ருத்ரா அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய நகங்கள் வானத்தை கிழிக்கும். நீல ரத்தம் மௌனம் பீச்சும். என்னை உமிழும் நிமிடங்களில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழல். மரம் அல்ல இது. ஒரு விதையின் நிழல் இது. கோடி சூரியன்களை கருவுற்ற இருட்டின் திரள் இந்த நிழல். காற்று தூவிய அசைவுகள் தூரத்து வெளிச்சத்தை இப்படியா கசாப்பு செய்யும்? துண்டு துண்டுகளாய் கனவுப் பிண்டங்கள் மரத்தில் […]
==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் நிழல் வேண்டாம் என்று கள்ளிப்பால் ஏன் தேடினாய்? நீ வேண்டாம் உன் கருப்பை மட்டுமே போதும் எனும் அரக்கர்கள் இவர்கள். பிறவிப்பெருங்கடல் நீந்தும்போது அவன் எழுதினான் உன்னை. சௌந்தர்ய லகரி. “ஆதி” எனும் தாயே அடையாளம் நீ கொடுத்தால் தானே “பகவனும்” இங்கு புரியும். த்ரேதா யுகம் துவாபரா யுகம் கலியுகம் எல்லாம் தோப்புக்கரணம் […]
==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் முகம் காட்ட மாட்டாள் என்று தான் இந்த சன்னல் கதவுகள் கூட அவள் இமைகள் பட படப்பது போல் பட படக்கும்படி அடையாளங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்த சிக்னல் அவளுக்குப் புரியும். அதோ அவள் அங்கு வருவதை வாசனை பிடித்து விட்டேன். இந்த தடவை அதோ பார்த்து விடுவேன். ஒவ்வொரு தடவையும் இப்படி ஒளித்து […]
……… ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் விழக் காரணமான அந்த நிலவை நோக்கி நீட்டுகிறது. அருகில் உள்ள திராட்சைக்கொடியின் கருங்கண் கொத்துகள் போன்ற கனிக்கொத்துகளையும் அந்த நிலவின் கண்களாக எண்ணிக்கனவுகளோடு தும்பிக்கை நீட்டுகிறது. பிளிறுகிறது. அருகே அடர்ந்த காடே கிடு கிடுக்கிறது. இருப்பினும் குழியில் விழுந்தது விழுந்தது தான். விண்மீன்கள் ஒளிக்கொசுகள் போல் சீண்டுகின்றன..சிமிட்டுகின்றன. வண்டுகள் ரீங்கரிக்கின்றன. அருகில் சிங்கம் புலிகள் […]
===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென பனிநீர் இழிபு கல்சுனை நாட உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் கருவி குன்றம் ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும். இறைந்த எச்சக் குடர்படு அஞ்சினை அகவிய மாவின் அளிகுரல் எதிர ஒள்வீ அன்ன உகு கணீர் உகுக்கும். அஞ்சும் அஞ்சும் புல்லிய புல்லும். தூம்பு நீண்ட அங்குழல் கொன்றை தூஉய் தந்த தாது உண் தும்பி இமிழ்தரு மென்னொலி நுண்சுரம் கேட்கும். அடர்தரு பாசடை அடவிகள் […]
==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல். குவளை உண்கண் என்கண் தாஅய் குமிழ்க்கும் அந்தீ இன்பம் கனல படுதிரை எரிக்கும் இனிக்கும் மகிழும். முல்லை வெண்ணிரல் முரற்கை கேட்கும். புன்மை அதிர நகையும் புகையும். தாமரை தூஉய்த்த மணிநிறத்தும்பி ஒற்றிய நுண்கால் மருவியபோன்ம் முத்தம் அதுவாய் இழைத்தனன் ஆங்கே. அண்டம் கடுத்ததோ.அடுக்கம் கிளர்ந்ததோ. வளிசூழ் […]
ருத்ரா மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது. பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி சருக்கி ஆடுகின்றன. மேக்னா தீக்குழம்பும் தாண்டி வெண்டைக்காய் பிஞ்சு விரல்களின் நகப்பூச்சு கிலு கிலுப்பையை குலுக்குகிறது. அதிலிருந்து ஒரு கள்ளச்சிரிப்பு வெறுமைக்குள்ளும் பூவாணம் சிந்துகிறது. பொட்டு பொட்டு வெளிச்சங்களில் “சரஸ்வதியின்” காய்ந்த உதடுகள் ஈரப்படுத்திக்கொள்ளுகின்றன. நாயுருவிகள் கூட என் மேனி வருடி சப்திக்கின்றன. காற்றின் அடுக்குகளில் நுரையீரல் நந்தவனங்களில் வழு வழுப்பாய் புரள்கின்றேன். பட்டம் விடும் சிறுவன் தடவிய கண்ணாடித்தூள் கயிற்றில் ஏதோ […]
ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில் அந்துறைச்சேர்ப்பன் மீள்மணி இரட்டும். பொலங்கிளர் பொறிவளை பொதிமணல் படுப்ப இணைசெத்து என பற்றுக்கொள் கீர கொடுங்கை போர்த்தும் அதிர்க்கண் கள்வன் மருள்தரும் காட்சி மலிதரும் மாலை ஊன் உகுக்கும் என்பு தேய்க்கும் கொடுநோய் தீர வரும்கொல் மாதோ. கொடுவான் துளைபட உழுபடை கொண்டு […]
நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் ஹரிஜனம் என்றான். வெள்ளையன் தந்ததை மூவர்ணம் ஆக்கினோம். அடுத்தவர் மதமும் நம்மவர் மதம் தான் மானுடமே உயர் மதமெனச் சொன்னான். ரகுபதி ராகவன் ஈஸ்வரன் அல்லா எப்பெயருள்ளும் ஒலிப்பது அன்பே. ஒவ்வொரு தோளிலும் சிலுவைகள் உண்டு. ஒவ்வொரு கையிலும் தொழுகைகள் உண்டு. ஆழ்ந்த தியானம் உளந்தனை நூற்கும் குவிந்த சிந்தனை இமயங்கள் நகர்த்தும். கோடிக் […]
காய்நெல் அறுத்த வெண்புலம் போல நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப அளியேன் மன்ற காண்குவை தோழி. கொழுமுனை தடா நிற்கும் நிலத்தின் கண்ணும் ஆறு படரும் நீர்த்தட நாடன் சுரம் கடந்ததென். புல்லிய நெற்பூ கருக்கொண்ட ஞான்று நிலமே நோக்கி நின்ற காலை ஈர்ஞெண்டு வளைபடுத்தாங்கு பருங்கண் உறுத்தி என்முகம் நோக்கும். அயிரைச்சிறு மீன் என்கால் வருடும். புன்சிறை வண்டினம் மூசும் இமிழ்க்கும் நீர்முள்ளி பொறி இணர் தாது நிரக்கும். […]