Posted inகடிதங்கள் அறிவிப்புகள் கவிதைகள்
அதுவே போதும்
வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்