author

ஒரு தாயின் கலக்கம்

This entry is part 12 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஜாசின் ஏ.தேவராஜன் ” அம்மா!” என்னவோ சொல்ல வந்த மேனகா சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். “என்னது? என்னவோ சொல்ல வந்து,பட்டுனு நிறுத்திட்டே? விசயத்தச் சொல்லு…” தங்கம்மா அன்பு ததும்பக் கேட்டாள். ” ஒன்னுல்லம்மா… நீங்க தனியா சிரமப்படுறீங்களே…நான் கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன்.போனா…உங்களுக்கும் ஒத்தாசையா இருக்குமே…!” சொன்னால் தன் அம்மா ஒத்துகொள்ள மாட்டாளென்று மேனகாவுக்குத் தெரியும்.இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. தங்கம்மா அவள் முகத்தைப் பார்த்தாள்.`ஏம்மா…இப்படியொரு முடிவுக்கு வந்தே?’என்ற கேள்வி அங்கே தொக்கி நின்றாலும்,அவள் […]

குற்றம்

This entry is part 16 of 37 in the series 22 ஜூலை 2012

ஜாசின் ஏ.தேவராஜன் செக்கன்டரி ஸ்கூலுக்குப் போய்ட்டாலே நாங்க கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்ட்டோம்னு பண்றதெல்லாம் பண்ணிட்டு ஆளாளுக்கு எங்களைப் புடிச்சி நொங்குறாங்க. உண்மைதான் கெட்டுத்தான் போறோம். நாங்க சின்னப் பசங்கதான். ஆனா, மூக்குக்குக்கீழ அரும்பு மீசை கறுங்கோடு கிழிச்ச மாரி மொளைக்குதே. அங்க மட்டுமா மொளைக்குதுங்கிறீங்க ?அது மொளைச்சா என்னன்னா பண்ணும்… யேன் பண்ணுது… எதுக்குப் பண்ணுது தெரியுங்களா? இதெத் தெரியாம சும்மா பேசக்கூடாது. இது மொத குத்தம். தொண்டைக்குழிக்குப் பக்கத்தில் முண்டுபோல் கண்டம் முட்டிக்கிட்டு நிக்கிது. நாங்களே கண்ணாடியில […]

பொன்னாத்தா அம்படவேயில்ல…

This entry is part 20 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை ஜாசின் ஏ.தேவராஜன் 12.3.1970 மத்தியானம் ரெண்டு மணிக்கப்புறம் காலம்பரவே எஸ்டேட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குக் களம்பிக்கிட்டிருத்திச்சிங்க. ஸ்கூலுன்னா கெரவல் கல்லு சடக்குல கித்தா காட்டு வளியா நாலு மைலு தாண்டிதான் பக்கத்து எஸ்டேட்டுக்குப் போணும் வரணும்.அது பெரிய எஸ்டேட்டு.எடையில அசாப்புக் கொட்டா, அதான் குப்ப எரிக்கிற கூண்டு. கூண்டுக்கு மேலா போங்காவா பெரிய ஓட்ட. அதுக்குள்ளாறதான் குப்பைய கொட்டுவாரு பரமேசு தாத்தா. அவரு ஒரு வயசான தனி ஆளு. அவருக்குன்னு எளுதி வச்ச மாரி இந்தியாவிலர்ந்து நாப்பது […]

சுப்புமணியும் சீஜிலும்

This entry is part 40 of 41 in the series 8 ஜூலை 2012

  ஜாசின் ஏ.தேவராஜன்     (குறிப்பு: இக்கதை மலேசியத் தமிழ் இளந்தையர்களின் விளிம்புநிலை கூட்டத்தாரின் பேச்சு மொழியில் சொல்லப்பட்டது. தளச்சூழலில் தமிழும் மலாயும் கலந்து பேசுகின்ற நிலை வெகுநாட்கள் புழக்கத்தில் உள்ளன. பின்வரும் சொற்கள் வாசகர்களின் புரிதலுக்காக வழங்குகிறேன். சீஜில்- சான்றிதழ், பெர்ஹிம்புனான் – பள்ளியில் மாணவர் சபை கூடல், ஹரி அனுகெராஹ் செமெர்லாங்- விருதளிப்பு நாள், துங்கு டுலு- முதலில் காத்திரு, ஜபாத்தான் – (கல்வி) இலாகா, எஸ்.பி.எம் – 17/18 வயதில் அமரும் […]

உள்ளோசை கேட்காத பேரழுகை

This entry is part 16 of 32 in the series 1 ஜூலை 2012

(ஜாசின் ஏ.தேவராஜன்) ஆக பின் நடந்துகொண்டிருக்கிற சம்பவம் 1 இனி அமீராவைப் பள்ளியில் பார்க்கவே முடியாது.அவள் கோலாலம்பூருக்கு மாறிப் போய்விட்டதாக உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். கோலாலம்பூரில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தூரத்து உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருக்கிறாளாம். எல்லாம் அபுவின் ஏற்பாடு! அந்த ஏற்பாட்டுக்குள் இன்னும் சில ஏற்பாடுகள் அபுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள் அவை! முன் நடந்த சம்பவம் 1 அமீராவுக்கு நிதானம் தேவைப்பட்டது இப்போது. வகுப்பறையில் அவள் பழையபடி இல்லை. வோங் வழக்கம்போல் […]

நான் செத்தான்

This entry is part 12 of 28 in the series 3 ஜூன் 2012

  எப்போதும் இல்லாத முன்னிரவு… முடிவெடுப்பதுதான் இப்பொழுது முக்கியம் எனப்பட்டது எனக்கு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்காக எனக்கு நானே கூனிக்குறுகும் தருணம். எனக்குள்ளே திமிர்ந்த ஏகப்பட்ட கேள்விகள் வல்லாயுதங்களோடு வரிசைபிடித்து நின்றன. இருட்டுக் குகையிலிருந்து வெளிப்படும் பறவை வாயிலிலிருந்து உலகைத் தரிசிப்பதற்கு முன், அந்தத் திருப்பத்தில் புதிய உலகைக் குறித்து ஏற்கெனவே ஒரு கனவு கண்டிருக்குமே, அது போலத்தான். இப்பொழுது ஊரடங்கிய அர்த்த இராத்திரியில்… யாவும் வெறிச்சோடிக் கிடக்கின்ற இந்த நிசப்தத்தில்… எனது பழைய வாழ்க்கை ஞாபகத்திற்கு […]