1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என் மூட்டை முடிச்செல்லாம் வச்சது. அந்தத் திட்டி வாசல் வழியாக தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் என்று ஒரே ஓட்டமாக ஓடின போது காலில் இடறிய மூட்டைகளைக் கையில் தூக்கிக் கொண்டேன். ஆயுசு முழுக்க சம்பாதிச்சதும், விற்று வரச் சொல்லி துரை கொடுத்ததும், உடுதுணியும் […]
1927 மார்ச் 6 அக்ஷய மாசி 22 ஞாயிற்றுக்கிழமை காரசாரமான வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும், ஆனையடி அப்பளமுமாக ராஜ போஜனம் போல ஒரு சாப்பாடு. இருபது சொச்சம் வருஷத்துக்கு முன்பு இந்த பாக்கியம் கிடைத்து அப்புறம் சொப்பனத்தில் மட்டும் கிடைக்கிறதாக மாறிப் போன சுகம் திரும்ப சித்தித்திருக்கிறது. அதை அனுபவிக்க விடாமல், போக வேளையில் வாசல் கதவைத் தட்டி மூட்டு வலித் தைலம் கேட்கிற அண்டை வீட்டுக்காரன் போல் இந்த மனுஷர்கள் […]
1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ, தெருவைப் பெருக்கி, அஞ்சு லாந்தரில் எண்ணெய் […]
1927 மார்ச் 2 அக்ஷய மாசி 18 புதன் மதராஸ். மதராஸ். மதராஸ். குழாய் மூலம் வெகு தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த மாலுமிகளில் ஒருத்தன் சொன்னான். கூட நின்ற கூட்டாளிகள் நாலைந்து பேர் உரக்கக் கைதட்டினார்கள். அந்தக் கைதட்டல் கீழே எஞ்சின் ரூமுக்குக் கடக்க, அங்கே இருந்து அவசரமாக வெளியே வந்து இன்னும் நாலு கப்பலோட்டிகள் ஓ என்று ஹூங்காரம் செய்து வானத்தைப் பார்த்து ரெண்டு கையையும் பரக்க நீட்டிக் கும்பிட்டார்கள். குசினியில் […]
1927 ஃபெப்ருவரி 28 அக்ஷய மாசி 16 திங்கள் பிராமணோத்தமரே என்னை மன்னித்தேன் என்று சொல்லும். முதலில் அதைச் சொல்லாவிட்டால் நான் உம்மோடு ஒரு போதும் பேசப் போவதில்லை. நான் காலில் விழாத குறையாகச் சொன்னேன். மலையாளத்துப் பிராமணன் மூச்சை உறிஞ்சி சமுத்திரத்து உப்புக் காற்று வாசனையை பரிமள சுகந்தமாக அனுபவித்தபடி என்னை தீர்க்கமாகப் பார்த்தான். ஆதி நாட்களில் அதாவது நான் மதராஸ் பட்டிணத்தில் காராகிரகம் புகுந்த காலத்தில் இவன் பார்வை பட்டுத்தான் இன்றைக்கு இப்படி கப்பலில் […]
1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு பிரம்மாண்டமான பறவை சாவகாசமாக ஜலப் பிரவாகத்தில் மிதந்து கொண்டு அசைந்து ஆடுகிறதுபோல் அந்தக் கப்பல் நின்றது. புத்தம் புதுசு. கம்பமும், படியும், கொடியும், உருளைக் கம்பிகளும், இரும்புச் சங்கிலிகளும் பளபள என்று புதுக்கருக்கோடு சூரிய வெளிச்சத்தில் ஜ்வலித்தன. இவ்வளவு நீளமும் அகலமும் விஸ்தீரணமும் கொண்ட கப்பலை நான் என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை. தோணியிலோ கட்டு மரத்திலோ ஏறி நின்றபடிக்கு இந்த சுந்தர ஸ்வரூபமான சமுத்திர வாகனத்தை நாலு […]
1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு நான். நான் தான். மகாலிங்கய்யன். வரதராஜ ரெட்டி. எவனுமில்லை. ஸ்திரி சம்போகத்திலும், ஜெயிலிலும், பிச்சை எடுப்பதிலும், தெய்வம் தொடங்கி நான் தெண்டனிட வேண்டிய, பிரியம் காட்ட விதிக்கப்பட்ட, இக்கிணியூண்டாவது எனக்கு வேண்டப்பட்டவர்களாக நான் நினைக்கிற மனுஷர்கள் வரை அநேகம் பேருக்குக் கடுதாசி எழுதியும் ஒரு ஜீவிய காலம் முழுசையும் போக்கினவன். இன்னும் இது பாக்கி இருக்கா, எப்போ எப்படி முடியும் என்பதொண்ணும் தெரியாது. தெரிஞ்சு என்ன ஆகப் […]
1927 January 30 அக்ஷய வருஷம் மார்கழி 17 ஞாயிற்றுக்கிழமை அறையில் மொத்தம் நாலு பேர் இருந்தார்கள். நீள்சதுரமாக ஒரு மரமேஜை. நிறம் மங்கிய ஆனால் அழுக்கோ கறையோ இல்லாத நீலத் துணி விரித்து வைத்த அந்த மேஜை மேல் நாலைந்து பேர் வசதியாகச் சாப்பிடத் தகுந்த விதத்தில் ரொட்டித் துண்டுகள், ஆப்பிள் பழம், வார்த்து அடுக்கி வைத்த கல் தோசைகள், விழுதாக இஞ்சியும் கொத்தமல்லியும் சேர்த்து நைய்ய அரைத்த துவையல், ஆரஞ்சுப் பழச் சாறு, ஓரமாக […]
1916 டிசம்பர் 31 நள வருஷம் மார்கழி 17 ஞாயிறு பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஐயர் மற்றும் அவருடைய பாரியாள் மாதுஸ்ரீ கோமதி அம்மாள் இவர்களின் மேலான பார்வைக்கு வேண்டி, க்ஷெயார்களின் புத்ரன் மகாலிங்கய்யன் எழுதுகிற லிகிதம் இது. லண்டன் மகாபட்டணத்தில் ஏற்படுத்திய பெண்டல்வில் ஜெயிலில் இருந்து எழுதுகிறேன். என்னைப் பெற்றவளே, எனக்கு எல்லாமுமான தகப்பனாரே. இந்தப் பரிதாபமான சிசு சகல அசுத்தத்தோடும், உடம்பு நோக்காட்டோடும், மனசு பேதலித்தும் உங்கள் ரெண்டு பேரையும் ஆயிரம் தடவை தண்டனிட்டு கிழக்கு […]
1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை குட்மார்னிங் மேடம். தொப்பியைக் கழற்றிக் கையில் மரியாதையாகப் பிடித்துக் கொண்டு குனிந்து கும்பிடு போட்டான் ஜேம்ஸ். நானும் அந்த துரைசானிக்கு அபிவாதயே சொல்லாத குறையாக எண்சாணும் ஒரு சாணாகக் குறுக ஒரு அவசர நமஸ்காரம் செய்தேன். திருவாளர் மக்கென்ஸி உன் மேல் வெகு கோபமாக இருக்கிறார் என்று தெரியுமா? ஜேம்ஸை பாதி சிரிப்பும் பாதி கண்டிப்புமாக விசாரித்தாள் துரைசானி. அவள் என்னை யாரென்று லட்சியம் கூடச் […]