தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து வரிந்து கட்டிய செண்டாய் என் – வீட்டினர் மத்தியில் கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா அள்ளியணைக்க கொள்ளையாசை! அம்மாவின் கைகளினின்றும் அட்சரம் விலகினாலும் அழுதது ஸஃபிய்யா அப்பனின் முகமும் அலைபாயும் கண்களுமென… எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா நிலா, பொம்மை, பூக்கள், புத்தகம், பூனை, பல்லி எல்லாம் புறக்கனித்து எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா சட்டென உதித்தொரு யுக்தி. கைகள் ஏந்தி… கண்கள் பார்த்து… சொன்னேன்…மந்திர வாக்கியமொன்று- தாவி வந்தது ஸஃபிய்யா அள்ளியணைத்து […]
அம்மா கைகளில் குழந்தை… சும்மாச் சும்மா உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. கன்னங்களிலோ நெற்றியிலோ குத்து மதிப்பாக முகத்திலோ இன்ன இடம்தான் என்றில்லாமல் வாகாக வாய்க்கும் எந்த இடத்திலுமோ வென… வாகனங்களைக் காட்டியொரு உம்மா வானத்தைக் காட்டியொரு உம்மா மரங்களைக் காட்டியொரு உம்மா மனிதர்களைக் காட்டியொரு உம்மா கத்தும் குருவியைக் காட்டியும் கொத்தும் கோழியைக் காட்டியும் கழுவும் கறி மீனைக் காட்டியும் காத்திருக்கும் கரும் பூனையைக் காட்டியும் உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. இடது கையிலிருந்து வலது […]
நூலிழை கொண்டு நெய்து வைத்தது போல் பெய்து கொண்டிருந்தது மழை இடியாமலும் மின்னாமலும் சற்றேனும் சினமின்றி சாந்தமாயிருந்தது வானம் சீயக்காய் பார்க்காத சிகையைப்போல சிக்குண்டு கிடந்தன மேகங்கள் உதயகாலம் உணராமல் உறங்கிக்கொண்டிருந்தது உலகம் பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப் படுத்துறங்கிக் கொண்டிருந்தது பகலவன் தற்காலிக ஓடைகளிலும் தான்தோன்றிக் குட்டைகளிலும் துள்ளின தவளைகள் நைந்தும் சிதைந்தும்போய்விட்ட மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனிச்சையாகவே சேகரமாயது மழைநீர்.
கலைத்துப் போட்டு அடுக்கி பிரித்துப் பின் கோர்த்துப்போட்டாலும்… விசிறிக் கலைத்து என எல்லா வித்தைகளும் தோற்று எதிரிக்குத்தான் வாய்க்கிறது ரம்மியும் ஜோக்கரும்! பதினாலாவது அட்டையோ புதிய அமைப்பாய் தனித்துத் தொலைக்க அதுவும் சேர்கிறது அவனுக்கு! தோல்வியைத் துரத்தும் புள்ளிகள் குறைக்க முனைகையிலும் எடுப்பதெல்லாம் படம்பதித்தே வருகிறது! மேற்கை இறக்குவதெல்லாம் மூன்றாம் கைக்குத் தேவையாம் கீழ்க்கையோ நான் கீழே விட்டதெல்லாம் பொறுக்கி சட்டென அடிக்க… முதல் ஆட்டமும் துரதிருஷ்டமும் முற்றிலும் […]
பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை தானும் வருவதாகச் சொன்னது. எல்லாச் சொந்தங்களிடமும் ஸ்பரிஷமோ பாஷையோ விடைதர… புன்னகை போர்த்திய முகச் சோகமும் புர்கா மூடிய அகச் சோகமும் கலாச்சார நாகரிக கட்டுக்குள் நிற்க மனைவியின் கண்கள் மட்டுமே முழுப் பெண்ணாகிப் […]
நகர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி நகர அனுமதிக்கும் விளக்கின் பச்சைக்காகக் காத்திருக்கயில்… பல வேலை நிமித்தம் சிலர் சாலை கடந்தனர்! கடந்தவர்களில் ஆண்களோ அலைபேசி அடிமைகளாய் தலை சாய்த்து முடங்கி நடக்க பெண்களில் பத்துக்கு எட்டுபேர் எதையாவது சுமந்துகொண்டே நடந்து கடந்தனர்… தோல்பை கைப்பை பணப்பை வழவழ காகிதத்தில் தடிநூல் பிடிகொண்டபை மினுக்கும் அலைபேசிப்பை ஒருமுறை பிரயோகத்திற்கான பாலித்தீன் பை என எதையாவது சுமந்துகொண்டு… எஞ்சிய இருவரும்கூட கர்ப்பினிப் பெண்டிர்! […]
மற்றொரு மழை நாளில்… மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்… கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. “அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை”யென- தேனாய் இனித்த கரும்பலகையும்… சற்றே ஓய்ந்த மழை வரைந்த வானவில்லும்… சுல்லென்ற ஈர வெயிலும்… மோதிரக்கல் தும்பியும்… கருவேலும் புளிய மரமும் சேமித்த மழையும் கிளையை இழுக்க சட்டென கொட்டி நனைந்த உடையும்… க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின் சுப்ஹுத் தொழ […]
அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம் இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த விளக்குகளும் விதவிதமான பந்துகளும் விரட்டும் ஜந்துக்களும் ஆங்கில எழுத்துகளும் அதன் தலைகளில் கொடிகளும் டி ஃபார் டாக்கும் எஃப் ஃபார் ஃபிஷ்ஷும் குச்சிக் குச்சி கைகளோடு குத்தி நிற்கும் சடைகளோடு வகுப்புத் தோழிகளும் உடலைவிடப் பெருத்த தும்பிக்கையோடு […]
இன்று வியாழன்… நேற்றுதான் சென்றது வெள்ளிக் கிழமை, எத்தனை வேகமாய் கடக்கிறது இந்தியனின் இளமை அமீரகத்தில்?! எத்தனை காலமல்ல குடும்ப வாழ்க்கை எத்தனை தடவை என்றாகிப்போனதே! ஊரிலிருந்து வந்த நண்பன் உன் நினைவுகள் மொய்க்கும் பெட்டியொன்று தந்தான். அட்டைப்பெட்டியின் மேல் எழுதியிருந்த என் பெயர் சற்றே அழிந்தது நீ அட்டைப் பெட்டி ஒட்டிக் கட்டுகையில் பட்டுத் தெறித்த உன் நெற்றி பொட்டின் வியர்வையா சொட்டுக் கண்ணீர் பட்டா? […]