கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் சரிகின்றன ஒலிகளில். அலற பிரபஞ்சம் எப்படி கேட்டது ஒருவனுக்கு மட்டும் அது- அவன் ஓவியத்தில் நிறங்களும் அலற?* ஒரு பூவைப் பறிக்கும் போது உலகு குலுங்குவது யாருக்கு கேட்கிறது? நிலத்தினுள் விதைக்கப்பட்ட பிணங்களெல்லாம் முளைக்க அன்றிரவைப் பொடிப்பொடியாக்கி இடித்த இடி என்ன கூறிற்று?**- பிறந்த சிசுவின் முதல் அலறலிடம் கேட்க வேண்டும் அதை. *குறிப்பு: […]
(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு வெளியேறவும் செய்கிறதா? அல்லது வாசலில் வீடும் வெளியும் கைகுலுக்குகின்றனவா? அல்லது வாசலில் வெளியை சுவாசிக்கிறதா வீடு? (2) பிறகு கட்டினேனா வீட்டை முன்னமேயே வெளி வீடு வடிவில் தன்னைத் தகவமைத்து உள்ளொளித்து வைத்து பிறகு அனுமதிக்க? ஓர் ஐயம் எனக்கு (3) சன்னல்- சுவருக்கல்ல- வீட்டுக்கு. வீட்டுக்கு மட்டுமல்ல- வீட்டுக்குள் வசிக்க வெளிக்கு. வெளிக்கு […]
– கு.அழகர்சாமி (1) பாறையின் விழி என்னை நான் உடைந்து போக விடுவதில்லை கண்ணாடியாய். உடைக்கப்பட்டாலும் உடைவேன் ஒரு பாறையாய் ஊற்றின் விழி திறந்து. (2) முடிபு இன்னும் முடிக்கப்பட வேண்டியிருக்கிறது அது. முடிக்கப்பட்ட அளவில் முடிந்திருக்கிறது முடிக்கப்பட வேண்டியதும். முழுதும் முடிந்த எதுவும் ஒரு வகையில் முடிக்கப்பட்ட அளவில்- முடிக்கப்பட வேண்டியது போதுமென்றே- முடிந்ததே. முடிக்கப்பட்ட அளவில் முடிந்து கனவு முடிந்திருக்கவில்லையென்றால் முழுதும் கனவு முடியாது இன்னும் விடியாது கனவாக முடிந்திருக்குமோ நனவு? (3) ஒரு […]
எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் இரத்தலுமின்றிஉயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?ஆச்சரியமாய் அதை நான்கண்டபோது தான் கண்டேன்அவ்வளவு அது ஆச்சரியமில்லையென்று,எவ்வளவு அழகாய்அவள் குழந்தை தன்அமுதமெனும் கொள்ளைச் சிரிப்பைபிறர் இரந்து தான் ஈயாததாயும்தான் ஈந்து பிறர் ஏற்காததாயும்யாவருக்கும் –ஒருவருக்கல்ல-வாரி வழங்குதலைக் கண்டு-ஒருவேளை எனக்கு முன்னமேயேஅவன் குழந்தையை நான்கண்டது போல் கண்டுஆச்சரியமாகி ஒரு கணம்தானே குழந்தையாகிக்குழந்தையைப் போல்யாவருக்கும் இல்லையாயினும்குழந்தையின் தாய்க்குஅப்படிஇளநியை நல்கினானோ?ஆனால்வெறுமனே குழந்தையைக்கொஞ்சுவதை விடஎவ்வளவு இயல்பாய்எவ்வளவு மேலானது […]
கு. அழகர்சாமி அசதியாயிருக்கும் அந்திவானில் சுறுசுறுப்பாய்த் திரியும் தட்டான் பூச்சிகள் கண்டு சிறு வயதில் நான் குறும்பாய் வாலில் நூலை முடிச்சிட்டு வேடிக்கை பார்த்த ஒரு தட்டான் பூச்சியின் நினைவு உயிர்த்தது. உயிர்த்த என் நினைவில் உயிர்த்துப் படபடத்த தட்டான் பூச்சி பறக்கும் மற்ற தட்டான் பூச்சிகளோடு சேர்ந்து என் நினைவின் பிடியிலிருந்து தப்பித்துப் பறந்து போக ஆசைப்பட்டது. ஆசையாய் அது பறந்து போக, என் நினைவுள் நான் நுழைந்து நான் முடிச்சிட்ட நூலை நானே அவிழ்த்து […]
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]
அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பாடையிலிருந்து அறுந்து வீழ்ந்து மிதிபட்டு நசுங்கி- வறிய தெருநாய் சாவினை முகர்ந்ததெனும் நறுமாலைகள் சிதறிக் கிடக்க- நகர்ச் சாலையில் சுடலை நோக்கி சாவதானமாய் நகரும் சவ ஊர்வலத்தின் பின் வழி விட- விடாது ஒலி ஒலித்து இங்கிதமற்ற பேருந்து அவசரப்படுத்தும் பதற்றத்தில் பிணம் பயந்ததெனும் பயம் பிணத்தினின் பயமாயிருக்கும்- விழி இடுங்கிப் பிணத்தை வெறித்தபடி ஊரும் பேருந்துக்குள் உறைந்து கடக்கும் எனக்கு. கு.அழகர்சாமி