தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா முனை முழுங்கிக் கிடக்க என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள் கவி ந.நாகராஜனின் இந்த வரிகளில் உண்மையில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள் அவரிடமே வேடிக்கை காட்டுகின்றன,தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த வாசகன் மிகுந்த நெருக்கத்தோடு அக்கவிதைகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்கிறான். நீண்டதொரு மக்கள் சார்பு இலக்கியப்பாரம்பர்யத்திலிருந்தும்,கலை இலக்கியப் பெருமனற் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிய பேராசான் பிறந்த […]
குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்திக் தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது. அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழும் என்னை கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் […]
சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் சபுறாளிகள் சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் சாதனங்களின் ஒன்று கேசட்டுகள். தகவல் அறிவுப்பரிமாற்றத்திற்கு புரதான காலங்களில் எழுத்தாணிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள்,மரப்பட்டை,தோல்களில் எழுதுதல் என்பதான வடிவங்கள் பயன்பட்டன. நவீன தொழில்நுட்பம் உருவாகிய போது அச்சு ஊடகம் முதன்மை பெற்றது. ஓலைச்சுவடி கருவூலங்கள் அச்சுவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதன்பின்னர் உருவான எலக்ட்ரானிக் மீடியாகாலத்தில் இந்த கேசட்டுகள் எனும் ஒலிநாடாக்கள் உருவாகின. தற்போது ஒலியும் ஒளியும் கலந்த […]
பக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண்டேனே மற்றும் ந ாயனே நாயனே என வரும் பாடல்களும் ,நிராமயக் கண்ணிப்பாடல்களும் உள்ளடங்கும். ஏகப்பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற காகம் அதுவானேன் கண்ணே ரஹ்மானே.. ……. ஊனெடுத்த நாள்முதலாய் உபயோகமற்ற நான் கானில் நிலவானேன் கண்ணே ரஹ்மானே… …… வேட்டைப் பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக் காட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே.. ……… […]
ஹெச்.ஜி.ரசூல் ஆந்திரமாநிலம் சிறீனிவாசகுப்பத்தில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகம் சார்பில் திராவிட மொழிகளின் இருநாள் கவிச்சங்கமம் 19-10-2012 மற்றும் 20-10-2012 ஆகிய நாட்களின் நடைபெற்றது.ஒரு மாறுபட்ட அனுபவமாக இந் நிகழ்வு அமந்திருந்தது. தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு மொழிக்கவிஞர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து நானும் அழைக்கப்பட்டிருந்தேன். மூத்தகவிஞர்சுகுமாரன்,யுவன்சந்திரசேகர் ,திலகபாமா ஆகியோரும் தமிழ்கவிஞர்கள் சார்பில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த இசைக்கருக்கல் மட்டுமே விடுபடல். இதுபோல் கன்னடத்திலிருந்து அழைக்கப்பட்ட ஆரிப்ராஜாவும் பங்கேற்கவில்லை. முதல்நாள் துவக்கவிழாவில் விசி […]
இந்திரன் மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் சில கவிதைகளும் இந்தியப் பழங்குடிகளின் வாழ்தலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தையும் முரணையும் பேசுகின்றன. ஜார்கண்ட் பகுதியில் வாய்மொழி மரபாக பேசப்படும் கவிதை ஒன்று யூகலிப்டஸ் மரத்திற்கும் உயிரினங்களுக்குமான உறவின்மையைக் மிக நுட்பமாக சித்திரப்படுத்திக் காட்டுகிறது. யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான் -ஆனால் ஆடுகள் மேயும் புற்களுக்கான நிலத்தடி நீரை குடித்துவிடுகின்றன. குளத்துக்குப் பக்கத்தில் பாறையில் கூட அவை செழித்து வளர்கின்றன -ஆனால் […]
முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புகளில் பல கவித்துவக்குறியீடுகளாகவும், யதார்த்த மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் திகழ்கிற இடி (அர்ரஃது), அந்த ஒளி (அந்நூர்), மலை (அத்தூர்), புழுதிக்காற்று (அத்தாரியாத்), நட்சத்திரம் (அந்நஜ்மு), சந்திரன் (அல்கமர்), கிரகங்கள்(அல்புரூஜ்), விடிவெள்ளி (அத்தாரிக்), வைகறை(அல்பஜ்ர்), இரவு(அல்லைல்), முற்பகல் (அல்லுஹா) காலைப்பொழுது(அல்பலக்) என்பதாக இவை அமைந்துள்ளன. உயிரினங்களின் அடையாளங்களைக் கொண்ட பெயர்கள் பிறிதொருவகை. பசுமாடு(அல்பகறா), கால்நடைகள்(அல்அன்ஆம்), தேனீ(அந்நஹல்), எறும்பு(அந்நமல்), சிலந்தி(அல் அன்கபூத்), யானை (அல்பீல்) என […]
கூடுகளில் அடைபட்ட புறாக்கள் கல்லெறிந்து தீ எரித்து இரவினில் கலைத்து விடுவதற்கல்ல விடிகாலையில் தீனிகொத்தும் அழகைரசித்து குழந்தைகளோடு தத்தித்தத்தி நடந்தாடும் ஒரு கூட்டம் புறாக்கள் முன்பொரு நாள் நேர்ச்சைக்கடனுக்காய் வழங்கிய குஞ்சுப்புறாக்களும் இவற்றில் காணக்கூடும் பறக்கவும் நடக்கவும் தெரிந்த புறாக்கள் மினராக்களில் உட்கார்ந்து நடுங்குகிறது.
ஹெச்.ஜி.ரசூல் 1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக. அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) […]
ஹெச்.ஜி. ரசூல் லட்சுமணனின் பழங்குடிகவிதை எழுத்தை திறந்து பார்த்தால் சகுனாகுருவியின் கத்தல் ஒலி கேட்கிறது. இது கெட்ட சகுனத்தை முன்னறிவிக்கும் குரலாக புலப்படுகிறது. செம்போத்தும் குறுக்கே பறந்துகெட்ட சகுனத்தை அறிவிக்கிறது. பிறிதொரு இடத்தில் கேட்கும் பெருமாட்டி குருவியின் குரல் அசைவு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்பதற்கான ஒலிக்குறிப்பாகிறது. தனது வாலால் மண்ணை தட்டிக் கொண்டே போகும் குணமுடையது சுள்ளாம்பூக்கை குருவி. உலகம் அழியும் போது மனிதர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறிந்து வரும்படி கடவுளால் […]