ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி, ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின், காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள். தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது . ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே. இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை […]
வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.41] அனந்தா! விண்ணகத் தேவரும் விண்டிலர் நின் உண்மை உருவின் வீச்சையும் விரிவையும்! வியப்பென் எனில், அங்கிங்கெனாதபடி நீக்கமற நீள் விசும்பெலாம் நீயே நிறைந்தும் நீயே முழுதும் நின்னை இயம்ப இயலா எல்லையில்லா விஶ்வரூபம் நின் ஸுஸ்வரூபம்! ககன வெளியில் பவனமுந்த பாய்ந்தோடும் தூசித்துகள் போல் காலச்சகடமுந்த கோடி கோடி அண்ட பிரம்மாண்டம் கூடி நின்று நின் திருவுந்தியுள் சுற்றிச் சுழன்று செல்லுதே! நின் பேராளுமையின் எல்லைதான் ஏது பேரருளாளா? உன் ஸ்வாஸமேயான மறைகளாம் […]
வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.31] ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை! எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை! பிறப்பில்லா காளியும் காளையும் உன் உளவாக்கலால் கூடிக் குழைந்து குணத்திரிபால் பல உயிர்களாய்த் தோன்றினர் உன்னிடமே நீர்க்குமிழி போல். குமிழும் நுரையும் அலையும் அரியாமே! ஊனுயிர் உலகம் ஈஶன் பரமனாம் நீயே அன்றோ? ஆழிசேர் ஆறுகள் பெயருரு அற்றுப்போவது போல், மலைத்தேனுள் வெவ்வேறு மகரந்த மலரின்பம் மறைந்து செறிந்திருந்தாற் போல், உயிர் உலகம் ஊழி உம்பர் உம்பர்கோன் ஏனையோர் பலரும் என்றும் மாறா […]
வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.18] முனிகள் காட்டிய பல வழிகளுள் அடிவயிற்று அக்கினியில் தூலமாய் நும்மைத் தொழுவர் சிலர். சூக்கும நோக்குடை ஆருணிகள் உயிர் நாடிகளின் பிறப்பிடமாம் நுண்ணிய இதயவெளியில் நும்மைத் தொழுவர். முடிவிலியே! அதிசூக்கும யோகிகள் சுழுமுனை நாடி வழி உயிரை மேலேற்றி பரமனுமது உன்னத இடமாம் பிரும்மரந்திரக் கபால வெளியில் கலப்பர். அங்ஙனம் அடைந்தோர் மீண்டும் வீழார் இப்பிறப்பிறப்பு சுழலில். [ஶ்ரீம.பா.10.87.19] பற்பல விசித்திர யோனிகள் பிறப்பித்து அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்து நீக்கமற ஸமமாய் நிறைந்து […]
(அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். இந்தக் கடிதம் ஒரு நினைவூட்டலாகவும், என் பணிவான வேண்டுகோளாகவும் இருக்கிறது. என் ஶ்ருதி கீதை (ஸ்ரீமத்பாகவதம் 10.87.1–50) தமிழ் மொழிபெயர்ப்பை திண்ணை இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பரீக்ஷித் மன்னரின் கேள்வி – அனைத்து யுகங்களுக்கும் பொருந்தும் ஒரு சிந்தனை! பரீக்ஷித் மன்னர், ஶ்ரீ ஶுக மகரிஷியிடம் கேட்டார்: “மனமும், வார்த்தைகளும் பற்ற முடியாத பரம்பொருளை வேதங்கள் எவ்வாறு வர்ணிக்கின்றன? சொற்களாலும், பொருளாலும் வரையறுக்க முடியாத, முக்குணங்களையும் கடந்து […]
குரு அரவிந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட பாரதி இராசநாயகம் அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி […]
கே.எஸ்.சுதாகர் மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில்பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப்பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில்பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல்,தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணிசஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் […]
பாவண்ணன் மகத்தான கனவு நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத் தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணும் கொண்ட சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதுகைமோனையோடு அமைந்திருந்த புத்தகத்தலைப்பும் வசீகரமான அட்டைப்பட சித்திரமும் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டின. உடனே அப்புத்தகத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களிலேயே படித்தேன். அந்தச் சிறுகதைத்தொகுதியை எழுதியவர் […]
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள். இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும் நான்கு எழுத்தாளர்கள். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, […]
முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக்கல்லூரி, கடலூர் – 1. தமிழில் இலக்கியங்கள் காலந்தோறும் ஒவ்வொருவகையில் உருவாகிக் கொண்டே வருகின்றன. இதனை காலஅடிப்படையில் சங்கஇலக்கியங்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள், அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை இலக்கியங்கள், கதை இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் என உருவாகி வருகின்றன. அதனதன் தன்மைகளுக்கும் அமைப்புகளுக்கும் பாடுபொருளுக்கும் ஏற்ப இவற்றைப் பிரித்தறிய முடிகிறது. இலக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வியலையும் அவ்வாழ்வியல் மேம்படுவதற்கானப் பாதைகளையும் எடுத்தியம்பும் […]