author

நான் யாரு?

This entry is part 5 of 34 in the series 10 நவம்பர் 2013

நான் யாரு? மாடியில் துணி காயபோட்டுவிட்டு அவரும் அவர் மனைவியும் கீழே இறங்கி கொண்டிருந்தார்கள் “ஏங்க நான் கடைக்கு போய் காய் ஏதாவது வந்திருக்கான்னு பார்த்திட்டு வாங்கி வாரேன். நீங்க வீட்டுக்கு போங்க ” கடைசி படி இறங்கி மனைவி கடைக்கு போவதை வெறிக்க பார்த்துவிட்டு திரும்பியவரின் மண்டையில் மின்னலேன சின்னவலி வந்து போய் சரியாயிற்று. நடந்து சென்ற அவர் கதவை திறந்து உள்ளே நுழைய எத்தனிக்கையில் “சார் என்ன வேண்டும் நான் இங்க இருக்கிறேன் ” […]

விடுமுறை நாள்

This entry is part 4 of 33 in the series 11 நவம்பர் 2012

வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய  காலை நிலவை தொலைத்து விட்ட வானம்  மெல்லிய விசும்பலாய் வெயிலே அழுது கொண்டிருக்கிறது மணி 7 யை  தாண்டிவிட்டது காப்பி குடிக்க ஒரு தவிப்பு வீட்டு நிலவும் இன்னும் போர்வைக்குள் பால் சூட வைக்கும் பொழுதெல்லாம் பொங்கி  வழிந்து மனைவியிடம் வழிசலாக போனதால் அடுப்படி செல்ல ஆயாசமாக இருந்தது விடிந்து விட்டதை அறிவிக்க தொலைகாட்சியில்  செய்தியை சத்தமாக வைக்க விடுமுறை நாள் […]

இப்படியிருந்தா பரவாயில்ல

This entry is part 3 of 31 in the series 4 நவம்பர் 2012

முருகன்ங்க வயசு சரிய தெரியல்லை 34 ன்னு எழுதிக்கோங்க நான் 2 தாங்க மேலே படிக்கிலங்க ஆம் எனக்கு படிப்பு வராதுன்னு டீச்சர் சொல்லிட்டாங்க கல்யாண ஆச்சுங்க ஒரே பையன் 4 படிக்காங்க இங்கிலிஷ் ல பேசுறாங்க எல்லா வேலையும் செய்வேன்க கூலின்னு போட்டுக்கோங்க திருநெல்வேலி வரைக்கும் தான் போயிருக்கேன் ரேசன் கார்டு இருக்குங்க அரிசி வாங்குவேன்ங்க பழையதுங்க இரவுக்கு நெல் சோறுங்க பலகாரம்ல்ல நல்ல நாள் பொழுதுல்ல தாங்க சட்டை கல்யாண காட்சிக்கு போனதாங்க, அழுக்கு […]

தற்கொலை

This entry is part 29 of 31 in the series 5 பிப்ரவரி 2012

கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய் விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு காதல் தோல்வி தீராத தீட்டுவயிற்று வலி அம்மா கடுமையான எச்சு வயிற்றில் வாங்கி கொண்டாள் இன்னம் இஷ்டத்துக்கு ஒரு வாரம் கழித்து தன் சாவுக்கு காரணமில்லை குறிப்புடன் விஷம் குடித்து மரித்தான் மாரி அப்போதும் அப்பனையும் ஆத்தாளையும் காப்பாற்ற இப்படி எழுதியிருக்கான் வேறு ஏதோ தப்பு தண்டாவென வாய்கள் மென்றன புரளிக்கு பதிலளிக்க ஆளில்லை யென்றால் மனசாட்சிகள் அடகுவைக்கப்பட்டு வாய்கள் இறந்தவர்களை […]

மகள்

This entry is part 14 of 42 in the series 29 ஜனவரி 2012

தேர்வு மையத்திற்கு கூட  வரவில்லை என்றால் அப்பாவுக்கு  என் மேல் அக்கறை இல்லை கூடவே  சென்று நிழல்  பார்த்து உட்கார சொன்னால் ஏன் அப்பா இப்படி படுத்தறீங்க என்று சடைத்து  கொண்டாள் என் மகள் மகள் என்றாலும் பெண்தானே புரிந்து கொள்ள முடியவில்லை

மார்கழி காதலி

This entry is part 26 of 40 in the series 8 ஜனவரி 2012

மார்கழி பனி நீ வெளியே வரும்வரை உன் வீட்டு வாசலில் காத்திருந்து உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு மார்கழி பனி வெட்கி தலை கவிழும் நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை கலைத்து விடுவான் நீ உன் வாசலில் இட்ட கோலம் பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும் நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில் அழகாக அமர்ந்து அருள் […]

காதல் கொடை

This entry is part 34 of 39 in the series 18 டிசம்பர் 2011

—————வே.பிச்சுமணி என் காதலை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் ஏற்றுகொள்வதும் ஏற்றுக்கொளளாததும் உன் இதயத்தின் முடிவில் மிஞ்சினால் மிதியடியாக பயன்படுத்து பிஞ்சி போனால் உன்னை சீண்டுபவரை சாத்தும் உன்பாதத்துடன் பழகி பழகி பரதன் மதிக்கும் இராமனின் பாதஅணிகளாக மாறி உன் மனது ஆளும் நேரம் மழை வரும் சிரமேற்கொண்டால் என் காதல் (கொ) குடையாகும்

மாதிரிகள்

This entry is part 39 of 39 in the series 4 டிசம்பர் 2011

அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக  மாறுவதுண்டு மாமனார்  அப்பா மாதிரி மாமியார்  அம்மா மாதிரி மருமகன்  மகன் மாதிரி மருமகள்  மகள் மாதிரி ஒரு போதும்  மாதிரிகள்  அசலாவதிலை மாய மான்  என தெரிந்தும் சீதைகளுக்காக  ராமர்கள் அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு துரத்தும் நாடகம்  நடந்து கொண்டே இருக்கிறது கங்குகள் மீது படிந்த சாம்பலை கைகள் அறியும் அலுத்துவிட்ட  காட்சிகள் என்றாலும் அலுக்காமல்  அரங்கேறுகின்றன உண்மை  […]

தான் (EGO)

This entry is part 10 of 53 in the series 6 நவம்பர் 2011

-வே.பிச்சுமணி உன்னை மாற்றிகொள் எனும் சொல் உனது தான் விழிக்க செய்துவிட்டது நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு உன் மனதில் வெறுப்பு மண்டியது விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள் வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய் எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய் சூரியனின் அண்மையினால் நிலவே புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய் இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம் […]

கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008

This entry is part 40 of 45 in the series 9 அக்டோபர் 2011

  தமிழகத்தில் பல ஆண்டுகளாக   சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  நெல்வயல்கள்  குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன..  குளம் ஏரி போன்ற பகுதிகளின கரைகள் நீர்பிடிப்பு பகுதிகள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடிசைகள் போடபட்டு அதனால்  அவைகள் குட்டைகளாகிவிட்டன. . காயல்களும் சதுப்பு நிலங்களும் மண்அடிக்கப்பட்டு பெரும் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு உள்ளன. நீர் பிடிப்பு பகுதிகள் நீர்வரத்து பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு   வயல்களுக்கு பாசனம் தடைபட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள வேளாண் விளைநிலங்களின் மொத்தபரப்பு  வெகுவாக […]