வளவ. துரையன் மீண்டும் மீண்டும் கூடு கட்ட நல்ல குச்சிகள் தேடும் காகம் எத்தனை பேர் வந்தாலும் ஏறச்சொல்லி முன்னாலழைக்கும் நகரப் பேருந்து கொடுத்ததைப் பாதுகாத்து அப்படியே அளிக்கும் குளிர்சாதனப் பெட்டி குழல்விளக்கினைக் கருப்பாக்க நினைக்கும் கரப்பான பூச்சிகள் பெட்டியைத் திறந்தாலே ஆள்கடத்தல் தீவிபத்து அரசியல் கூச்சல்கள் ஒழுகும் தூறல்களுக்கிடையே ஒதுங்க இடம் தேடும் ஒரு நாய்க்குட்டி கிழக்கின் மருத்துவமனைக்கும் மேற்குக் காட்டிற்கும் இடையில்தான் மெதுவாக நகர்கிறது வாழ்வு
. வளவ. துரையன் மாரியம்மன் கோயில் வாசலில் வானம் தொட்டு வளர்ந்திருந்த வேப்ப மரங்கள் தான் பூத்த மகிழ்ச்சியைத் தலையாட்டிக் காட்டி வரவேற்கும் கரும்புச் சோலைகள் மேதிகள் கூட்டம் குளித்துக் கலக்குகின்ற குளம் போன்ற குட்டைகள் கதிரவனை மறைத்து மறைத்துக் கண்ணாமூச்சி காட்டும் சிறு குன்று களத்தில் தூற்றிய நெல் மூட்டைகளைக் கழுத்தொடிய இழுக்கும் காளைகள் மேலிருந்து பட்டென்று விழுந்து வாவி மீனை வாரியெடுத்துச் சென்று வட்டமிடும் கருடன்கள் இப்பொழுது எல்லாம் இவற்றை வரைந்து பார்த்தால் வண்ண […]
எனக்கில்லை மத்திய சிறைக்குள்ளே நுழைவதென்றாலே மனத்தில் ஓர் அச்சம்தான். மாறாத ஒரு நடுக்கம்தான். நான்கைந்து தடுப்பு வாசல்களிலும் நல்லமுறைச் சோதனைகள். கோரிக்கைகளை வென்றெடுக்க ஆசிரியர் போராட்டத்தில் அடியேனும் கலந்துகொண்டு அங்கிருந்த நாள்கள் அசைபோட வந்தன. இப்பொழுதும் எதுவும் மாறவில்லை. பார்வையாளர் சந்திக்குமிடம் அதிகாரிகளின் அலுவலகங்கள் மிடுக்கான காவலர்கள் வானளாவிய சுற்றுச் […]
வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த அறைக்குள்நுழைந்தாலும் உன்வெப்ப வாசனைதான்நாசியைக் கருக்குகிறதுஅணைப்பதற்குஅறுசுவை நீர் தேடிஅலைவதே என்வாழ்வின் பெரும்பயணம்எந்த எரிமலையும்தணிந்துதான் தீரவேண்டும்சாம்பல் எப்போது வரும்?
வளவ. துரையன் அரியாசனம் யாரும் அமைத்துத் தராததால் அரற்றுகிறது அசல் போலிகள் தம் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருக்கின்றன. போலிகள் எப்படியும் பொய் எனும் ஆயுதம் கொண்டு வெற்றி பெறுகிறார்கள் காலம்காலமாகவே இந்திரன்கள் வெற்றி பெற்றும் கவுதமர்கள் தோற்றுக் கொண்டும் இருக்கிறார்கள் எல்லாம் முடிந்தபிறகு கல்லாய் மாறிப்பின் கால்பட்டுப் […]
வளவ. துரையன் எங்கள் வீட்டு நாய்க்குட்டி சேற்றில் புரண்டு வந்தது. அதைக்குளிப்பாட்டினேன் எங்கள் வீட்டு பூனைக்குட்டி அணிலைப் பிடித்துத் தின்று வாயில் குருதிக் கறையுடன் வந்தது. கையிலெடுத்துத் துடைத்து விட்டேன் எங்கள்வீட்டு மல்லிகைக் கொடி நேற்றடித்த காற்றில் அலைபாய்ந்தாட அதற்கு ஒரு கொழுகொம்பு நட்டேன். என் கடைசிப் பையன் […]
வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.திடீரென கதையைமுன்பைவிட வேகமாகத்தொடங்குவார்.ஒரு கதையிலிருதுஇன்னொரு கதைக்குமுடிச்சுப் போட்டுத் தாவுவார்.இப்பொழுதுஊரின் கிழக்கேதனியாய்ப் படுத்துக் கொண்டுயாருக்குக் கதை சொல்கிறாரோ?
வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்தலையில் தண்ணீர் ஊற்றிமனத்தை உடலைக்குளிரச் செய்தேன்.பெட்ரோல் விலை ஏறுவதால்இருசக்கர வாகனமில்லை;பேருந்தில் பிதுங்கி வழிந்துஅலுவலகம் அடைதல்அதிகாரத்திடம் மல்லுக்கட்டிவிட்டுகோப்புகளில் மூழ்கிவிட்டுக்கரையேறி இல்லறக் கரையில்தரை தட்டினேன்.வீடுவந்தால்மனைவி நினைவூட்டினாள்தான் கொடுத்தஅவசரத்தீர்மானத்தைஆளும் கட்சியால்தள்ளுபடி என்றேன். இப்படித்தான் இன்றுஇல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்இனிதே நிறைவு
வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!
வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.