This entry is part 6 of 13 in the series 14 நவம்பர் 2021
இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது. சாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த நான்கு மாதங்களிலும் யாருடனும் நட்பு ஏற்படவில்லை. ஆனால் மோகன் போன்ற சிலபேருடன் அறிமுகம் கூட நீடிக்காது என்று […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சரியாய் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாவனாவுக்கு விழிப்பு வந்தது. தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போவது போன்ற கனவு. அதற்குள் அது கனவு இல்லை என்றும், நிஜம்தான் என்றும் புரிந்துவிட்டது. புரிவதற்கு முன்பு அவள் சமையல் அறையில் இருந்தாள் அவள். தரையில் பொத்தென்று போட்டார்கள். கத்தி கூச்சல் போடாமல் அவள் வாயைப் பொத்தினார்கள். வசந்தி கால்களைப் பிடித்துக்கொண்டாள். தலைமாட்டில் கணவன் இருந்தான். மண்ணெண்ணெய் வாசனை […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சாஹிதி. இனி இரண்டு மாதம் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கும் போதே திருப்தியாய் இருந்தது. தாய் பூஜையில் இருந்தாள். அதேதோ நாற்பது நாள் நோன்பு. தினமும் உபவாசம். இரவில் மட்டும் பழமும் பாலும் அருந்தி வந்தாள். அந்த நோன்பு யார் பண்ணச் சொன்னார்கள் என்று சாஹிதிக்குத் தெரியாது. ஆனால் தாயை அந்த நிலையில் […]
தெலுங்கில் T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “நீங்க என்ன எடுத்துக்கறீங்க?” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா? நீங்க அப்படி ஒன்றும் பருமன் இல்லை என்று வைத்துகொள்ளுங்கள்.” “எனக்கு அந்த பயம் எதுவும் இல்லை. போன மாதம்தான் எனக்கு முப்பது வயது முடிந்து […]