– உதுல் பிரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு […]
பாதல் சர்க்காருடைய மறைவுக்குப் பிறகு அவர் குறித்து வெளிப்படுத்தப்படும் பல்வேறு உணர்வுகள் பாதல் சர்க்காரின் பொருத்தப்பாடு இன்றைய சிக்கலான சமூக கலாச்சார சூழலில் எப்படி வைத்து மதிப்பிடப்படுகிறது என்பது குறித்த அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகின்றன. ஏற்கனவே பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பங்கேற்றவரும் நாடகச் செயல்பாட்டாளருமான அ.மங்கை பங்கேற்ற குழுக்களின் நிலைப்பாடுகள் பற்றி 1993ம் ஆண்டிலேயே தன்னுடைய கட்டுரையில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். தன்னுடைய படைப்புச் செயல்பாடுகளை காலவோட்டத்தில் பொருத்திப் பார்த்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு […]
தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும் காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: “கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை” என்கிற புத்தகம். இதனை காமராஜர் […]
அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும் கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே, அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில் இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான். இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன். தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் […]
அமெரிக்காவைப் பிடிக்கவில்லை என்றால், உலகெங்கிலும் சில விஷயங்களைச் செய்கிறார்கள். அங்கிள் சாமின் உருவத்தை, அமெரிக்கக் கொடியைக் கொளுத்துவார்கள். அல்லது கோக், மெக்டானல்டு (Coke, MacDonalds) மற்றும் பெப்ஸி (Pepsi) போன்ற அமெரிக்க வர்த்தகக் குறிகளின் (brands) பெரிய வடிவத்தை எரிக்கிறார்கள். அமெரிக்கா என்றவுடன் சட்டென்று அதன் கொடியைத் தவிர எது நினைவுக்கு வருகிறது? இன்று, நைக்கி, ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், (Nike, Apple, Google, Facebook) போன்ற பேர்கள் உடனே நினைவுக்கு வருகின்றது. ஹாலிவுட் திரைப்படங்களும் இந்த […]
ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் […]
சல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சு சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் பற்றித் திரும்பியது. அதற்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு நாவலைப் படிக்க வேண்டாம் என்று நெடுநாள் வைத்திருந்ததாகவும், பின்னர் சில பக்கங்கள் படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்து நாவல் மிகவும் பிடித்துப் போனதாகவும் கோபால் ராஜாராம் சொன்னார். ரவிக்குமாரின் விமர்சன, தத்துவப் பார்வையின் தகுதிகள் குறித்து கோபால் ராஜாராமுக்குக் கேள்விகள் எதுவும் […]
சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் […]
1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜன்ஸி என்ற நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமல் செய்யப்பட்டது. அதன் பொருட்டு வந்த சில அபு அப்ரஹாம் கார்ட்டூன்களையும் கார்ட்டூன் போன்ற இங்கே பகிர்ந்துகொள்கிறேன் […]
தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்? என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து […]