சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா [அணுசக்திப் பேரவை முதல் அதிபதி] ‘சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் […]
மூளைக்குள் கடவுள் வீடியோ இது பிபிஸி ஆவணப்படம். இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை. இதன் முதல் பகுதி மட்டுமே இங்கே உள்ளது. இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவரும் ரூடி: நான் இறந்துவிட்டதாகவும் நான் நரகத்துக்கு சென்றதாகவும் நினைத்தேன். க்வென்: என்னுடைய மகனை கடவுள் என்று நினைத்திருந்தேன் பெர்னி: (க்வெனின் கணவர்) அப்புறம் பார்த்தால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவள் மேரி என்றும், சின்ன சார்லி (மகன்) கிறிஸ்து என்றும் நினைத்திருந்தாள். குரல் (பார்பரா ஃப்ளைன்): […]
நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது புதிதாக வளர்பவை. குறைகளும் ஆசைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றாக இருந்தே தீரும். ஒரு மனதின் சம நிலை மிகவும் பாதிக்கப் படுவது இந்த இரண்டினால் தான். மாற்றுத் திறனாளிகள் […]
Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை. The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது! அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்! பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்! நாம் உட்பட வாழும் எல்லா உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன! விக்டர் கில்லிமின் [Victor Guillemin] Fig. 1 Radiation Exposure கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க […]
1) சூழலியல் அரசியலை தன் எழுத்தின்வழி ஆய்வாளர் மா.அமரேசன் எழுதிச் செல்கிறார்.இயற்கையின் சமன்குலைவு இதன் மையமும் விளிம்பும் சார்ந்த பார்வையாக மாறியுள்ளது.பெளதீகச் சூழலுக்கும் மனிதன் உருவாக்கும் பண்பாட்டுச் சூழலுக்கும் இடையிலான முரணும் விலகலும்நிகழ்ந்தவண்ணம்உள்ளது.பெளதீகச்சூழல்இயற்கைச்சார்ந்தது.நிலவியல்,தாவரங்கள்.வனங்கள்,காணுயிரிகள்,நீராதாரம்,காலநிலை,காற்றின் தூய்மை என விரிந்து செல்கிறது. மனித உழைப்பின் ஊடாக உருவாகியுள்ள விவசாய உற்பத்தி முறைகள் ,நகர உருவாக்கம் கட்டமைத்த வாழிடங்கள் , நம்பிக்கைகளின் வழியிலான சமயம் சாதி வாழ்வியல் சடங்கியல்கள் என பண்பாட்டுச் சூழல் உருவாகிறது.பிறிதொரு நிலையில் சொல்லப் போனால் உயிருள்ள ஜீவராசிகளுக்கும் […]
கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் […]
பல பெரிய மேற்கத்திய சில்லரை வியாபாரிகள் இந்தியாவின் 120 கோடி ஜன சந்தையால் கவரப்பட்டு தங்களின் வியாபாரங்களை இந்தியாவில் திறக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றன. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் இந்தியாவில் கடை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். உண்மையில் வியாபார உலகில் இது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரக் கூடிய ஒரு முடிவு. நம்மில் மிச்சமிருக்கும் சில அடையாளங்களை நீக்கிவிடும் வாய்ப்புள்ள ஒரு மிகப் […]
ஆர் கோபால் வி எஸ் ராமச்சந்திரன் என்ற அறிவியலாளரை பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியாது என்று கருதுகிறேன். ஆகவே அவரை பற்றிய சில அறிமுக வார்த்தைகள். விலயனூர். எஸ்.ராமச்சந்திரனது விக்கி பக்கம் அவரை பற்றிய ஏராளமான தகவல்களை தருகிறது. http://en.wikipedia.org/wiki/Vilayanur_S._Ramachandran சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை இவரை 1997இல் உலகத்தில் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தது. 2011இல் […]
– கெரபொத்தா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் […]