்.அவர் முதிர் வயதுடையவர். பெயர் ஆளாளசுந்தரம். டையும் கோட்டும் அணிந்திருந்தார். எங்களைப் பார்த்து […]
டாக்டர் ஜி. ஜான்சன் நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். சாதியை நம்பி வாழ்பவர்கள் ஒரே சாதியில்தான் பெண் எடுப்பார்கள்.இதனால் இந்த நோய் போன்று இன்னும் பல நோய்கள் சில குடும்பங்களில் தொற்று நோய்போல் தொடர்ந்து வருகின்றது. இரண்டாவதாக நமது உணவு பழக்க வழக்கங்கள். […]
கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25. செயின்ட் தாமஸ் என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர். அவருடன் வாழ்ந்தவர். அவர்தான் இந்தியாவுக்கு கிறிஸ்துவ மதத்தைக் கொண்டுவந்தவர். செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று அவர் பெயரில் ஒரு பகுதி சென்னையில் உள்ளது. சாந்தோம் […]
அன்று இரவு நான் திண்ணையில் கோரைப் பாயில் படுத்து உறங்கினேன். வாசலில் நின்ற வெப்ப மரத்து இலைகளின் சலசலப்பில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. நன்றாக தூங்கி எழுந்தேன். காலையிலே பால்பிள்ளை கையில் இரண்டு தூண்டிகளுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தான். ” அண்ணே. வயல்வெளிக்குப் போய்விட்டு அப்படியே ராஜன் வாய்க்காலில் கொஞ்சம் மீன் பிடித்து வருவோமா? ” என்று கேட்டான். காலைக் கடனை முடிக்க […]
டாக்டர் ஜி. ஜான்சன் பால்ய நண்பன் பால்பிள்ளை என் அளவுக்கு வளர்ந்திருந்தான். அவன் என் பக்கத்துக்கு வீடுதான். எதிர்வீட்டு மண்ணாங்கட்டி என்ற கலியபெருமாள் திரும்பி வரவேயில்லையாம். நான் சிறு வயதில் சிங்கப்பூர் சென்றபோது வீட்டை விட்டு ஓடிப்போனவன். அவனுடைய அப்பாவைப்போலேவே அவனும் காணாமல் போய் விட்டான். அவனுடைய தாயார் கண்ணமாவும் இறந்து விட்டார். பால்பிள்ளை என்னுடன்தான் மூன்றாம் வகுப்ப வரைப் படித்தான்.அதன்பின்பு ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் படிக்க முடியவில்லை.வசதிக் குறைவால் சிதம்பரம் சென்று கல்வியைத் தொடர முடியவில்லை. […]
42. பிறந்த மண்ணில் பரவசம் பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது. நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார். ” சிதம்பரமா? ” என்றார். ” ஆம் என்று கூறிய நான் பெட்டியை வெளியே இழுத்து இறங்கத் தயாரானேன். அண்ணனும் இறங்கிவிட்டார். நேராக தேநீர்க் கடைக்குச் சென்று சுடச் சுட சுவையான தேநீர் பருகினோம். அங்கு வீசிய காலைக் குளிர் காற்றுக்கு அந்தச் சுடு தேநீர் இதமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்துச் […]
ரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன. படகுகளிலிருந்து சில போர்டர்கள் கப்பலுக்குள் புகுந்தனர். அவர்கள் எங்களுடைய சாமான்களைத் தூக்கிக்கொண்டு பின்தொடரச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ” நாம் புற மலைக்குப் போகிறோம். ” என்று பக்கத்தில் இருந்த பெரியவர் […]
அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக இருந்தது தனித்தனியாக கழிவறைகள் இருந்தன. ஆனால் குளிக்கும் இடம் பொதுவானது. ஒரு பெரிய தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது.அதிலிருந்து குவளையால் மொண்டு ஊற்றித்தான் குளிக்கவேண்டும். ஒரே நேரத்தில் பலர் குளிக்கலாம். அங்கு ஒரு வினோதம் கண்டேன். நான் குளித்தபோது ஐந்து பேர்கள் வேறு விதமாக இருந்தனர். நாம் நல்ல சிவப்பு என்போமே அந்த வெள்ளை நிறத்தில் இருந்தனர். ஆஜானுபாகுவாக உயரமாகவும் காணப்பட்டனர். மீசை தாடியுடன், பெண்களுக்கு உள்ளதுபோல் […]