author

நிலா அதிசயங்கள்

This entry is part 19 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித் தடவி தடாகங்களில் மிதந்து களித்தது. பழங்களையெல்லாம் மரத்திலிருந்து பறிக்காமல் சுவைத்தது. நிலவின் சுமையில் மலர்களில் இதழ்கள் உதிரவில்லை. மணங்களை மலர்கள் இழக்கவில்லை. நிலவு சுட்டப் பழங்கள் நிறம் மாறவில்லை. கோடி கோடி மைல்களென அன்றாடம் அலையும் நிலாவிற்கு அணுவளவும் களைப்பில்லை. குமரி எஸ். நீலகண்டன்

காணாமல் போனவர்கள்

This entry is part 32 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த நிலவையும் பார்த்தேன். எதிர்பாராமல் ஒரு மின்னல் கிழித்த துணியாய் மேகத்தை கிழிக்க… பேரிடி முழங்கியது. பெருமழை பெய்தது. பேசிக் கொண்டிருந்த பறவையையும் காணவில்லை. நிலவையும் காணவில்லை. எங்கே போனதோ அவைகள்.

நிலாச் சிரிப்பு

This entry is part 25 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் மற்றவர்கள் நம்மோடு சிரித்தாலும் சிரிக்காமல் புறக்கணித்தாலும் சிரிப்பானது எல்லோருக்கும் குளுமையாக்த்தான் இருக்கிறது.   சதா புன்னகைத்துக் கொண்டே இருக்கும் நிலவை பார்த்துத்தான் சொல்கிறேன்.

நிலவின் வருத்தம்

This entry is part 35 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலா… நிலா கேட்டது காகத்திடம் இந்த நேரத்தில் இங்கே எப்படி என்று. கால நேரம் பார்த்தால் என் தாகமும் தீராது தேகமும் தகிப்பிலிருந்து தணியாது என்றது காகம் தன் சிறகுகள் அடித்து. நிலா சொன்னது.. அப்போதெல்லாம் இந்த இடத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. மீன்கள் […]

காற்றும் நிலவும்

This entry is part 24 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் கலைத்து நிலாவின் முகத்தை நிர்வாணமாக்கியது. கருந்திரை எங்கோ பறந்து போக முகம்மூட ஆடை தேடி மிதந்து சென்று கொண்டிருந்தது நிலா. நிலவுடன் காற்று காதல் விளையாடிக் கொண்டிருக்க… மேகத்தைக் கலைத்து மழையைக் கொண்டு சென்று விட்டதாக காற்றைக் கடுமையாய் திட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர் பலரும்.

பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்

This entry is part 29 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை.   வானம் முழுவதும் தேடியும் நிலாவைக் காணவில்லை.   இன்னும் பிடிவாதமாய் நிலாவை அழைத்தது. வரவே இல்லை.   கோபத்தில் குழந்தை நிலாவோடு டூ விட்டது. அடுத்த நாள் நிலா பிறை வடிவில் எட்டிப் பார்த்த போது குழந்தை கண்ணை அடைத்துக் கொண்டது.   சிறிதாய் நிலா கண் இமைகளின் இடைவெளியில் எம்பி நுழைய முற்படுகையில் கண்ணை இன்னும் இறுக்கிக் கொண்டது.   அப்போதும் நிலா எப்படியோ கண்ணுக்குள் […]

நிலாச் சோறு

This entry is part 1 of 47 in the series 31 ஜூலை 2011

பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா.   வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம்.   மொட்டை மாடியில் சூழ்ந்திருந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்க்கொன்றாய் உருண்டை உருண்டையாய் சுவையாய் ஊட்டினாள் நிலாச் சோற்றினை அற்புதப் பாட்டி.   அவளுக்கு மிகவும் பிடித்த அந்த சரவணனிடம் கேட்டாள். நிலாச் சோறு எப்படி என்று.   மிகவும் சுவையாக இருக்கிறது என்றான் கண்களில் நிலா மின்ன பார்வையற்ற அந்தப் பேரன்.     குமரி எஸ். […]

நினைவுகளின் மறுபக்கம்

This entry is part 27 of 34 in the series 17 ஜூலை 2011

நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று.   குளிர்ச்சியாய் மனது குதூகலாமாயிற்று.   என்னைப் போல் அங்கும் நிலாவிலிருந்து யாரோ பூமியை நினைத்துக் கொண்டிருக்கலாம்.   பூமியின் வெப்பம் அவர்களின் மனதை வியர்க்க வைக்கலாம். மறைந்த பசுமை அவர்களின் மனதை உறைய வைக்கலாம். சுற்றும் பூமியின் சிமென்ட் சிரங்குகள் அவர்களின் மனதினை அருவருக்க வைக்கலாம்.   மழைவராத பேரிடியும் இரைச்சலும் மனதை நெருட வைக்கலாம்.   இப்போதும் நிலாவை நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே பூமியை நினைத்துக் […]

தூரிகையின் முத்தம்.

This entry is part 35 of 38 in the series 10 ஜூலை 2011

எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்பும் ஓவியமெங்கும் பரவிக் கிடக்கின்றன.   பல இடங்களில் தூரிகை தொட்டுச் சென்றிருக்கிறது. சில இடங்களில் தூரிகை துள்ளிக் குதித்திருக்கிறது.   சில இடங்களில் தூரிகை எல்லை தாண்டி நடந்திருக்கிறது.   இன்னும் சில இடங்களில் தூரிகையின் கண்ணீர் அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் கரைந்த மேகமாய் மிதந்து நிற்கிறது.   தூரிகையின் ஆயிரம் விரல்களின் பேரிசை முழக்கம் விழுந்த ஓவியத்தில் எழுந்து கேட்கிறது. […]

மௌனத்தின் முகம்

This entry is part 39 of 51 in the series 3 ஜூலை 2011

எப்போதும் மௌனமாய் இருப்பதே உசிதமென இருந்து விட்டேன். யாரிடமும் பேசுவதில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் ஓரிரு வார்த்தைகளை தானமாய் விட்டெறிவேன்.. என் கண்களைக் கூட பேசவிடாது குனிந்து விடுவேன். வெளியே எல்லோரும் நானிருக்குமிடம் அமைதியின் உறைவிடமென உற்சாகமாய் சொல்லிச் சென்றார்கள். நாட்கள் செல்ல செல்ல என் மௌன முகத்தின் அகத்துள் உச்சமாய் கூச்சல்.. சதா சலசலப்பும் உச்சந்தலையை குத்தும் உட்கலவரம். காதுகளற்ற அகத்தின் முகத்துள் கலவரக் காயங்கள். இரக்கமின்றி இன்னும் இறுகி இருக்கிறது வெளியே மௌனம்.