கோவிந்த் கோச்சா… பளீர் என்ற ஒளிபரப்பு… எரிச்சல் படுத்தாத வணக்கம்ம்ம்ம்ம்ம்ம் என்று நம்மளை கொல்லாத, இனிய புத்தும் புதிதான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள்…. எண்ணத் துணிவு, வண்ணத் தெளிவாக, செய்திகளை பாரபட்சமின்றி உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை டிவிக்கு ஒரு சபாஷ். ஹிந்தியில் இருக்கும் சில செய்தி சேனல்கள் பார்த்து பெருமூச்சு மட்டும் விட்டு வந்த தமிழர்களுக்கு நிம்மதியான ஒரு சேனல். இதில் விசேஷம் என்னவென்றால் இதை இணையம் மூலமாகவும் அதே நேரத்தில் – அதாவது டிவியில் […]
ஹெச்.ஜி.ரசூல் காலச்சுவடு செப்டம்பர் 2011 இதழில் ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ என்னும் தலைப்பிலான களந்தை பீர்முகம்மதுவின் எழுத்துப் பதிவு மிகவும் நியாய பூர்வமாக அமைந்திருந்தது. ஒரு படைப்பாளியின் வலியைத் தனது வலியாக உணர்ந்து எழுதியதாக உணர்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் அதிகாரத்தின் வன்மத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த காலச்சுவடுக்குப் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்து உள்ளபடியே நன்றி கூறிக்கொள்கிறேன். இப்பிரச்சினை குறித்து இன்னும் சில கூடுதலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பத்மநாபபுரம் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்புக்குப் […]
ஆப்பிள் பெருநகர். பெரிய ஆப்பிள் என்று அழைக்கப் படும் நியு யார்க். ஒரிஜினல் தூங்கா நகரம். காலை இரவு என்று வேறுபாடில்லாமல் விளக்குகள் ஒளிர, மக்கள் நகரும் நகரம். சப்வே என்று அழைக்கப் படும் பாதாள ரெயில்கள். பாதாள என்பது வெறும் பெயரளவில் தான். தனக்கென்றே அமைந்த பாலங்களில் மேற்பரப்பிலும் நகரும் மின்வண்டிகள். இது ஒரு தனி உலகம். இரண்டே கால் டாலரில் நியு யார்க் நகரமெங்கும் சென்று வரலாம். பெருநகரங்களின் வெளியே இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் கார் […]
சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே […]
“என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்” என்றெழுதுகிறார் மலர்மன்னன். எல்லாருக்கும் அந்தப் பேரதிசயத்தின் மூல காரணம் தெரியவேண்டுமென அவாவினால் இக்கட்டுரை இங்கு வரையப்படுகிறது. பேரதிசயத்தின் காரணம் இந்து மதத்தின் தொன்மையன்று. அதன் லிபரல் நேட்சரே. எவர் என்ன சொன்னாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம் என்ற உணர்வே காரணம். மேலும், இம்மதத்தின் ‘இதுதான் கொள்கை; இதைத்தான் ஏற்றுக்கொள்ள […]
அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு டீ கிடைக்குமா என்று கேட்டால் டீ கிடைக்கும் என்பது எதிர்பாராது கிடைத்த ஒரு சந்தோஷம். கிடைத்த சந்தோஷமா?, வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது. கொதிக்கக் கொதிக்க. கைகள் குளிரில் நடுங்க வெடவெடவென விரல்கள் தாளம் போட அந்த டீ க்ளாஸைக் கையில் பிடித்துக்கொண்டு விட்டால் அதுவே ஒரு சுகம் தான். ஆவி பறந்தது. அது டீயா? […]
சமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலையாக வெளியே செல்வதற்கு வர நேர்ந்தது. ஒரு குடை ரிப்பேர் செய்பவர் குடைகளை சரி செய்து கொண்டிருந்தார். சரி. மழை காலம் வந்து விட்டது, வீட்டிலிருந்த பழுது பட்ட குடைகளை எடுத்து வந்து சரி செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு சென்று குடைகளை எடுத்து வந்து கொடுத்தேன். பழுதான குடைகளை ஆராய்ந்து கொண்டே என்னுடன் பேச ஆரம்பித்தார். சார், எங்க வேலை பாக்குறீங்க என்று ஆரம்பித்தார். சொன்னேன். பார்க்க வாட்ட […]
சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டேப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டு விடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் […]
கோவிந்த் கோச்சா ::: இந்த படம் நியூடெல்லி விமான –புது- நிலையத்தில் எடுத்தது. விமானம் ஏறும் இடம் அருகே, -செக்யூரிட்டி செக் முடிந்த பின் – இருக்கும் உணவு வகைகள் நடுவே… ஒரு திறந்த மதுக் கடை… BAR … ஸ்டீவ் ஜாப்பிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்த இந்திய கலாச்சாரத்தின் யுவன், யுவதிகள் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் காட்சி…. இது எதைக் காட்டுகிறது…? இதே சரக்குக் கடை ரயில் நிலையத்திலோ, இல்லை பேருந்து நிலையத்திலோ திறக்கப்பட்டு ,, வண்டி […]
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெல்வயல்கள் குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.. குளம் ஏரி போன்ற பகுதிகளின கரைகள் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடிசைகள் போடபட்டு அதனால் அவைகள் குட்டைகளாகிவிட்டன. . காயல்களும் சதுப்பு நிலங்களும் மண்அடிக்கப்பட்டு பெரும் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு உள்ளன. நீர் பிடிப்பு பகுதிகள் நீர்வரத்து பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வயல்களுக்கு பாசனம் தடைபட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள வேளாண் விளைநிலங்களின் மொத்தபரப்பு வெகுவாக […]