நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா

This entry is part 6 of 33 in the series 11 நவம்பர் 2012

        என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் ‘கோவில்மாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார். ”ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார், சிந்தனையோ சொல்லோ,  இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ, மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.

This entry is part 7 of 31 in the series 4 நவம்பர் 2012

    காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு […]

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

This entry is part 20 of 31 in the series 4 நவம்பர் 2012

சந்திப்பும் இருநோக்கும்….   ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் […]

நினைவுகளின் சுவட்டில் (103)

This entry is part 18 of 31 in the series 4 நவம்பர் 2012

  சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35

This entry is part 10 of 31 in the series 4 நவம்பர் 2012

  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை   கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி = 60 நிமிடங்கள் 24 மணி =1440 நிமிடங்கள் இப்படியே கணக்கு போட்டு 60 வருடங்கள் வாழ்ந்தால் ஏறத்தாழ 31 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் வருகின்றது இதில் எத்தனை நிமிடங்கள் பிறருக்கு உபயோகமாக நாம் வாழ்கின்றோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்கள் கணக்குக் கூட வேண்டாம். ஒரு நாள் மட்டும் […]

மீட்சிக்கான விருப்பம்

This entry is part 21 of 34 in the series 28அக்டோபர் 2012

எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா  துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது  பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த […]

மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு

This entry is part 34 of 34 in the series 28அக்டோபர் 2012

மணி.கணேசன் தமிழ்க்கவிதையின் நோக்கும் போக்கும் தற்காலத்தில் நிரம்ப மாறுதல் பெற்றுவருகின்றன.பின்நவீனத்துவக் காலக்கட்ட எழுச்சிக்குப்பின் அதன் உருவம் மற்றும் உள்ளடக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கம்,புத்தாக்க முயற்சி,உளவியல் சிந்தனை காரணமாக நவீனத் தமிழ்க் கவிதைகளின் பாடுபொருள் தளங்களும்,படிமம்,குறியீடு,இருண்மை முதலான உத்திமுறைகளும் விரிவடைந்துள்ளன.இவை வரவேற்கத்தக்கன என்றாலும் உப்புச்சப்பில்லாத தன்னுணர்ச்சிகளும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத தன்மைகளும் கவிதைகளைச் சாதாரண மக்களிடமிருந்;து விலக்கி வைத்துள்ளன.ஏனெனில்,புரிதலும் அதன் வழிச் செயல்படுதலும் இலக்கியப் படைப்பின் உயரிய குறிக்கோள் மற்றும் வெற்றி எனலாம். அந்த […]

தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்

This entry is part 23 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் த்மிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள  வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை  ஒரு புதிய ரயில் நிலையம்தான்  பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், […]

பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்

This entry is part 19 of 34 in the series 28அக்டோபர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      கற்களைக் குறித்த பல்வேறு கதைகள் மக்களின் வழக்காறுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கதையினை நமக்கு எடுத்துரைக்கின்றன. நடைபாதையில் இரு கற்களை நட்டு அதன் மீது ஒரு கல்லைப் படுக்க வைத்திருப்பார்கள். இது சூலோடு இறந்து போன பெண்ணின் நினைவாக நடப்பட்ட கல்லாகும். இதனைச் சுமைதாங்கிக் கல் என்று கூறுவர். நிலத்தின் நான்கு எல்லைகளைக் குறிப்பிட ஊன்றப்படும் எல்லைக்கல் அளவுக் […]

தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்

This entry is part 17 of 34 in the series 28அக்டோபர் 2012

சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ள,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது. மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும்  ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல […]