செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4

This entry is part 13 of 30 in the series 17 பிப்ரவரி 2013

ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப்  படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் […]

மலர்மன்னன் – மறைவு 9.2.2013

This entry is part 25 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆண்மக்களே காரணம்’ என்று.  .’அந்நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை […]

தலிபான்களின் தீவிரவாதம் சரியா

This entry is part 29 of 31 in the series 10 பெப்ருவரி 2013

1)இது சாதாரண பாய்முடையும் இஸ்லாமிய நம்பிக்கையுள்ள முஸ்லிம் சகோதரியின் தீவிரவாதமல்ல. ரோட்டோர கடைகளில் தனது உழைப்பை செலவளிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சகோதரனின் தீவிரவாதமுமல்ல. இது தலிபான் தீவிரவாதத்தின் ஒரு காட்சி. 2)ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து 130கிமீ தொலைவிலுள்ள இரண்டாயிரம் நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 175 மற்றும் 120 அடி உயரமுள்ள புத்த சிலைகளை தலிபான்கள் ராக்கெட் ஏவுகணைகளை டைனமேட் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தகர்த்து அழித்தனர். காபூலில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ ஆறாயிரம் புத்தச் சிலைகளையும் அழித்தொழித்தனர்.தலிபானின் […]

பலுச்சிஸ்தான் இந்துக்களின் வெளியேற்றம்

This entry is part 2 of 31 in the series 10 பெப்ருவரி 2013

முகம்மது அக்பர் நோட்டேஜை “சிறுபான்மையினர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களது மத நம்பிக்கையும், ஆன்மீகமும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களது வழிபாட்டு உரிமையில் எந்த வித இடையூறும் இருக்காது. அவர்களது கலாச்சாரம், மதம், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும். பாகிஸ்தானின் குடிமக்கள் என்ற அளவில், அவர்களது ஜாதி, மதம் ஆகிய எந்த விதமான வகையிலும் பாரபட்சம் காட்டப்படாது” என்று குவாயிதே ஆஸம் முகம்மது அலி ஜினா நியு தில்லியில் ஜூலை 14, 1947இல் […]

பௌத்த கோவில்கள் மீது கொரிய கிறிஸ்துவர்களின் தொடர்ந்த அட்டூழியம்

This entry is part 1 of 31 in the series 10 பெப்ருவரி 2013

எமி ஹயகாவா பௌத்த கோவில்களையும் அதன் ஆவணங்களையும் கொரிய கிறிஸ்துவர்கள் அழிப்பதும் தீ வைத்து கொளுத்துவதும் அதிகரித்து வருகிறது. நாம்டேமுன் வாசல் என்ற இடத்தில் நடந்த பேரழிவுக்கு பிறகு கலாச்சார சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் பாதுகாக்க பல சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டாலும், கொரியாவின் பௌத்த கோவில்களையும் அதன் கலாச்சார சொத்துக்களையும் தீவைத்து அழிப்பதும், நாசம் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. 2012 அக்டோபர் 4ஆம் தேதி ஹ்வாம்ஸா கோவிலின் காக்வாங்ஜெஒன் (Gakhwangjeon Hall of Hwaomsa Temple in Gurye […]

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -3

This entry is part 20 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  சொல்லாமல் கொள்ளாமல் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தான் போனேன்.  இருந்தாலும், போனபோது செல்லப்பா வீட்டில் இருந்தார் சந்தோஷமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மாதிரி முன்னாலேயே சொல்லி நேரம் குறித்து வாங்கிக்கொண்டு போவது எனபது தெரியாத காலம். அத்தோடு அவர் இருந்தது மட்டுமல்லாமல் அங்கேயே நான் போன தருணத்தில் இலங்கையிலிருந்து சிவராமூவும் அங்கு இருக்க நேர்ந்தது, என்ன சொல்ல.. எல்லாம் நேர்ந்து கொள்கிறதே. தருமு சிவராமுவின் கவிதைகளும் சொல்லும் நடையும் போன்ற தமிழ்மொழி, உரை நடை […]

புதியதோர் உலகம் செய்வோம் . . .

This entry is part 13 of 31 in the series 10 பெப்ருவரி 2013

வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்: புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம் இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம் – பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம் மனித குல வரலாற்றில் அன்றும், இன்றும், என்றும் புதிய உலகம் படைக்கக் கனவு காண்பவர் ஒரு சிலர் இருந்த […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44

This entry is part 12 of 31 in the series 10 பெப்ருவரி 2013

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல   பூலோக யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார் இறைவன் தனியாக இல்லை துணைவியுடன்தான் புறப்பட்டார் புறப்படும் முன்னர் இறைவனுக்கும் இறைவிக்கும் வாக்குவாதங்கள். கணவனின் விளையாட்டுப் புத்தியை மனைவி அறிவாள். எனவே என்ன நேரிடினும் சக்தியை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் தேவியின் வேண்டுகோள். இறைவனும் சிரித்துக் கொண்டே புறப்பட்டுவிட்டார். திருவிளையாடலில் மிகச் சிறந்தவர் ஆயிற்றே. பிரபஞ்சமே அவர் விளையாட்டில் விளைந்த ஒன்றுதான். பாம்பு அணிகளை அகற்றிவிட்டு ஜடாமுடியுடன் காவியுடையில் […]

அஞ்சலி – மலர்மன்னன்

This entry is part 4 of 31 in the series 10 பெப்ருவரி 2013

ச.திருமலைராஜன் தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய தேசீயத்திற்கும், இந்து மதத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் இவர்கள் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராக்வன் மறைவின் பொழுது பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்ட மடலை இரு தினங்களுக்கு முன்பாக அனுப்பியிருந்தார். […]

மலர்மன்னனுடன் சில நாட்கள்

This entry is part 3 of 31 in the series 10 பெப்ருவரி 2013

ஒரு நொடிப் பொழுதானாலும் சிலருடன் பழகும் பொழுது பல ஆண்டுகள் பழகிய உணர்வு ஏற்படுகின்றது. கடந்த ஒருமாதமாகத்தான் மடல் மூலம், தொலை பேசியின் மூலம் பழகினோம். இன்று அவர் பறந்து சென்று விட்டார். இந்த குறுகிய காலத்தில் எங்கள் நட்பு மனம்விட்டுப் பேசும் அளவில் வளர்ந்திருந்தது. அரசியல் உலகிலிருந்து ஆன்மீகம் வரை பேசினோம். இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தால் ஏன் பேசவில்லை என்று கேட்பார். அவர் எனக்கு எழுதிய மடல்களும் அதிகம். அவரை “சாமியாரே” என்று கூப்பிடும் […]