சிறகு இரவிச்சந்திரன் சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும் •பார்முலாவை நாடோடிகள் படத்தில் கையாண்ட இயக்குனர், இதிலும் அதையே தொடர்கிறார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது, இவர் கை தேர்ந்த ரசிக நாடி இயக்குனர் என்று காட்டுகிறது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இருவர் கதாநாயகர்கள். காற்று அடிக்கும் பெண்ணும் குரூப் டான்ஸ் நடிகையும் கதை நாயகிகள். கரடி வேசம், காண்டாமிருக வேசம் எனப் போடும் ரூம் மேட். ஒண்டு குடுத்தன […]
பசும்புல்வெளியும் மலையும் ஓடையுமாய் பார்க்க அத்தனை இதமாக இருந்தது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த இயற்கைக்காட்சி! அடர் தேன்நிறத்தில் சட்டமிடப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காணப்பட்ட பொன்னிறச் சூரியவொளியின் இளஞ்சூட்டை உணரமுடிந்தது என்றுகூடச் சொல்லலாம். Seeing is Believing! அதை வரைந்தவர் ஓவியர் தர்மேஷ். கெல்சன் என்கிற பெயரில் கடந்த பதினைந்தாண்டுகளாக நிலக்காட்சிகளை மட்டுமே ஓவியங்களாகத் தீட்டிவருகிறார். ஏன் இயற்கைக்காட்சிகளை மட்டுமே ஓவியமாகத் தீட்டுகிறீர்கள்? ”ஒன்று, இயற்கைக்காட்சிகள் மனதை அமைதிப்படுத்தும். இரண்டாவது, எனக்கு அதுதான் வரையத்தெரியும்” _வெகு இயல்பாக உண்மைபேசுகிறார் […]
இன்றைய இளைஞர்கள் தனக்குப் பிடித்ததில் செய்வதில் ஒரு வெறியுடன் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரது மகன் சிங்கப்பூரில் வேலையை விட்டு விட்டு வீடியோ கேமராவைப் பிடித்திருக்கிறான். பல கட்டிட தொழில் நுட்பம் படித்தவர்கள் சால்சா வகுப்புக்குப் போய் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்கள் என்பது நான் அறிந்த உண்மை. அதனாலேயே என்னால் இந்தத் திரைப்படத்தை புரிந்து கொள்ள முடிந்ததோ என்னமோ? வேறு ஏதோ எதிர்பார்த்த திரையரங்கக் கூட்டத்திற்கு பெரும் ஏமாற்றம். அது கேட் கால்ஸாகவும், அசிங்கக் காமெண்டு களாகவும் […]
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=50402191 உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத் திருமதி சுசீலா மிஷ்ரா (படே குலாம் அலிகான் அவர்கள் மறைந்ததும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய கட்டுரை) இசையாகவே வாழ்ந்து, இசையாலேயே இயங்கி இசையோடு தன்னுடைய இருப்பையும் உணர்ந்துகொண்ட மனிதர் நாதப்பிரம்மத்திலும் இணைந்துவிட்டார். கயல் -ஆக இருந்தாலும், சபையில் பாடும் பாடலாக இருந்தாலும், தும்ரியிலிருந்து எழும் காதல் கீதமாக இருந்தாலும், தெய்வீக உணர்வோடு பொங்கும் பஜனாக இருந்தாலும், உஸ்தாத் படே குலாம் அலி கான் […]
ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர். பாங்கு ஒலி கேட்டு நான்கு மணிக்கு எழுந்து ஸுபஹு’வுக்கு செல்ல கிணற்றடியில் குளித்துவிட்டு தொம்தொமென்று மரப்படிகளில் ஏறும் தம்பி அந்தோணிக்கு வாய்க்காதது , “இண்ணல ராத்திரி முழுவன் வயிற்றிலெ வாயு […]
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும். भक्तः कण्णप्पः कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन् मासे द्विवारं कश्चन ब्राह्मणः तत्र गत्वा पूजां करोति स्म। एकस्मिन् दिने कश्चन अनागरिकः व्याधः तत्र आगतवान्। तस्य नाम कण्णप्पः। शिवलिङ्गे तस्य विशेषभक्तिः आसीत्। तस्मात् कारणात् […]
இரவிச்சந்திரன் நவீன நாடக இயக்கம் துவங்கி ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அண்மைக்காலத்தில் நிஜ நாடகக் குழுக்கள், ஆங்காங்கே மண்ணுக்குள் தலை புதைத்த நெருப்புக்கோழிகள் போல இருந்தவை, லேசாக தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. பரிக்ஷா ஞானி, குழு துவங்கி இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை மகா சனங்களுக்கு நினைவுப் படுத்த, மீண்டும் தன் பழய்ய்ய நாடகங்களைப் போடத் தொடங்கியிருக்கிறார். வேறொரு பக்கம் பிரளயன் தன் உப கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முக்கோணத்தின் மூன்றாவது பக்கமாக கூத்துப்பட்டறையின் சந்திரஹரி. […]
இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம். எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும் என்று படித்தோமல்லவா? அதே விதிமுறைதான் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ)க்கும். வாக்கியத்தில் ल्यप्प्रत्ययः உபயோகித்தாலும் क्त्वाप्रत्ययः உபயோகித்தாலும் பொருள் மாறாது . முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும். एतत् सम्भाषणम् उच्चैः पठन्तु – (etat sambhā ṣaṇam uccaiḥ […]