திரையுலகின் அபூர்வராகம்

This entry is part 4 of 22 in the series 28 டிசம்பர் 2014

  1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில். விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் உண்டு. கோடை விடுமுறை தவிர மற்ற விடுமுறைகளின் போதும் பெற்றோர் மும்பையில் வ்சித்ததால் என் போன்றவர்களும் சில மலையகப்பகுதி மாணவிகளும் விடுதியிலேயே இருப்போம். அப்படி இருந்த ஒரு விடுமுறை. எப்படியொ விடுதி […]

என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

This entry is part 3 of 22 in the series 28 டிசம்பர் 2014

  திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நாளில் அவர் அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்தவாறு மேடை நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த நாளிலேயே எனக்கு இவரது அறிமுகம் கிடைத்தது. கலாகேந்திரா திரு கோவிந்த ராஜன் எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சமயத்தில் அவரைச் சந்திக்க […]

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

This entry is part 16 of 23 in the series 30 நவம்பர் 2014

  எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள் என எல்லா அவயவங்களும் கொண்டு வெளிப்படுத்தப் படும் முத்திரைகள், அபிநயங்கள், பின் சாரிகள், அடவுகள் அவை தரும் எண்ணற்ற வேறுபட்ட பாவங்கள், செய்திகள் எல்லாம் சங்கீதத்தோடும், அவற்றுக்குரிய தாளத்தோடும் அவ்வப்போது தாளம் கொள்ளும் வேறுபடும் கால ப்ரமாணங்கள் எல்லாம் ஒத்திசைந்து ஓருருக்கொண்டு […]

கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

        (டி.ஆர்.மகாலிங்கம்) சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் […]

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

This entry is part 16 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

–     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு […]

பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை

This entry is part 6 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

                                                                                                  – அருணகிரி பி ஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்”- புத்தக மதிப்புரை – அருணகிரி (கலிபோர்னியா வந்திருந்த எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகம் குறித்த மதிப்புரை மற்றும் கலந்துரையாடல் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் குழு சார்பாக நடத்தப்பட்டது. அதில் நான் பேசியதன் சுருக்கம்) கோம்பிரிட்ஜ் ஓவிய ரசனை பற்றிக் கூறுவதை ஆசிரியர் மேற்கோளாக்கிச் சொல்வது இந்த புத்தக வாசிப்பிற்கு அருமையான தொடக்கம்- அதைச்சொல்லியே இந்த மதிப்புரையைத்தொடங்கலாம். “கலையைப்பற்றி கெட்டிக்காரத்தனமாய் பேசுவது அவ்வளவு […]

சதுரங்க வேட்டை

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

    நேர்மை வாழ்வில் முன்னேற பயன்படாது என்பதை அனுபவத்தில் உணரும் ஒரு இளைஞன், ஏமாற்றும் வழியைக் கொண்டு, வெற்றியை அடைய நினைக்கும் கதை. வேட்டை விசாலமானதில், சுவாரஸ்யம் மிஸ்ஸிங். தமிழில் ஒரு புது முயற்சி! முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து, ஷான் ரால்டன் ஒரு அற்புத இசையை தந்திருக்கும் படம். நகரமும் நவீனமும் இவருக்கு வசப்படும் என்பதை இந்தப் படத்தின் இசை உறுதியுடன் சொல்கிறது. வெல்கம் தோழா! மும்பையில் கோலோச்சும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ், தனித்தன்மை வாய்ந்த கதைகளுக்கு முதலிடம் […]

வேலை இல்லா பட்டதாரி

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

    ரஜினிக்கு தைத்த சட்டையை, தனுஷுக்குப் போட்டு அழகு பார்த்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஃபார்முலாவுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பது தான், இந்தப் படத்தின் விசேஷம். படத்தின் நாயகன், சந்தேகமில்லாமல் அனிருத் தான். தனுஷின் அசத்தல் நடன அசைவுகளுடன், முதல் பாடலான “ வாட் எ கருவாட்” அரங்கேறுகிறது. அப்புறம் காரக் குழம்பு, பச்சடி, பாயசம் என்று வகை, வகையான இசையை பந்தியிடுகிறது படம். பின்னணி இசையில் சின்ன சப்தங்களை வைத்து சிம்ஃபனி வாசித்திருக்கிறார் ‘ […]

நாடக விமர்சனம் – தெனாலிராகவன்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  நகைச்சுவை வரலாற்றில், உடல் மொழி, வசனம், சம்பவம் என பல கூறுகள் உண்டு. அதின் எல்லாக் கூறுகளையும் அலசி, ஒரு நாடகமாக வந்திருக்கிறது சிருஷ்டி நாடகக் குழுவின் புதிய நாடகம் “ தெனாலி ராகவன்” மூத்த மேடைக் கலைஞர் கரூர் ரங்கராஜனைத் தவிர மேடையில் எல்லோருமே புதுமுகங்கள். நாடக இயக்குனர் பரவலாக அறியப்பட்ட கிரேசி மோகன் குழுவினரின் ‘அப்பா’ ரமேஷ். கதை வசனம் எழுதிய சிருஷ்டி பாஸ்கர் மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் பிரியா வாசுதேவனின் தலைமையில் […]