தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சாவு விருந்து

சேயோன் யாழ்வேந்தன் பழத்தில் ஊதுபத்தி மணத்துப் புகைகிறது வாழையிலையில் கோழிக்குழம்பு மணத்துக் கிடக்கிறது பந்தலில் முறுக்கும் பிஸ்கட்டும் முறுக்கிக்கொண்டு ஆடுகின்றன இவற்றில் ஒன்று கிடைத்திருந்தாலும் செத்திருக்கமாட்டான். --------------------------------- seyonyazhvaendhan@gmail.com

கடந்து செல்லும் பெண்

    நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.   நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை…

அந்தக் காலத்தில்

  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில்   கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான்   கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி   தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா…

இதுவரை சமர்பிக்கப்பட்டவை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி களவு செய் கன்னியின் கற்பை களங்கம் செய்; மன்னிப்போமா தெரியவில்லை மறந்துவிடுவோம் கண்டிப்பாக! ஊழல் செய் உதிரி பாகம் தயாரித்தல் தொடங்கி உலக விளையாட்டு வரை; கவலை இல்லை கவனிக்க நேரமில்லை!…

மழையென்பது யாதென (2)

சேயோன் யாழ்வேந்தன்   மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு   மழையென்பது யாதென சின்ன வயது சேயோனிடம் கேட்டால் அம்மா வடை சுடுவதற்கு சற்று முன் வருவதென்பான்…

கலப்பு

நாகபிரகாஷ் காற்றுப்பிடிப்போடான நுறைப்பு பெருக்கமாக கருதப்படும் கோடைக்கால நீர்பிடிப்புப் பகுதியில் நாம் முட்டாள் அவர்களின் மழைமேகங்களில் சாத்தானும் குடியிருக்கக்கூடும் தெய்வங்களுடன் சேர்ந்து மறைவாக நிறையச்சேமிக்கும் பெருந்தனக்காரன் வீட்டில் நீர் காவல் இலவசம் ஊர் தந்தாகவேண்டியது…

பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் அதன் பரிமாணம் விரிகிறது. ஆற்றாமையாயும், ஆனந்தமாயும், துக்கமாயும், ஏமாற்றமாயும் எத்தனையோ அர்த்தங்களில்…

இயல்பான முரண்

சத்யானந்தன் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து…

கவிதைகள்

சாயாசுந்தரம்   1. ஒரு அண்ணனுக்காக ஒரு நிறைவேறா நீண்ட நாள் கனவு... தூக்கி வைத்து கொஞ்ச நிலவு காட்டி சோறூட்ட பங்கு பறித்து சண்டை போட ஜடை பற்றி இழுக்க.. கை பிடித்து…

கைவிடப்படுதல்

சோழகக்கொண்டல் வாசல் வந்தமரும் சிட்டுகளுக்காக நான் வீசியெறியும் நெல்மணிகள் பயந்து எழுந்து பறந்து மறையும் குருவிகள்   யாருக்கும் வேண்டாமல் வீதியில் கிடக்கின்றன எனது நெல்மணிகள்   நதியின் நீரைக் கரைதழுவும் விளிம்பில் நூறு…