Posted inகவிதைகள்
நிலா
ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்'பாப்கார்ன்' தின்று'கோக்' குடித்தபடி"அம்மா, பசிக்குது" என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா