மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25

This entry is part 6 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts   பாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை.  Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று..  பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு […]

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்

This entry is part 2 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

MS விஸ்வாநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-ல Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப்பார்த்து விட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து தலயக்காட்டிட்டு போறார் சில படங்கள்ல :-)   […]

படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)

This entry is part 37 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

(‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து) – வே.சபாநாயகம். திரு.பழமன் அவர்களுக்கு, 2008ல் ‘இலக்கிய பீடம்’ பரிசு பெற்ற உங்களது ‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் படித்தேன். கொங்கு நாட்டுப் பின்னணியில் நாவல்கள் எழுதிய திரு. ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்குப் பிறகு, அப்பகுதி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அசலாகவும் எளிய நடையிலும் பதிவு செய்திருப்பது நீங்கள்தான் என நினைக்கிறேன். போட்டிப் பரிசுக்கான நவீன நாவல் உக்திகள், சாமர்த்தியம் காட்டும் சொல் சிலம்பங்கள், திடீர்த் திருப்பங்கள், வாசகனை மிரட்டும் கற்பனைப் புனைவுகள் ஏதுமின்றி […]

பழமொழிகளில் ‘வெட்கம்’

This entry is part 36 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உணர்ச்சிகளில் மிகவும் நுட்பமானதும் குறிப்பிடத் தகுந்ததுமாகவும் விளங்குவது வெட்கம் என்ற உணர்ச்சியாகும். செய்யத் தகாத செயல்களைச் செய்ய நேரிடுகின்றபோதோ பிறர் செய்கின்ற போதோ அவ்வாறு செய்பவர்களைப் பார்த்து, ‘‘உனக்கு வெட்கமில்லை’’ என்றோ, ‘‘நான் இதுக்காக வெட்கப்படுகிறேன்’’ என்றோ கூறுகின்றனர். வெட்கம் என்றால் என்ன? பழிபாவங்களுக்கு நாணுதலே வெட்கமுறுதல் எனும் உணர்வாகும். ஆனால் பெண்களுக்கே உரிய வெட்கம் என்பது போன்றதே என்றாலும் இதிலிருந்து சற்று வேறுபட்டதாக அமைந்துள்ளது. தலைவனும் தலைவியும் […]

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை

This entry is part 32 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை பூங்காவனத்தின் 09ஆவது நுழைவாயிலால் உள்ளே நுழைந்தால் உங்களுடன் ஒரு நிமிடம் எனும் பக்கத்தில் மனித இனத்தின் அறிவு முன்னேற்றத்தின் பிரதிபலனாக விளங்கும் கணினி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பன மனிதனுக்கு அன்றாடத் தேவைகளாகிவிட்ட அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டாலும், அதன் அடுத்த பக்கம் என்றொரு தீமை பயக்கக்கூடிய ஒரு பக்கமும் உள்ளது என்பதை தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது பேஸ்புக்கிலும், மெகா சீரியல்களிலும், தெலைபேசி நீண்டநேர உரையாடல்களிலும் […]

அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “

This entry is part 31 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  சிறகு இரவிச்சந்திரன். பாலியல் கதைகளைத் தாண்டி, எப்போதாவது வணிக இலக்கிய(!) இதழ்களில், நல்ல கதைகள் வரும். அப்படி நான் கண்ணுற்று எழுதியதுதான் சுகுமாரனின் ‘சர்ப்பம் ‘, பிரபஞ்சனின் ‘ மரி என்கிற ஆட்டுக்குட்டி ‘. எந்வொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் நூலகத்திற்குப் போகிறேன். இன்றும் அப்படித்தான் போனேன். ஆனால் அதிர்ஷ்டம் பாருங்கள்! ஒரு நல்ல கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஒரு குறை. கதை தமிழில் என்றாலும், மூலம் மலையாளம். வந்தது உயிர்மை ஜூலை […]

NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

This entry is part 25 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  மனக்குகை ஓவியங்கள் :சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள் இரு சம்பவங்கள் 1. சகுனி கோபப்பட்டதாக பாரதத்தில் சொல்லப்படவில்லை. பொதுபுத்தியில் சகுனி மோசமானவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளான்…. இன்றைய ஆப்கானிஸ்தான் அன்றைய காந்தாரம்., காந்தாரி என்பவள் அவர்களுக்கு குலதெயவம். பிதா மகன் பீஸ்மர்.  பீதாம்பரங்களையும் வைர வைடூரியங்களையும்  காட்டி குருடனுக்கு காந்தாரியை இல்லத்தரசியாக்கினான்..அவர்கள் குல தெயவ வழிபாட்டில் உறுதியானவர்கள், ஆகவே ஆட்டை நிறுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள். இதை அறிந்த பிதாமகன் தன்னுடைய பெரும் படையை  அனுப்பி காந்தார நாட்டு […]

சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்

This entry is part 8 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  எனக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று…நிலாநிழல் !  இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய்  வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன்.   கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் […]

வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதி

This entry is part 30 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்த்து..குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும்,கொங்கு வட்டாரப் பிரயோகம் […]

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

This entry is part 29 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’ The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது. 1. Nightwood – Djuna Barnes. 2. A tale of a Tub – Jonathan swift 3. The Phenomenology of the sprit -G.F. Hegel 4. to […]