மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் பின்னர் செல்மா தனது தலையை உயர்த்தி சுன்னின் மலைமுகடு வானத்தை வருடும் தொடு வானை நோக்கிச் சொன்னாள் ,” நேற்று நீங்கள் எனக்கு ஒரு சகோதரனைப் போல இருந்தீர்கள் யாருடன் நான் வளர்ந்தேனோ, யாருடன் நான் வாழ்ந்தேனோ , யார் அருகில் அமைதியாக எனது தந்தையாரின் பராமரிப்பில் இருந்தேனோ அந்த சகோதரனைப்போல் இருந்தீர்கள் . இப்போது விசித்திரமானதும் சகோதர பாசத்தைவிட இனிமையானதுமான ஒன்றினை உணருகிறேன். ஒரு […]
மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் ஒரு நாள் ஃப்பாரிஸ் எஃப்ஃபெண்டி தனது வீட்டில் விருந்துண்ண என்னை அழைத்தார் நானும் ஒப்புக்கொண்டேன். சுவர்க்கம் செல்மாவின் கரங்களில் அளித்ததும். உண்ண உண்ண இதயத்தில் பசியைத் தூண்டி விடுவதுமான தெய்வீக அப்பத்தை என் நெஞ்சு நேசித்தது. இந்த அப்பத்தைத்தான் அரபுக் கவிஞரான கைஸும், தாந்தேயும், சாப்போவும் புசித்தனர். அது அவர்களது இதயத்தில் தீயை மூட்டியது. முத்தங்களின் இனிப்பாலும் கண்ணீரின் கசப்பாலும் தெய்வீக அன்னை சுட்டெடுத்த அப்பம் […]
மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம், வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும் நூறு ஆண்டு கால வாழ்வை விட மேன்மையானது. அந்த ஒரு மணிக் கணத்தில் இருந்து பிறக்கிறது மனிதனின் உண்மை . ஓய்தலற்ற கைகளுக்கும் நச்சரிக்கும் கனவுகளுக்கும் இடையில் உறங்குகிறது உண்மை நூறாண்டு காலம். அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் இயற்கையின் விதிகளுக்கு கட்டுண்ட போதிலும் தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறது […]
மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி இருவரும் இணைந்தோம் ஒன்றாய் அன்பின் உந்துதலால். இழுக்கிறது நிலவு என்னை அவனிடம் இருந்து விரைந்து விரைந்து திரும்பிச் செல்கிறேன் மீண்டும் அவனிடம் தயங்கித் தயங்கிப் பெறுகிறேன் பிரியா விடை. நீலமாய் நிறைந்த தொடுவானின் பின்னிருந்து கவர்ந்து வருகிறேன் வெள்ளியின் நிறத்தை கலக்கிறேன் நுறையாய்க் கரையோர மஞ்சள் மணலுடன் என்னே வனப்பு எங்களின் சங்கமம் […]
மூலம்: கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் ;புதுவை ஞானம் இந்த உலகிற்கும் எதிர் வரும் உலகிற்கும் இணைப்புப் பாலம் அவன். தாகத்தால் தவிக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் அருந்த நீர் வழங்கும் தடாகம் அவன். பசியால் வாடும் பறவை இனத்துக்குப் பழம் தரும் மரத்தின் பாசனக் கால்வாயாய் அழகுற அமைந்த ஊற்று அவன். குமுறும் ஆன்மாக்களின் குழப்பம் தணிக்கும் அழகிய கீதமாய் மென்மையாய் இசைக்கும் வானம் பாடியாய் வெண்ணிற மேகங்களின் மேலாக தொடுவானில் தோன்றி ஏறி உயர்ந்து வானம் முழுதும் […]
மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய் இறைவனால் இறக்கி விடப்படும் வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான் என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும். பூங்காக்களுக்கும் அழகூட்டு முகத்தான் விடியலின் தேவதையான இஷ்தாரின் மணிமுடியில் இருந்து பறிக்கப்பட்ட அழகிய முத்து யான். மலைகள் சிரிக்கின்றன நான் அழும் வேளையில் மலர்கள் குதுதூகலிக்கின்றன மகிழ்ச்சியால் . என்னை யான் தாழ்த்திக் கொள்கையில் எல்லாமும் உயர்வடைகின்றன. வயல்வெளிகளும் வான்மேகமும் காதலர்கள் […]
கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : ஞானம். கடவுள் தன்னிடமிருந்து ஒரு ஆன்மாவைப் பிரித்து அழகுற வடிவமைத்தார் அவளை. அனைத்து அன்பையும் நளினத்தையும் அவள் மீது பொழிந்து ஆசீர்வதித்தார். அவளிடம் மகிழ்வெனும் கோப்பையைக் கையளித்துச் சொன்னார், ” கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்து போனாலொழிய இந்தக் கோப்பையிலிருப்பதை அருந்தாதே ! ஏனெனில் மகிழ்ச்சியென்பது எங்கோ அப்பால் இல்லை இக்கணத்தில்தான் இருக்கின்றது.” அவளிடம் துயரெனும் வேறொரு கோப்பையைக் கையளித்துச் சொன்னார்: “ இந்தக் கோப்பையில் இருப்பதை அருந்து ! […]
மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழில் : புதுவை ஞானம். ” துவக்கத்திலிருந்தே இருக்கிறேன் இங்கே யான் முடியும் நாள் வரையும் இருப்பேன் இங்கே யான் ஏனெனில் எனது இருப்புக்கு முடிவே இல்லை. மனித ஆன்மாவானது கடவுளின் ஒரு அங்கமே படைக்கும் தருணத்தில் பிரிபட்ட ஓர் சுடரே அல்லவா ? ஒருவரை ஒருவர் கலந்து பேசுகின்றனர் எனது சகோதரர்கள் அதனுள்தான் அடங்கி இருக்கிறது தவறு செய்யாமையும் மீண்டும் அதனை நினைத்து வருந்தாமையும். பல்லோரது பங்கேற்பு என்பது […]