ரமணி நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது. உடனே ஒரு ரெய்ன்கோட் வாங்கிவிட உத்தரவு வந்ததில் இந்தியப்பொருளாதரம் இன்னொரு இயக்கத்தைச் சந்தித்தது. ஆனால், மழையில் ரெய்ன்கோட்டை உபயோகிக்க வாய்ப்பு வரவில்லை இன்னும். இருந்தாலும் திபாவளிக்குப் புது ட்ரெஸ் போட்டுக்கொள்வது மாதிரி மஞ்சள் குங்குமம் எல்லாம் தடவி டி.வி யில் நாதஸ்வரம் ஒலிக்கப் போட்டுக்கொண்டு கழற்றிவைத்துவிட்டோம் . இந்த ஸீஸனுக்கான மழை ,கோடை மழைபோல இருக்காது. இது ட்ராவிட் ஆட்டமென்றால், […]
தீபாவளி நினைவுகள் — 1 ——————————————- நடு வயதுக்காரர்களுக்கு இப்போதும் தீபாவளி பற்றிய பழைய ஞாபகங்கள் பக்ஷணங்கள்போலவே சுவையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு மனசு தயாராகிவிடும். நண்பர்களோடு பேச்சு தீபாவளியைப் பற்றி மாத்திரமே இருக்கும். எத்தனை ஸ்வீட், எத்தனை ட்ரஸ், எவ்வளவு பட்டாசு என்ற பேச்சில் நிறைய புருடாக்கள் இருக்கும். மிஷினுக்குப்போய் மாவு அரைத்து வருவது எனக்குப் பிடிக்காத வேலை. முதல் காரணம் கும்பல். இரண்டாவது, மிளகாய்ப் பொடி அரைக்கவும் மற்றவை […]
சண்டை நாட்களில் எதிரியும் காதல் நாட்களில் சகியும் தியாக நாட்களில் தாயும் ( கல்யாணத்திற்கு முன்) கேளிக்கை நிறைந்தவற்றில் நண்பர்களும் என அந்தந்த நாட்களில் நிறைந்தவர்களை நாட்குறிப்புகள் நிரப்பியிருந்தன. நான் நிரம்பிய நாட்கள் வெறும் வெற்றுத்தாள்தானோ என அயர்ந்தபோது அடுத்தவர் அடர்ந்தவற்றில் நீதான் கரைந்திருக்கிறாய் எனப் படபடக்குது டைரியின் பக்கங்கள் _ ரமணி
__ரமணி ஓர் இனிப்பைச் சுவைப்பது போல என்னைத் திட்டிக்கொண்டிருந்தான் என் உயர் அதிகாரி. என் இயலாமையின் மீது விளையாடிக்கொண்டிருந்தது அவன் மூர்க்கம். பதிலடி கொடுப்பதின் இழப்புச் சுமை வாழ்க்கையை நசுக்கிவிடும் என்பதாலேயே என் சுயம் நெடுஞ்சாலையில் நசுங்கிய தவளையைப்போலக் கால் பரப்பி உறைந்திருந்தது. எனக்கு என் மனைவி அவன் மனைவிக்கு அவன் என்ற தொடர்ச்சியில் அவனுக்கு நான் வன்மையின் வடிகாலாவது சரிதானென்று சமாதானம் கொண்டது மனம்.
_ ரமணி நாளைய விடியலுக்குள் நான் இறந்துபோகலாம் எனில் இக்கணமே என் கடைசி ஸ்வாசம் நிகழ்ந்து விடட்டும். அடுத்தவர்களை விட அதிகமாயும் நிறைய பேரைவிடச் செழுமையாயும் வாழ்ந்த பிறகு மரணத்தின் நியாயம் புரியாமலில்லை. கணேசன் வெறும் முப்பத்தெட்டு வயதிலேயே மரித்துப்போனான்! எனக்கோ கூடுதலாய்ப் பன்னிரண்டாண்டுகள்! இன்னுமொரு நாள் இல்லை அதிகமாய் ஒரு மணி நேரம் என்பது கூட நியாயமற்றதே! நான் ஒன்றும் என்னை உருவாக்கிக் கொள்ளவில்லை. வாழ்க்கையே எனக்கொரு பரிசுதான்! மரணவேளையைச் சிலர்மட்டுமே தேர்ந்து கொள்ள முடிகிறது! […]
புலால் தவிர்த்துச் “சைவ”மாகிப் போன வைஷ்ணவர்களின் உதட்டிலும் நெற்றியிலும் விதவிதமான நாமங்கள். வெங்கட் ராமா கோவிந்தா எனக் கூவிவரும் பக்தர்களுக்குப் பிடியரிசிபோட வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா ரேஷன் கடையிலிருந்து. பக்தர்கள் வரிசைக்காக மூங்கில்கொண்டு கட்டியிருக்கிறார்கள் பெருமாள் கோவிலில் தூணையும் அதில் நிற்கும் அனுமாரையும். அடுத்துக் கட்டியிருந்த பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்திகொண்டிருந்தான் வியாபாரி மாடு அவனுடையதென்று சொல்லாமல் _ ரமணி
___ ரமணி நானறிந்த நிகரற்ற நட்சத்திரங்களின் ஞாபகத்தோடு வானின் தொலைதூரத்திலெரியும் சூரியனை என் ஒளியிழந்த கண்கொண்டு பார்க்க விழைகிறேன். நீண்ட வெளியின் மையத்தையும் முடிவையும் காணத்துடிக்கும் மனதின் வீண்முயற்சியின் அடித்தளத்தில் தகிக்கும் அடையாளமற்ற வெற்றுப்பார்வையில் என் சிறகுகள் கட்டவிழ்கின்றன. ஆனந்தத்தின் அடர்த்தியில்லாது கடந்துபோன வாழ்வை எரித்து என் கல்லறையாகக் காத்துக்கிடக்கும் பள்ளத்தாக்கிற்கு என் பெயரைச் சூட்ட நினைக்கிறேன்.
__ ரமணி இரவின் மிச்சம் இன்னும் ஜன்னல் கண்ணாடிகளுக்குப்பின் மயங்கிக் கொண்டிருக்கிறது. எது எரிந்து இப்படி சாம்பலாய்ப் பூத்துக்கொண்டிருக்கிறது? கண்களுக்குள் இன்னும் கனவு முட்டைகள் உடையாதிருக்கின்றன. முட்டைகள்! துராக்ருத முட்டைகள்! ஒரு கோப்பை காப்பித்திரவத்தால் அவற்றைக் கலைத்துவிடமுடியாது! பகலின் நெரிசலில் வாழ்க்கை வர்த்தகங்கள் சிதறடித்து விரட்ட எங்கோ மாயமறைவில் ஓடி ஒளிந்தாலும் இருளின் பதுங்கு குழிக்குள் எப்படியோ மீண்டும் சூல்கொண்டுவிடும் ஒவ்வொரு பொழுதிலும் மனக்கண்ணாடி உடைந்து அவஸ்தையாய் உயிர்த்திரவம் பெருகும்.
அன்பின் வலி இறுகப்பிடித்திருந்த அம்மாவின் சுட்டுவிரல் வழி வழியும் அன்பின் அதீதம் தாங்காது போயிருக்கிறது பல நேரங்களில்… பள்ளிக்கூட வாசலில் அழுதுவிடுவேனோ எனத் தயங்கி நின்றவளைக் கையசைத்துப் போகச் சொன்னதும் உண்டு. மொழி தொ¢யாத ஊ¡¢ல் வேலை கிடைத்துப் போகும் நாளின் முன் இரவில் மடி சாய்த்துத் தலை கோதி வார்த்தையற்று இருந்தவளை விலக்கி நகர்ந்த போதும் மண நாளில் யாருக்கோ என்னைத் தாரை வார்த்ததாய்த் தனியளாய் நின்று யாருமறியாமல் மருகிய போதும் அன்பின் இரு எல்லைகளை […]
சங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும் விலகியும் உறவுகள் போலப் பாதைகள் கிளைக்க ஈர்த்துச் சென்ற சக்கரத் தடத்தில் காலமற்றுக் கிடக்கும் திருமோஹ¥ர்க் காற்றில் நாராயணம் கமழ்ந்தது. பரவசம் தணிந்து வாழ்க்கைப் புழுதியில் மீண்டும் உழன்று சுழன்றது பயணம். கைகுலுக்கிப் பா¢மாறின சிறு புன்னகைகளில் மனம் ஒட்டாது பிரியுமுன் காய்ந்தன புதிய அறிமுகங்கள். சேர்ந்தும் கலைந்தும் காற்று […]