நாகரத்தினம் கிருஷ்ணா ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர். ராயல் ஏர் •போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். […]
ஜென் பதிவுகளைக் கால வரிசைப் படுத்தும் போது பதிவுகளில் காணப் படும் சொற் சிக்கனமும் வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் காணும் நுட்பமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வாசகனின் விழிப்பைத் தொடுவதும் தொடர் சிந்தனையைத் தூண்டுவதும் ஆன கருத்துக்களை வாசிக்கும் போது தனது வெளிக்காட்டும் அகந்தை தென்படுவதில்லை. மாறாக ஆழமும் செறிவும் ஆன ஒரு தத்துவ தா¢சனத்தின் வெளிப்பாடாக அது அமைய வேண்டும் என்னும் அக்கறை தொ¢கிறது. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ” ஹ¥யி கோ” (HUI KO) […]
டிசம்பர் 2007இல் [பெங்களூரில்] மறைந்த நடனக் கலைஞர் சாந்தா ராவின் நினைவாக அண்மையில் சென்னை நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் அவர் மீது ஆழ்ந்த அபிமானம் கொண்ட புகைப்படக்காரரும், நடன விமர்சகருமான அசோக் சாட்டர்ஜியின் உரையும், சாந்தா ராவ் குறித்த சில ஆவணங்களின் திரையிடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மங்களூரில் பிறந்து மகராஷ்டிரத்தில் வளர்ந்து தென் இந்திய நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே கேரளத்துக்கு வந்து அதன் கலைச்சூழலில் ஒன்றி அங்கு மோகினியாட்டத்தையும், கதகளியையும் கற்று […]
ஆரூர் ஔரங்கசீப் கருணாநிதியின் இந்து விரோத ஆட்சியின் போது, இந்து வெறுப்பியல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் சட்ட விரோதமாக இடித்துத் தள்ளப்பட்டன. அது பற்றித் திண்ணை (5 ஜூன் 2011 ) இதழில், “கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?” (http://puthu.thinnai.com/?p=890) என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் இல. கணேசனின் தலையீடு காரணமாக இந்து இயக்கங்கள் அந்தப் பாதகச் செயலைக் கண்டித்துப் பெரிய அளவில் போராடாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தேன். சென்னை ஓமந்தூரார் […]
ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம். சான் என்னும் சீனப் பதமே ஜென் என்னும் பெயருக்கான மூலம் என்று கருதப்படுகிறது. 25 நூற்றாண்டுகளுக்கு மேற் பழமையான ஜென் தத்துவம் தாவோயிசம் மற்றும் பௌத்ததின் சங்கமத்தில் உருவானதாகக் கருதப் படுகிறது. இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் பார்க்கும் போது கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் ஞான யோகத்தில் நாம் ஜென் மரபை அடையாளப் படுத்திக் கொள்ளலாம. வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் மதம் சம்பந்தப் […]
அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்கிறோம் என்பது போன்ற கவலைகள் இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. இப்போது அந்நாட்களைப் பற்றி நினைத்தாலும் சந்தோஷமாகக் கழிந்ததாகவே தோன்றுகிறது. திரும்ப நினைவில் அசை போடுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது. அலுவலகத்தில் கழியும் நேரத்தை எவராவது சந்தோஷமாக நினைவு கொள்வார்களா? அதாவது நேர்மையாக உழைத்து கிடைக்கும் அற்ப பணத்தில் வாழ்க்கை […]
பசுவுக்குப் பூஜை பெண்சிசுவுக்கு கள்ளிப்பால் தொல்காப்பியன் அறியாத பால்வேற்றுமை என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும் எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும் ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும் […]
பி கே சிவகுமார் எழுதியிருந்த பத்திக்குப் பின்னால் தான் ஜெயமோகனை நான் படித்தேன். முதலாவதாக எல்லா நிகழ்வுகள் பற்றியும் எல்லோரும் அல்லது ஜெயமோகன் போன்றவர்கள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அபத்தம். இரண்டாவது கனிமொழி வீழ்ச்சியைத் தொடர்ந்து கருத்துச் சொல்ல விரும்பாத ஒருவர், சின்னக் குத்தூசியின் மரணத்திற்குப் பிறகு அவரை ஏன் விமர்சனம் செய்தார் என்ற கேள்வி எழுப்புவது – ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் குத்தூசியைப் பற்றி […]
(online sale & distribution of food & drugs and related problems) — கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது இணையங்களின் மூலம் வர்த்தகமாகும். இது பல தொழில் துறைகளின், வியாபார நிர்வாகங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது எனினும், சில பொருட்களை, குறிப்பாக மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை இணையத்தின் மூலம் விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும், பல சிக்கல்களும், பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. ஒன்று பொருட்களின் தரம் : இணைய வர்த்தகங்களின் மூலம் பொருட்களின் […]
வலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார brandகளின் பெயர்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவாளனின் தமிழார்வம் கட்டுக்கடங்காமல் சகல புழைகளிலிருந்தும் ஜரூராகப் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது. ஜெயமோஹன் என்பதை வெற்றி விரும்பி என்று யாராவது சொன்னால் அது எழுத்தாளர் […]