எஸ்ஸார்சி வளவதுரையன் என்றும் மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள் சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர். கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள்.பதிப்பகத்தார் வளவதுரையன் பற்றித்தரும் குறிப்பு நிறைவாக வந்திருக்கிறது. கடலூர் கவிஞர் அன்பன் சிவா. கவிஞர் அவருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பித்து இருக்கிறார். என்னுரையில் வளவதுரையன் கம்பனின் ‘ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப்பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் […]
ஜெயப்பிரியா,முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) (அண்ணாமலை பல்கலைக்கழகம்), விழுப்புரம் – 605401. ஆய்வுச்சுருக்கம்: புலம்பெயர்வு என்னும் பண்பாட்டு இடர்ப்பாடு அயலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு தரும் வாழ்வியல் அனுபவங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அகதி வாழ்நிலையின் அவலங்களை பண்பாட்டு நிலையிலும் பணியிடச்சூழல் அடிப்படையிலும் இக்கட்டுரை விளக்கியுள்ளது. முதன்மைசொற்கள்: பண்பாடு, மொழி, உணவு, இசை, சமயநம்பிக்கைகள், பணிகள், கருவிகள். பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் […]
[எஸ்ஸார்சியின் ”ஞானவாபி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு முன்பணமும் தந்துவிட்டுக் கொரானோ வந்ததால் வராதவர், வீட்டை விற்பனை செய்ய வரும் தரகரின் மறுபக்கம், வீட்டுப் பூட்டைத் திறக்க வந்த பாய் வேலை செய்யாததால் காசு வாங்க மறுப்பது, குடித்தனம் வருபவரின் தொல்லைகள், […]
முருகபூபதி சினிமாவுக்கு அத்திவாரம் கதை. ஒரு கட்டிடம் பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால் உருவாகின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் பல சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகியிருக்கின்றன. பாலுமகேந்திரா சிறந்த சில சிறுகதைகளை, கதை நேரம் என்ற வெப்சீரியல் தொடராக வரவாக்கினார். அதன் தொடக்கத்தில் வரும் எழுத்தோட்டத்தில் மூலக்கதையை எழுதியவரின் பெயரையும் காண்பிப்பார். கமல், தனது குருதிப்புனல் திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில், அக்கதைக்கே சம்பந்தமில்லாத எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் […]
அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.
சுப்ரபாரதிமணியன் காசு வேலாயுதன்பத்திரிக்கையாளர் என்ற முறையில் பலம் வாய்ந்தவர். பத்திரிகையாளர் என்பவர் படைப்பிலக்கியம் பொறுத்த அளவில் பலவீனமானவர். பத்திரிகை பாணியும் எழுத்துமுறையும் படைப்பிலக்கியத்தில் மரியாதை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பத்திரிகையாளர் என்ற முறையில் தான் பெற்ற அனுபவங்களை ஒரு அருமையான நாவலாக கொடுத்த வகையில் அவர் ஒரு பலமான பத்திரிக்கையாளராக விளங்கியதை இந்த நாவல் நிருபித்திருக்கிறது. “ பொழுது கால் மின்னல்” என்ற ஒரு கொங்கு நாட்டு பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு நாவலை எழுதி சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னால் அவர் இந்த இரண்டாவது […]
முருகபூபதி மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால், இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும் வீரகேசரி சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம் துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக வழங்கியது. வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும், படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு வந்திருக்கும் வீரகேசரி […]
_ லதா ராமகிருஷ்ணன் மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. Dr.K.S. உயிரோடு இருக்கும்போதே பிரசுரத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். புத்தகத்தைப் பார்த்தி ருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைக் கட்டுரைக ளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல்வேறு தொகுப்புகளில் அவை வெளியாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக […]
நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகி றார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ் ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் ஒன்றி ரண்டு நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தவர்கள். சஃபியும் நிறைய எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்திருக்கிறார். இப்போது சஃபியின் முனைப்பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.
புதுப்புனல் (சமூக – இலக்கிய மாத இதழ்) திரு.ரவிச்சந்திரன் புதுப்புனல் பதிப்பகம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனின் பங்கு கணிசமானது. சிறுகதைத்தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைத்தொகுப்புகள், திறனாய்வுக்கட்டுரைகள் என நூற்றுக் கணக்கான நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழின் குறிப்பிடத் தக்க புதின எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புனைவு, அ-புனைவு நூல்கள் […]