This entry is part 6 of 10 in the series 26 செப்டம்பர் 2021
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு) கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா? தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா? என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்…. ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை. மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை […]
எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான். மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி தூரத்தில் உள் வாங்கி இருந்தது அந்த மயானம். அடிக்கும் காற்றில் புகை பூராவும் மேலும் உள் வாங்கிப் பறந்து சற்றுத் தள்ளியிருந்த புது நகர் வீடுகளை நோக்கி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. […]
உஷாதீபன், வெளியீடு=’ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சாகித்ய அகாதெமி வெளியீடு. தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் லௌகீக வாழ்க்கையில் உழல்பவர்கள் ஞானம் பெறுவது எப்போது? எப்படி? அந்த வாழ்க்கையை முழுவதும் முறையாக வாழ்ந்து கழித்தலே அதற்கான வழிமுறை. மன முதிர்ச்சி என்பது அந்த அனுபவங்களிலிருந்தே கிட்டுகிறது. எல்லோருக்குமா கிட்டி விடுகிறது? முறையான நியமங்களோடு, கடமையைச் செய்-பலனை எதிர்பாராதே என்கிற தாத்பர்யத்தேயாடு வாழ்ந்து கழித்தவனுக்கு அது ஓரளவு சாத்தியமாகிறது. […]
மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்…ஒரு விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார். நடந்தாலும் நடக்கும்…யார் கண்டது? என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்டிக் கேட்பாரில்லாமக் கிடந்தா?எதுவும் நடக்கலாமே! என்ன…ஏது என்று யாரேனும் கண்டு கொண்டால்தானே…?. அதான் ஒரு பெரிசு இருக்கே…எல்லாத்தையும் கண்காணிக்கிறதுக்கு…! -அப்படித்தானே கிடக்கானுங்க எல்லாரும்…? சரி…சரின்னு இருந்ததுதான் தப்பாப் […]
என்ன தப்பு நான் சொல்றதுல…? – அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை இவளிடம் போய்ச் சொல்கிறோமே என்பதுதான். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில் நிலைத்து நிற்பவள். உலகமே தலைகீழாய்ப் போனாலும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி…! யாராவது அப்படி இருப்பாங்களா? நீங்க பேசுறது அதிசயமா இருக்கு…எதுக்கு அனாவசியத்துக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு…? சிவனேன்னு […]
இருவர் படுப்பதுபோலான அந்த அகலக் கட்டில் உறாலில் நடுநாயகமாய்க் கிடந்தது. அதை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டது நான்தான். அதற்கு முன் எதிரேயுள்ள அறையில்தான் அது கிடந்தது. அங்கே குளிர் சாதனம் உண்டு. ஆனால் இரவில் அங்கே கதவை அடைத்துக் கொண்டு படுக்க எனக்கு பயம். யாரேனும் திருடன் நுழைந்து அறைக்கதவை வெளியே சாத்தி என்னை அடைத்து விட்டு, இருப்பதையெல்லாம் திருடிக் கொண்டு போய் விடலாம் என்று தோன்றியதால் அந்த இரும்புக் கட்டிலை உறாலுக்கு […]
“சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட, கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக ஆகிறார்கள்.. காலத்திற்கேற்றமாதிரி மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கொள்பவர்கள் இருந்தாலும், அதெல்லாம் நம்மளால முடியாதுங்க….என்று ஓரமாய் ஓதுங்கி தங்கள் இலக்கிய வாசிப்பு ரசனைக்குத் தாங்களே தீனி போட்டுக் கொள்பவர்களாய் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவர்கள், […]
அன்புடையீர், வணக்கம். இப்பொழுது இ.புக் படிக்கும் பழக்கம் அதிகமாகி- வருகிறது. எதிர்காலத்தில் அச்சுப் புத்தகங்களின் தேவை மிக மிகக் குறைந்து போகும். அப்போது நிற்பது இ.புக்காகத்தான் இருக்கும். அனைத்தையும் கையளவு மொபைலில் திறந்து படிக்கும் நிலை விறு விறுவென்று மேலேறி விட்டது. இந்த ஊடகத்தைக் கையிலெடுத்துக்கொண்டு முதல் முயற்சியாக எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அமேஸான் கிண்டிலில்-இ.புக்காக வெளியிட்டிருக்கிறேன். 294 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 190 ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறேன். சில பக்கங்கள் சாம்பிளாகவும் கிடைக்கின்றன. படித்துப் […]
சிறுகதை அந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய நடையின் தன்மை என்றே எண்ண வைத்தது. அப்படித் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. அவரின் மன இயல்பின் அடையாளமோ என்றும் எண்ண வைத்தது. அடுத்தடுத்த வீடுகளைக் கடக்கையில் ஏன் தலை குனிந்தே இருக்க வேண்டும், நடையை அளப்பதுபோல…! கோயில்களில் அடிப்பிரதட்சிணம் […]