தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

This entry is part 3 of 38 in the series 20 நவம்பர் 2011

சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1

This entry is part 1 of 38 in the series 20 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா ——— வணக்கம் நண்பர்களே இரண்டுவருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நண்பரொருவர் புதுச்சேரியைச் சேர்ந்த திராவிடப்பேரவை பொதுசெயலாளர் திரு. நந்திவர்மன் என்ற நண்பரை அறிமுகப்படுத்தினார். இச்சந்திப்பின்போது எனது நீலக்கடல் நாவலை அவருக்கு அளித்தேன். அவர், தாம் ‘The New Indian Express’ க்கென எழுதிய கட்டுரைகளின் தொகுப்பொன்றை ( Tamil Civilization ) எனக்கு அளித்தார். பிரான்சுக்குத் திருப்பியதும் அக்கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தபொழுது அவற்றுள் The Grandeur of Senji port என்ற கட்டுரை எனது கவனத்தை பெற்றது. […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 19

This entry is part 11 of 38 in the series 20 நவம்பர் 2011

ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் சென்ற திசை அல்லது இலக்கு மாறு பட்டிருக்கலாம். வேட்டையாடுவதும், துரத்துவதும், தப்பிப்பதும், இந்நடவடிக்கைகள் ஈடேறும் வரை எதிரி குறித்த அச்சமும் குறிப்பான அடிப்படை இயல்புகள். அவன் ஒரு சமூகமாக வாழத் துவங்கிய போதும் இவ்வியல்புகள் புதிய வடிவத்தை அடைந்தனவே ஒழிய அடிப்படையில் மாற்றம் இல்லை. துரத்துவதும் வேட்டையாடுவதும் சில விதிகளுக்கு உட்பட வேண்டிய தேவையை […]

இதுவும் அதுவும் உதுவும் – 5

This entry is part 15 of 38 in the series 20 நவம்பர் 2011

மைக்கேல் ஓ’லியரியை விமானப் போக்குவரத்துத் துறையின் துக்ளக் என்று தாராளமாகச் சொல்லலாம். ஐரிஷ்காரர். ஐரிஷ்காரர்களுக்கே உரிய குண நலங்களுக்குச் சொந்தமானவர். இதில் முக்கியமனது, பிரிட்டீஷ்காரர்கள் புனிதமானது என்று மதிக்கிற எல்லாவற்றையும் தூக்கிக் கடாசுகிற துடிதுடிப்பு. இங்கிலீஷ்காரர்கள் உயிரினும் மேலாக மதிக்கிற (மதிக்கிறதாகச் சொல்கிற) மரியாதையாகப் புழங்குவதை காலால் மிதித்து விட்டுச் சிரிக்கிற ஐரிஷ் குணம் அது. கடைந்தெடுத்த கருமித்தனம், நாலு காசு சம்பாதிப்பதில் நாட்டம் என்று ஆரம்பித்து பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே போகிற குணமும் அதில் […]

இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?

This entry is part 16 of 38 in the series 20 நவம்பர் 2011

(கட்டுரை -1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் திண்ணையில்  (ஜுலை -ஆகஸ்டு 2007) எழுதியது போல்,  “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன செல்வீக ஜப்பானே இப்படி அணு உலைப் பெருவிபத்தில் தவிக்குது என்றால்”  நிலையற்ற அரசாங்கம் ஆளும் இந்தியாவில் எப்படிப் பொது மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து […]

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

This entry is part 41 of 41 in the series 13 நவம்பர் 2011

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். இதில் கண்மூடித்தனமான […]

கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 2 of 41 in the series 13 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்கிற பிரச்சினையைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டபோது குறிப்பாக யூதர்கள் பலர் கைதானபோது இவரும் பிறப்பால் யூதர் என்ற நிலையில் கைது செய்யப்படவேண்டியவர். ஸ்டாலின் மரணம் குறித்து இவரிடம் சில உண்மைகளிருந்தன. எரென்பர்க் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளக்கூடியவராக இருந்தார். அவற்றில் பிரான்சுநாடும் ஒன்று. அவருடைய பாரீஸ் நண்பர்களில் ழான் […]

ஒரு வித்தியாசமான குரல்

This entry is part 9 of 41 in the series 13 நவம்பர் 2011

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த பத்து வருடங்களாக இடைவிடாது கேட்டு வந்த இரைச்சல், நாமாவளி தமிழினத் தலைவா போற்றி, கலைஞரே போற்றி, முத்தமிழ்க் காவலரே போற்றி, இன்னும் எத்தனை போற்றிகளோ, மாதிரிக்கு ஒன்றிரண்டு தந்தால் போதாதா, அந்த இரைச்சல், தமிழகம் முழுதும் கேட்டு வந்த அந்த இரைச்சல் இப்போது கழகக் கூட்டங்களோடு, அறிவாலயத்தோடு முடங்கிக் கிடக்கிறது. முன்னரோ கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுகவினரும் தவிர மற்ற எல்லோரும் […]

செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?

This entry is part 32 of 41 in the series 13 நவம்பர் 2011

[Chernobyl Radioactive Problems After 20 Years] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின! ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம் வெடித்து, செர்நோபில் அருகிலே நிர்மூல மானது! பாரத அணுமின் னுலைகளில் பாதுகாப்புகள் மிகுதி! யந்திரச் சாதனம் முறிந்து போவதும், பணியாளர் நெறிதவறி யியக்குவதும், கட்டுப்பாடுகள் தட்டுத் தடுமாறுவதும் அபாய வேளையில் ஆற்றல் […]

இதுதான் உலகமென

This entry is part 39 of 41 in the series 13 நவம்பர் 2011

“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….” எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள். எல்லாருக்கும் உண்டு…எல்லாருக்கும் உண்டு…தர்றேன்…தர்றேன்… அத்தனபேருக்கும் தந்துட்டுதான் போவேன்…. சார்…எனக்குத் தரலை…எனக்குத் தரவேல்ல…இந்தக் கைக்கு ஒண்ணு குடுங்க சார்… சார்…சார்…என்ற அந்தத் தெளிவான அழைப்பு இவனை அதிசயப்படுத்தியது. எல்லோரையும் முந்திக் கொண்டு முகத்துக்கு முன்னால் தெரிந்த அந்தக் […]