எனக்கு ஒரு கீப் உண்டு என்று நண்பன் மனோகரன் சொன்னபோதுதான் எனக்கே அது தெரிய வந்தது. அடப்பாவீ…இப்டி ஒரு நெனப்போடயா இருந்திருக்கீங்க எல்லாரும்…என்றேன். கூடவே, யாரடா சொல்ற? என்று கேள்வியை வீசினேன். என் முகத்தில் சுத்தமான சந்தேகம் இருந்ததா என்று தெரியவில்லை. மனோ என்னைக் கூர்ந்து பார்த்த விதம் என்னை அசடாக்கிவிடுமோவென்று தோன்றியது. பார்த்தியா, இதுதான வேணாங்கிறது…? எங்ளுக்குத் தெரியும்டா…சும்மா சீன் போடாத…! என்றான் மனோ. அவனின் வார்த்தைகள் எனக்குப் புதியவை. அவைகளை எங்கே அவன், அவர்கள் […]
அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் […]
( 7 ) டேவிட், டேவிட்…- மகனைக் கட்டிக்கொண்டு புலம்பினார் ராபர்ட் மைக்கேல். முழுசாகப் பையனைப் பார்த்தது அவருக்கு நிறைவைத் தந்தது. எங்கே என் ஒரே பிள்ளையையும் இழந்திடுவேனோன்னு மலைச்சுப் போயிட்டேம்ப்பா… – சிறு குழந்தையாய் திக்கித்திக்கிப் பேசினார். என்ன டாடி இப்படி? – உங்களுக்கு ஏத்த பள்ளையாத்தானே சாமர்த்தியமா இந்த வேலையை முடிச்சிட்டு வந்திருக்கேன்? என்னைப் பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா அழறீங்களே? சரி, சரி…விடு. நீ மட்டும் எப்படி போலீஸ்லேயிருந்து தப்பிச்சே? அதை முதல்ல சொல்லு… நடந்த்தை […]
( 5 ) நினைத்தது போலவே செக் போஸ்டில் கெடுபிடி. போலீஸ் கூட்டம் வேறு ஸ்பெஷலாய் நின்றிருந்தது. எதேனும் ஒன்றில் முனைந்து விட்டார்களென்றால், அவர்களின் பணியின் தன்மையே தனிதான். புயலாய்ப் பணியாற்றுவார்கள். எந்தக் கொம்பனும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாதுதான். ஆனாலும் திருட்டுத்தனம் செய்பவர்களும், கடத்தல்காரர்களும் அதற்கும்மேல்தான் சிந்திக்கச் செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. எந்த மேலிடத்தின் குறுக்கீடும் இல்லாதிருக்க வேண்டும். நிச்சயம் கதையை முடித்து விடுவார்கள். கார் தானாகவே வேகம் குறைந்தது. […]
( 3 ) டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்… எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது லேன்ட் லைன்தான். என்னப்பா, சொல்லுங்க… உங்கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போறேன்…சின்சியராச் செய்வேன்னு நினைக்கிறேன்… நிச்சயமாச் செய்றேம்ப்பா…சொல்லுங்க… – அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று சற்றுப் பதட்டத்துடனேயே எதிர்நோக்கினான் டேவிட். அதை போன்ல சொல்ல முடியாது. நேர்ல வா…. எங்கே? பூந்தோட்டம் பங்களாவுக்கு…. அடுத்த […]
டேவிட் பார்கவியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே வீச்சாய்ப் போய்க் கொண்டிருந்தாள் அவள். அந்தப் பின்பக்கத்திலிருந்து இவன் பார்வை அகலவேயில்லை. மனசு ஏங்கியது. துடித்துத் துவண்டது. பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே? தவியாய்த் தவிக்க விடுகிறாளே? அப்படியே கட்டிப்பிடித்து சாய்த்து, மடியில் இருத்திக் கொண்டு கைகளை இஷ்டம்போல் விளையாட விட வேண்டும் என்று துடிக்கிறது மனசு. . அத்தனையும் இன்று ஏமாற்றமாகிப் போனது. மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டிருப்பாளோ? கண்களையே அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தாளே? உள்ளபடி காட்டிவிடுமே […]
( 12 ) அடுத்த இரண்டாவது நாள் கண்ணனும், சுமதியும் நேருக்கு நேர் சந்திக்கத்தான் செய்தார்கள். நடந்தது எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ என்ற பயத்தில் அவளை நேரே காணக் கூசியவனாய்த் தயங்கி நின்றான் கண்ணன். கண நேரத்தில் ஏற்பட்ட அந்தத் தவறுக்காக என்னை நீ மன்னிச்சிடு. இனி ஜென்மத்துக்கும் அம்மாதிரி ஒண்ணும் நடக்காது. இது சத்தியம்…. அழாத குறையாய் அவளது விழிகளோடு கெஞ்சினான் கண்ணன். உங்களோட சரியும், தவறும் என்னோடுதான். மூன்றாவது நபருக்கு அதைத் தெரிய விடமாட்டேன். […]
இந்த அளவுக்கு உன் சித்தப்பனை மதிச்சு நடந்த விஷயம் முழுவதையும் நீ எங்கிட்டே சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்… நிதானமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் சேதுராமன். தலை குனிந்தவாறே நின்றிருந்தான் கண்ணன். நேற்று நீ ஆபீஸ் போயிருந்தப்போ உனக்குத் தெரியாமே பத்திரிகைகளிலே வந்த உன்னுடைய கதைகளையெல்லாம் எடுத்துப் படிச்சேன். நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இந்தத் துறையிலே முன்னேறணும்ங்கிற வெறி உன்னை கொஞ்சம் ஆபாசமா எழுதத் தூண்டியிருக்கு. இதை நீ ஒத்துப்பேன்னு நினைக்கிறேன். […]
( 10 ) என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா… நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை… அப்படிச் சொல்ல முடியாதும்மா…மனம் ஆயிரம் நினைக்கும் ஆனால் அதில் தேவையில்லாததையெல்லாம் வடிகட்டி நல்லதைச் செய்யறாம்பாரு…அவன்தான் மனுஷன்…அதனாலே செய்கைதான் முக்கியம். எழுத்தும் பேச்சும் அவரோட செயல்தானேப்பா…அது சுத்தமா இருக்கணுமில்லியா? எழுத்து அவருடைய உறாபி…நாட் ய ப்ரொஃபெஷன். பேச்சு […]
ஏம்மா, எங்கே போயிட்டு வர்றே…? – உள்ளெ நுழையும்போதே பத்மநாபனின் கேள்வி சுமதியை நிறுத்தியது. என் தோழி கவிதா வீட்டுக்குப்பா… இப்படி பதைபதைக்கிற வெய்யில்ல போய் அலைஞ்சிட்டு வர்றியே, இது தேவையா உனக்கு? கேள்வி என்னவோ செய்தது. அப்பாவின் பேச்சில் ஆயிரம் இருக்கும். இல்லப்பா, ரொம்ப நாளாச்சு அவளைப் பார்த்து. ஊரிலிருந்து வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அதான் போனேன். பார்த்திட்டியா? சுமதி தயங்கினாள். என்னம்மா, உன் தோழியைப் பார்த்துப் பேசிட்டியான்னு கேட்டேன்… அப்பா பதிலுக்காக நிமிர்ந்து நோக்குவது […]