என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, வெள்ளைத் தொப்பி, அத்தனையும் மடிப்பறியாத கசங்கல். கைப் பக்குவத்துல் துவைத்த சுத்தம். அட! அன்வர்பாய் மாதிரி இருக்கிறதே. கொஞ்சம் வேகமாக நடந்தேன். 60 டிகிரி கோணத்தில் திரும்பிப் பார்த்தேன். அட! அன்வர்பாய் தான். ‘அன்வர்பாய்’ என்று கத்தினேன். திரும்பிப் பார்த்தார். ‘சீமானே’ என்று கட்டித் தழுவிக் […]
எனக்குள் அப்படி ஒரு ஓங்காரக் குரல் இருப்பது எனக்கே தெரியாது. அலறினேன். என் அலறல் அந்த கென்டக்கி கோழிக்கறிக் கடையின் சுவர்களில் ஆக்ரோஷமாய் எதிரொலித்தது. கோழித் துண்டுகள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் ஸ்ட்ரைக்கர் தாக்கிய வேகத்தில் சிதறும் கேரம் காய்களாய்ச் சிதறி என்னைச் சுற்றி நின்றுகொண்டார்கள். விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் இளைஞிகள் அந்த விற்பனை மேசையைத் தாண்டிக் குதித்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். உள்ளே எண்ணெயில் சில கோழித் துண்டுகள் லேசாகக் கருகிக் கொண்டிருந்தன. ‘அவன் […]
24 டிசம்பர் 2016 அன்று சிங்கப்பூரில் எம்ஜியார் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்தவர் திரு அருமைச் சந்திரன். 8 பாயிண்ட் எண்டர்டைன்மென்ட் பி லிட். நிர்வாக இயக்குநர் சமீபத்தில் ‘பறந்து செல்ல வா’ என்ற திரைப்படத்தை முழுதுமாக சிங்கப்பூரிலேயே தயாரித்தவர். தன் கலையுலக வாரிசு என்று எம்ஜியாரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் திரு பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் எம்ஜியாரோடு நெருங்கிப் பழகியவர் என்ற முறையிலும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் […]
‘உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு இன்று இளைஞர்கள் தவறான கூட்டத்தோடு சேர்றாங்கன்னா அதுக்கு காரணம் பெற்றோர்களின் கட்டுப்பாடற்ற தவறான வளர்ப்பு முறைதான்’ ஒரு பட்டிமன்றத்தில் ஓர் அணித் தலைவர் இப்படிச் சொன்னார். ‘இளைஞர்கள் இப்படி ஆவதற்கு அதிக கட்டுப்பாடுதான் காரணம்.’ எதிரணித் தலைவர் மறுத்தார். கைதட்டல். ‘நாங்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று எங்களை ஏன் கேட்பதில்லை?’ அதனால்தான் என் வாழ்க்கையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று முடிவு செய்தேன். எனக்கு இப்போது 22 வயது. தேசிய சேவை இப்போதுதான் […]
எனக்கு யாரும் ‘அல்வா’ கொடுக்க முடியாது தெரியுமா? ஏனென்றால் நான் ஏற்கனவே இனிப்பானவன். சர்க்கரை நோயைத்தான் சொல்கிறேன். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. 40 வயது தாண்டிடவர்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயாம். சில பிறந்த குழந்தைகளுக்குக் கூட இருப்பது புதுத் தகவல். சரி. இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குக் கூட அத்துபடி. அது போக எங்களுக்காகவே இருக்கும் ஊட்ராம் பார்க் சிறப்பு மருத்துவமனையில் […]
சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் நான் இறங்கிய போது இரவு மணி 8. கிட்டத்தட்ட 24 மணிநேரம் பறந்து பூமியின் சுற்றளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கடந்திருக்கிறேன். கழிந்து போன ஒரு நொடி மீண்டும் கிடைக்காதாம். கடிகாரம் பின்னோக்கி ஓடாதாம். யார் சொன்னது? என் கடிகாரத்தை 16 மணிநேரம் பின்னோக்கித் திருப்பிக் கொண்டேன். கனமான கம்பளிச் சட்டையை ஜாக்கெட் என்று சொல்கிறார்கள். கம்பளித் தொப்பி, தேவையானால் கையுரை. குளிரை எதிர்த்துப் போராடவே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் வாழ்க்கைப் […]
அங்குலம் அங்குலமாக நகர்ந்து கழிவறை சென்ற அந்த கடைசி அசைவுகளும் நின்று அம்மா இப்போது படுக்கையோடு சங்கமமாகிவிட்டார். ஆயிரம் பேர் அன்னாந்து பார்க்க வானத்திற்கு பொட்டு வைத்ததுபோல் பறந்த அழகான பட்டம் சிதைந்து அந்தப் படுக்கையில் கிடப்பதுபோல் உணர்கிறேன். காலை நேரங்களில் அம்மா வழக்கமாக நடக்கும் அந்த ஃபேரர்பார்க் திடலின் ஒவ்வொரு புல்லும் அம்மாவைத் தேடுவதாகவே உணர்கிறேன். ஒரு பார்வையிலேயே நெஞ்சுக்குள் பம்பரம் சுழற்றும் என் அம்மாவின் பார்வையை நேருக்குநேர் சந்தித்தால் நொறுங்கிப் போவோமோ என்ற […]
வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வெளியான கிட்டத்தட்ட நூறு கவிதைகளும் வெளியீடு காண்கிறது. இந்தக் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் களம் அமைத்துத் தந்த திண்ணைக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இத்துடன் என் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். என் சார்பில் அனைவருக்கும் […]
வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வெளியான கிட்டத்தட்ட நூறு கவிதைகளும் வெளியீடு காண்கிறது. இந்தக் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் களம் அமைத்துத் தந்த திண்ணைக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இத்துடன் என் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். என் சார்பில் அனைவருக்கும் […]
கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில் ஒரு கரப்பான் பூச்சி மல்லாந்து கிடந்து கால்களை உதறிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கத்தி எதிர்ச் சுவற்றில் மோதி நெற்றியைப் பிடித்துக் கொண்டு வருகிறார். அந்தக் கரப்பான் பூச்சியைக் கையில் பொத்தி எடுத்து உயிரோடு வெளியே போட்டுவிட்டேன். […]