எதிரி உன் விருந்தாளியெனில், அவனைக் காப்பது உன் கடமை – சீக்கியர்களின் வேத வாசகம். 25 ஆண்டு கால பகையைப் புறந்தள்ளி, விருந்துக்கு அழைத்த எதிரியை காத்து, கொல்லவும் காத்திருக்கும் பில்லுவும், அதிலிருந்து தப்பிக்க அசத்தல் திட்டம் போடும் ஜெசியும், சேர்ந்து ஆடும் ஜோக்கர் ஆட்டம். ‘நான் ஈ ‘ ராஜமௌலியின் தெலுங்கு ‘மரியாத ராமண்ணா’வின் இந்தியாக்கம். சர்தார்ஜி, பஞ்சாபி என களம் மாறியதில், காமெடி கனம் இழந்து நிற்கிறது. ஆனாலும் சொன்ன வரையில், சுவைதான் என்பதில், […]
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார். மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் தயாரிக்கலாம். நான் சாப்பிடும் ரசம் பத்தி சொல்றேன்பா. குங்குமம் தோழியில் இணைப்புக்காக இப்ப குளிர்காலம் ஆயிற்றே என ரசம் டிப்ஸ் அனுப்பி இருந்தேன். அது பிரசுரமாகி இருக்கு. பொதுவா நாம சாம்பார் சாதம் , வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்ட பின்னாடி ரசம் சாதம் சாப்பிடுவோம். சிலர் ரசத்தை குடிக்கக்கூட செய்வாங்க. […]
“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன் அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம் Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளோ பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளோ இல்லை..என்ன இது விஜய் படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்று எனக்கே ஆச்சரியம். முருகதாஸுக்குத்தான் நன்றி சொல்லணும். ‘கில்லி’க்குப்பிறகு , சொல்லிக்கொள்ளுமாறு வெற்றி பெற்றது ‘போக்கிரி’ தவிர வேறு எந்தப்படமும் […]
தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு வேளை கதையே தாவித் தாவி தலைகீழாகத் தொங்குவதால் வைத்திருப்பாய்ங்களோ? காசிராமன் என்கிற வவ்வால் ( அறிமுகம் ராகுல் ) கேபிள் டிவி கனெக்ஷன் கொடுக்கும் பையன். குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். இவன் மட்டும் படிக்காத மேதை. அப்பா அனந்தராமனின் ( நரேன் ) பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகும் கேரக்டர், வயசுப்பொண்ணு சௌம்யா ( உத்ரா உன்னி ) மேல் இண்ட்ரஸ்ட் ஆகிறான். நடுவில் திடீரென்று தாவி, சென்னை வருகிறான். ஏன்? […]
ஜோதிர்லதா கிரிஜா தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போதெல்லாம் நிறையவே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அனைத்துக் கலைகளிலும், மனிதர்களையும் _ ஏன்? விலங்குகளையும் கூடத்தான் – கட்டிப்போட்டு மெய்ம் மறக்கச்செய்யும் இசைக்கலையே மிகச் சிறந்ததென்று தோன்றுகிறது. அண்மையில் முடிவுற்ற விஜய் டி.வி. யும் ஏர்டெல் நிறுவனமும் இணைந்து நடத்திய இளநிலை இசைத் திறமையாளர்களுக்கான – Super singer among junior artistes – முதலிடம் உண்மையான இசை நுகர்வாளர்கள் செய்து வைத்திருந்த முடிவைத் தவறாக்கிப் பிறிதொரு போட்டியாளருக்குத் […]
எல்லோரும் சுயநலத்துடன் வாழ்வதால் தாயை இழந்து, தன் குடும்பத்துக்காக மட்டும் வாழும் ஒருவனை, பொதுநலத்தை நோக்கித் திருப்பும் பட பட பட்டாசு கதை. பத்துக்கு ஆறு இலாக்களைக் கையில் வைத்துக் கொண்டு பேரரசு இயக்கிய படம். அதில் முன்னோடியான டி.ஆரைப் பாடவைத்தது புத்திசாலித்தனம். ஆனால் எத்தனை நாட்களூக்கு ஒரே மாவை வைத்து இட்லி, தொசை, ஊத்தப்பம் என சுடுவார் என்பது ரசனைப் பசி உள்ள ரசிகனின் கேள்வி. ஐந்து நட்சத்திர ஓட்டல் சமையல்காரர், வேலை இழந்து கையேந்தி […]
ஸ்பீல்பெர்க்கின் பேக் டு பியூச்சரையும் ஆர்னால்டின் டெர்மினேட்டரையும் கலந்து கட்டி அடித்த சயின்ஸ் பிக்ஷன் கதை. கிபி 2074ல் கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அரசாங்கம் தடை செய்த அதைக் கொண்டு, ரெயின் மேக்கர், வயதானவர்களை, 2044க்கு அனுப்பி, அழிக்கிறான். அதைச் செய்து முடிக்கும் கொலைகாரப் படைக்கு லூப்பர்கள் என்று பெயர். அவர்கள் கிபி 2044ல் வாழும் இளைஞர்கள். கொன்றால், பரிசு, செத்தவன் முதுகில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளிக் கட்டிகள். ஒரு லூப்பர் 2074ல் இருந்து வரும், […]
இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிய காலம். இன்று, இணையம் விசாலமான அறிவு அலசல் பாதையைத் திறந்து விட்டிருக்கிறது. சொல்லப் போனால், ஃபிலிம் கொண்டு பதிவு செய்யப்படும் சினிமாக்களின் பளிச்சான இயற்கைக்கு முரணான பதிவு போல் இல்லாமல் டிஜிடலில் உள்ளது உள்ளபடி பதிவு கிடைக்கிறது. சினிமா திரையரங்குகள் அவ்வளவு தான் என்ற போது சத்யம் சினிமா தனது திரையரங்கு முறையை மாற்றி அமைத்து தொழிற்நுட்ப முன்னேற்றத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. வெற்றி […]
மூன்று வாரமாக மல்டிப்ளெக்சில் ஓடுகிறதே என்கிற கியூரியாசிட்டியில், படம் பார்க்கப் போனேன். கிடைத்த அனுபவம் சூப்பர். ஓரளவிற்கு ரன்பீர் கபூர் நல்ல நடிகர் என்பது, எனக்கு ராக்கெட் சிங் பார்த்தபோதே புலப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் அது உறுதி பட்டது. ஒல்லி பெல்லி இலியானா, இதில் கனமான (!) பாத்திரத்தில். அந்த ஒட்டிய கன்னங்களும், அழகுக் கண்களும், கவிதை பேசுகின்றன. படத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார் என்று தெரியும். ஆனால் இப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சிம்ப்ளி […]
கடந்த ஆண்டுகளில் வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான். அவன் போகுமிடங்களுக்கு கூட்டிச் செல்கிறாள். நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் […]