Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம். கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும். कः बलवान्? पुरातनकाले गङ्गातीरे एकः आश्रमः आसीत्। तत्र याज्ञवल्क्यः नाम महर्षिः वसति स्म। सः श्येनमुखात् पतिताम् एकां मूषिकां दृष्टवान् | करुणया सः तां मूषिकाम् आश्रमं प्रति नीतवान् | तत्र […]
கார்த்திக் பைன் ஆர்ட்சின் கோடை நாடகவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (22.4.2011) அன்று அரங்கேறிய நாடகம் “ அச்சு அசல்.” முதலில் ஒரு விசயத்திற்கு அகஸ்டோவைப் பாராட்டியாக வேண்டும். தொழில் ரீதியாக மூக்குக் கண்ணாடிக் கடை வைத்திருப்பவர் அவர். ஆனால் இலக்கிய ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள, அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை, அலாதியானது. நாடகம் கொஞ்சம் சமூக நீதிக் கதை கொண்டதுதான். அதைத் தன் பாணியில் ஒரு திரில்லராகப் படைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அகஸ்டோ. வெற்றி […]
முழுக்கப்புதிதாகவும் , முன்னெப்போதும் கேட்டிராத இசைக்கோவைகளுடனும் களமிறங்கியிருக்கிறார் யுவன் இந்த பில்லா-2வுக்கென. முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பாடல்கள் முழுக்க இளைஞர்களை கவரவைக்க வேணுமென்ற முயற்சியிலேயே பின்னப்பட்டிருக்கிறது.இதுவரை கேட்டிராததாக இருக்க வேணுமென்ற முயற்சியில் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் யுவன். அதே முயற்சி பின்னணி இசையிலும் இருக்கும் என்றே நம்புவோம். பில்லா-1 ல் அவருக்கு சில அழுத்தங்கள் இருந்ததென்பது உண்மைதான். ரஜினி பாடியவற்றை மீளக்கொண்டு வந்தே ஆகவேண்டுமென்று , படமே ரீமேக் என்பதால் , இருப்பினும் தீம் ம்யூஸிக்கில் கலக்கியிருந்தார்.அதில் பாடல்கள் அனைத்தும் […]
பாராட்ட வேண்டிய விசயம் ஒன்றிருக்கிறது இந்தப் படத்தில்! பண்டி சரோஜ்குமாரின் “ அஸ்தமனம்” படத்திற்குப் பிறகு, இந்தப் படமும் 90 நிமிடம் தான். ஆனால் சினிமாவின் எந்த அத்தியாவசியத்தையும் களைந்து விடவில்லை இதன் இயக்குனர். நான்கு பாட்டுகள், இரண்டு சண்டைகள் எல்லாம் உண்டு இந்த நேரத்திற்குள். சபாஷ்! சூரியா( தருண் ஷத்திரியா) கட்டணக் கொலையாளி. அதனால் பெரும் பணம். கார், பங்களா என்று வசதியாக வாழ்பவன். கூடுதல் தகுதி, அவன் ஒரு அனாதை. கன்னியாகுமரியில் போட்டோ ஸ்டூடியோ […]
‘ அலைபாயுதே ‘ வின் நவீனப் பிரதியைப் பார்த்தது போலிருக்கிறது. அத்தனை இளமை! இரண்டரை மணிநேரப் படம் போனதே தெரியவில்லை. இன்னொரு மணிரத்னம் in the making! வெல் டன் ஆண்ட்ரூ! கார்த்திக் ( ஷிவ் பண்டிட்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவன். மலர் ( மானஸி பரேக் ) என்கிற கருணைமலர் எஸ் ஆர் எம்.. கார்த்திக், படிக்கும் காலத்தில், பழகும், இரண்டு பெண்கள், சோனா, காயத்ரி. முதலாவது மக்கு. இரண்டாவது புத்திசாலி என்று தன்னை […]
மயிலாப்பூரில், இருந்து பல ஆண்டு காலமாக இயங்கி வரும், பாரம்பரியம் மிக்க சபை ‘கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ‘. ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு மேல், கோடை நாடக விழா நடத்தி, நாடகக் கலையை நசிந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். பாராட்டுக்கள். 27.04.2012 அன்று மாலை மேடையேறிய நாடகம் தான் தலைப்பில் வரும் நாடகம். நகைச்சுவை நாடகம் என்பதைத், தலைப்பிலேயே உணர்த்தும் இக்குழுவினர்க்கு ஒரு ஷொட்டு. மெட்ரோ கட்டுமானமும் , அதனால் ஒரு […]
வடிவேலு…நகைச்சுவை நாயகன்..! அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்…! தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்…அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள் அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும் பழித்து வேடிக்கை காட்டும் வித்தகன் வடிவேலு . அவரது அத்தனை படத்திலும் இதுவரை அவர் மற்றவரைப் பழித்தோ, இழிவான வார்த்தைகள் பேசியோ..நம்மை சிரிக்க வைத்ததில்லை. ஆனால் கவுண்டமணி முதல் விவேக் வரை சந்தானம் வரை….மற்றவர்களை […]
கத்தரி வெயிலின் கொடுமையைக் கொஞ்சம் நீக்கும், கடல் காற்றை அனுபவித் திருக்கிறீர்களா? அப்படி ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுத்தது “ மை” படம். ஒரு பொட்டலம் சோறு கிடைக்குமா என்று ஏங்கும் ராப்பிச்சையை, உள்ளே அழைத்து விருந்து படைக்கப்பட்டால், எப்படி உணருவான்? அப்படி உணர்ந்திருப்பான், படம் பார்த்த பதினைந்து ரசிகர்களில் ஒவ்வொருவனும்! சுனாமி சுப்பு என்கிற சுப்பிரமணி, பானுமதி, இருவரும் பால்ய வயது நண்பர்கள். பானு படித்து, சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனல் வைத்திருக்கிறாள். சமூகம் சார்ந்த […]
சரத்குமார் நடித்த சூப்பர் படம் ஒன்று ‘சூரியன்.’ அதில் சரத் முதன் முறையாக மொட்டை போட்டிருப்பார். அதோடு பிரபுதேவா பிரபலமாகாத போது சுகன்யாவுடன் ஆடிய ‘ கட்டெறும்பு என்னைக் கடிக்குது ‘ என்ற பாடலும் அதில் தான். ஆனால் அதன் இயக்குனர் யார் தெரியுமா? பவித்திரன்! பல ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் முடித்து, இப்போது பவித்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாட்டுத்தாவணி. சம்பந்தப்பட்ட மாடு படத்தைப் பார்த்திருந்தால் முக்காடே போட்டிருக்கும்! அவலை நினைத்து உரலை இடிப்பது என்பார்கள். […]
ஸ்ரீதரின் “ காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, உத்தரவின்றி உள்ளே வா, கலாட்டா கல்யாணம் “ போன்ற படங்களைப் பார்த்தவரா நீங்கள்? வின்சென்டின் ஒளிப்பதிவு, கோபுவின் நகைச்சுவை வசனங்கள், மெல்லிசை மன்னரின் பாடல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி, நாகேஷ், பாலையா, முத்துராமன், ரமாபிரபா, சச்சு போன்ற இந்திய சாப்ளின்களின் நடிப்பு என, நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட படங்கள். இப்போது அம்மாதிரி இல்லையே என்று பெருமூச்சு வருகிறதா? கொஞ்சம் நிறுத்தி வையுங்கள், ‘ ஒரு கல் ஒரு […]