Articles Posted by the Author:

 • கையெழுத்து

  கையெழுத்து

    பொன்மலை ரயில்வே ஸ்டேஷனின் மேற்குப் புறத்தில் குறுக்கில் கிடக்கும் தண்டவாளங்களைத் தாண்டி வகிடெடுத்த மாதிரி போகும் ஒத்தையடிப் பாதையில் நடந்தால், கால் மணி நேரத்தில் சங்கிலியாண்டபுரம் போய்விடலாம். அந்தச் சங்கிலியாண்டபுரத்தில்தான், என்னோடு கொஞ்ச நாள் ஸ்கூலிலும் பின் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருக்கும் இருதயராஜ் மார்க்கின் வீடு இருக்கிறது. நான் இதுவரை அவன் வீட்டிற்குப் போனதில்லை. அவன் அப்பா ஒரு முசுடு என்றும் வீட்டில் இருப்பவர்களும் எப்போதும் தொணதொணப்புதான் என்று அவன் ஏற்கனவே சொல்லியிருந்ததால் நான் அங்கு போனதில்லை. […]


 • தலைதப்பிய தீபாவளி

  தலைதப்பிய தீபாவளி

    ராஜூ பார்க்க அமைதியாய் இருந்தாலும் சிலவிஷயங்களில் மிகவும் தீவிரமானவன். ஆனால் பலவிஷயங்களில் மிகவும் மேம்போக்காய் இருப்பான். திருநெல்வேலியில் இருந்து பொன்மலை ரயில்வே பள்ளிக்கூடத்தில் அவன் ஆறாவது சேர்ந்ததில் இருந்து அவனை எனக்குத் தெரியும். அவன் முதன் முதலில் என் வீட்டிற்கு வந்திருந்தபோது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பிற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கென்று இருந்த மிக ஆழமானதும் அகலமானதுமான கிணற்றைக் காட்டி, ” டேய்! இது பயங்கரமான கெணறுடா!  நெறையா பேத்தை இது காவு வாங்கியிருக்கு தெரியுமா” […]


 • மனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்

  மனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்

  ஒற்றை ஆளாகப் பரணிலிருந்து பொம்மைப்பெட்டிகளை இறக்கப் போன வருடமே சிரமப்பட்டதை நினைவில் கொண்டு, என்னிடமும் என் தம்பியிடமும்                                                  ” போதும் போதும் உங்க பராக்கிரமமெல்லாம்.  ஓடற காவேரித் தண்ணில லைட் வெளிச்சம் நடுங்கற மாதிரி, பொட்டிய எறக்கிவைக்கிற வரைக்கும் ஒடம்பு முழுக்க நடுங்கித் தவிச்சது ரொம்ப நன்னாயிருந்தது. பொம்மையெல்லாம் பொழைக்குமான்னு பட்ட கவலையெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும் ” என்று சொல்லி எப்போதும் அவளுடன்  ஒத்துப்போகாத என் சின்னக்காவையும் பிரச்சனைகளைத் தவிர்க்க எப்போதும் ஆமாம் போடும் என் தர்ம […]


 • மரப்பாச்சி இல்லாத கொலு

  மரப்பாச்சி இல்லாத கொலு

    ஐந்து ஏழாகிப் பின் ஒன்பதான படிகள் முழுவதும் பொம்மைகள்! குடும்பத்துடன் நிற்கும் ராமர் ராசலீலையில் கிருஷ்ணர் மழலைபொங்கும் முகத்தின்பின் அனாவசியக் குடைதாங்கி நிற்கும் வாமனன் நடுவான தசாவதாரம் ராகவேந்திரர் புத்தர் காமதேனு மஹாலக்ஷ்மி என நீண்ட வரிசையின் கடைசியில் செட்டியாரும் மனைவியும் காய்கறி பழங்களோடு பலசரக்குக்கடை பரப்பி அமர்ந்திருக்க எப்படி எல்லாமோ மாற்றி அமைத்து வைத்த கொலுவில்   முதலில் உட்கார்ந்திருக்கும் கணபதியோடு பஞ்சகச்சமோ மடிசாரோ கோட்சூட்டோ கவுனோ எதைத் தைத்துப் போட்டாலும் கூர்மூக்கின் கீழ் […]


 • காதல் துளி

  காதல் துளி

  கரையைத் தொட்டுப் பின் செல்லும் அலைகள் எல்லாம் வேறு வேறு என்றாலும் அலைகளில் அடர்ந்த நீர்த்துளிகளுமா வேறு வேறு? ஓர் அலையில் ராட்டினமாடிக்கொண்டு வந்தவை அணிமாறி அடுத்தத் தொகுப்பில் அடைந்துகொண்டு எத்தனை முறை புரண்டெழுந்தாலும் கரைக்குத் தெரியும் எந்தத் துளியின் முத்தம் தன் மடியில் குமிழாய்ப் பொரிந்ததென்று ! — ரமணி


 • சும்மா வந்தவர்கள்

  சும்மா வந்தவர்கள்

  எப்போதோ பார்த்தவர்களெல்லாம் எதிர்பாராது வந்து போகிறார்கள் இப்போது. திருட்டுக் குற்றம் சாட்டின பழைய ஊரின் பக்கத்துவீட்டுக்காரர் பிரியவே மாட்டோம் எனச் சத்தியம் செய்து பின் காலச் சூழலில் பிரிந்துபோன பள்ளி நாட்களின் இணைபிரியா நண்பர்கள் எனப் பழகியவர்கள் மட்டுமில்லாது கண்களால் மட்டும் பேசிக்கொண்டிருந்த ரகசியக் காதலிகள் கூட எதிர்பாராது வந்து பேசிப் போகிறார்கள். வந்து பார்த்ததும் பேசிப்போனதுமே பழகிய பாசம் தந்த பெரிய பரிசென்றிருக்கும் அக்காவுக்கு அமெரிக்க சித்தப்பா வெறுங்கையோடு சும்மா வந்தது மட்டும் பிடிக்கவேயில்லை. — […]


 • இரட்டுற மொழிதல்

  இரட்டுற மொழிதல்

         — ரமணி     கோபமோ தாபமோ காமமோ காதலோ எதையும் வாய்ச் சொல்லாய்ச் சொல்லாது கவிதைக்குள் பதுக்கிவிடலாம்.   படித்துப் பார்த்தபின் கோபமும் தாபமும் காமமும் காதலும் இரட்டிப்பானது தனக்கென்று புலம்புவாள் மனைவி   — ரமணி


 • காலமும் தூரமும்

  காலமும் தூரமும்

      — ரமணி   யார் சொல்லியும் எப்படிச் சொல்லியும் சண்டையின்போது மேல்விழுந்த வார்த்தைகள் செய்த காயத்தை ஆற்றிக்கொள்ளவே முடியவில்லை!     புழுதி படிந்துகொண்டிருக்கும் அந்த நாளின் பாரம் இறக்கப்படாமலேயே உறைந்து கிடக்கிறது!   பார்வையை விட்டகல புலம் பெயர்ந்த பின்னும் நழுவிய நாட்களோடு காயத்தின் வலியும் செய்தவன் நினைவும் கரைந்து போய்விடவில்லை.   நேர்ந்துபோன உறவுகளை காலம் சேர்க்கவும் இல்லை தூரம் பிரிக்கவும் இல்லை   —-  ரமணி


 • இடைச் சொற்கள்

  இடைச் சொற்கள்

  திடீரென ஒன்றும் வரவில்லை. சொல்லிவிட்டுத்தான் வந்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன் சொல்லிக்கொள்ளாமலேயே போனவன் எவ்வளவோ அருகிலிருந்தும் கண்ணிலேயே படாதவன் இப்போது எவ்வளவோ தூரத்திலிருந்து வந்து கதவைத் தட்டுகிறான்.   கண்களை இடுக்கிக் காக்கை நகம் கீறினதாய்ப் படிந்த நயனச் சிரிப்பில் அவன் உள்ளத்தின் வெண்மை தெரிந்தது.   அவன் வாழ்வை மிகவும் மெதுவாகச் செதுக்கிக்கொண்டிருந்த விதி சில வருடங்கள் அவனையே மறந்துபோனதில் ஒதுங்கிக்கிடந்த நாட்களின் சூன்யத்தை புதிது புதிதான வார்த்தைகளில் என்னிடம் வடித்துக்கொண்டிருந்தான்.   சேர்ந்துகொண்ட நோய்களை […]


 • மலட்டுக் கவி

  மலட்டுக் கவி

     —  ரமணி   ஒரு மிருகத்தை வேட்டையாடுவது போல அடம்பிடிக்கும் குழந்தைக்குச் சோறூட்டுவது போல வயதானவர்களின் பிடிவாதம் தளர்த்துமாப் போல பரீட்சை நாளின் முன்னிரவு போல எண்ணங்களுக்கு வடிவு கொடுப்பதும் ஆகிவிடுகிறது. எங்கேயோ புதர்களுக்குள் பதுங்கிவிடும் வாயில் திணித்ததை என்மேலேயே துப்பிவிடும் முதுகில் ஏற்றிக்கொண்ட காலத்தால் சண்டையிடும் ஓட்டைத் தொட்டியில் தங்காது தப்பிவிடும் நால்வகைப் போக்கில் உருக்கொள்ளாது எத்தனை முறை தரிக்காது போயிருக்கிறது?