லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்

This entry is part 2 of 6 in the series 30 ஜூலை 2017

நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு […]

”மஞ்சள்” நாடகம்

This entry is part 7 of 16 in the series 9 ஜூலை 2017

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கில் இருக்கைகள் நிரம்பிப் பார்வையாளர்கள் பலரும் நின்றபடி  பார்த்தார்கள் என்பதே முதல் திருப்திகரமான விஷயம்.”சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவுகட்டுவோம்”, என்னும் […]

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

This entry is part 8 of 14 in the series 26 மார்ச் 2017

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே ஒத்துழைக்காமல், முதுமையின் தள்ளாட்டாத்தில்தான் இருந்தார். அசோகமித்திரன், ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.அவரது ஐதாராபாத் வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் கொடுத்த வாழ்க்கைப்பாடங்களே அவரது எழுத்துக்களாய் நம்மிடம் வாழ்கின்றது. அவரது எழுத்துக்களைப்பற்றி, இனி ஒரு வாரமோ, […]

மாவீரன் கிட்டு – விமர்சனம்

This entry is part 1 of 18 in the series 12 பெப்ருவரி 2017

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம். 12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தப்படுகிறான். உடனே ஆதிக்க சாதிகளுக்கு பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாய் அவன் மீது வீனான கொலைப்பழியை சுமத்திவிடுகிறார்கள்.  அதிலிருந்து மீண்டும் அவன் வந்தானா என்பது கதை. அதாவது ஒரு கூட்டத்திற்கு கிடைக்கும் படிப்பை,  தொடர […]

LunchBox – விமர்சனம்

This entry is part 9 of 18 in the series 12 பெப்ருவரி 2017

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய அன்பிலும் கணவன் தன்னிடம் ஆசை கொள்வான் என்கிற மறைமுக எதிர்பார்ப்பே அவளை நகர்த்துகிறது. ஆனாலும் கணவன் தொடர்ந்து அவளை புறக்கணிக்கிறான். ஒரு நாள் அவள் கணவனுக்கு உருளைக்கிழங்கு செய்து அனுப்ப, அவன் மாலையில் ” […]

திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி

This entry is part 3 of 12 in the series 8 ஜனவரி 2017

                                                   முருகபூபதி இலக்கியச்சிந்தனை அமைப்பின்  விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன்  உரையாடியபொழுது,  ” இலங்கை  திரும்பு முன்னர் சென்னையில்  ஓடிக்கொண்டிருக்கும்  அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். ” என்றார். 1981 இல் இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் பொலிஸார் நடத்திய வேட்டையில்  யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டதை  சித்திரிக்கும் ஒரு  இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையும் […]

திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்

This entry is part 6 of 12 in the series 8 ஜனவரி 2017

” அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலும் கணவன்மார்கள் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை .ஏன் ” என்ற கேள்வியை  நண்பர் ஒருவர் திருப்பூர் திரைப்படவிழாவின் ( முதல்நாளில் திரையிடப்பட்டப் படங்கள் அனைத்தும் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை )  படங்களைப் பார்த்து விட்டுக் கேட்டார்.. அவருக்கான பதிலை நானும் சில திரைப்படங்களிலிருந்தே சொன்னேன். “ முஸ்டாங்  “ என்ற துருக்கியப் படம்  ஒரு குடும்பத்தைச் சார்ந்த அடக்கப்பட்ட சகோதரிகள்  ஒவ்வொருவகையிலும்  குடும்பத்தை விட்டு வெளியேறுவதைச் சொல்கிறது. பெற்றோரை இழந்து மாமனாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்ட  பள்ளி […]

ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்

This entry is part 7 of 12 in the series 8 ஜனவரி 2017

.இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ● ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிச் சுய அறிமுகம் செய்து அலுத்து விட்டது. “Mozart Of Madras”, இசைப்புயல், “Musical Storm”, “கிழக்கின் ஜோன் வில்லியம்ஸ்”, “ஒஸ்கார் நாயகன்” இப்படியும் பலபுகழ் கூறி அவரை விழித்து ஏதேனும் எழுதலாம் என்றால், அதையும் நிறையப் பேர் எழுதத் தொடங்கிவிட்டனர். அதையும் தாண்டி, அவரது பாடல்கள் மீது சில ரசனைக்குறிப்புகள் எழுதலாம் என்பதே தற்போதைக்குக் கொஞ்சம் ஆசுவாசமளிக்கின்றது. Lahari Music, Ayngaran Music, Aditya Music, Lahari Music, Sa […]

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

This entry is part 12 of 12 in the series 8 ஜனவரி 2017

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற முதுமொழியில் வரும் ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு மலையாளத்தில் ‘திரைப்படம்’ என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக மட்டத்தில் உயரிய சிந்தனை நோக்கினைக் கொண்டதாகவும் சிறப்பான அறிவுத்தூரிகை கொண்டும் செதுக்கி எடுப்பது தான் இதற்கான காரண இடுகுறிப்பெயர் என்றும் கருதலாம். இது நமது உபகண்டத்தின் நிலைமை. ஆனால் தமிழ்ப் பிராந்திய நிலைமை வேறு. செந்தமிழை இந்த ஆய்வுப் பத்திக்கு மட்டும் […]