ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில குளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது விரட்டியடிப்பீர்களா? இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார். விடயத்துக்கு வருவோம். எமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களது பணத்தைக் கொண்டு ‘விளையாட்டு மருத்துவப் […]
தேர்தலில் மிக பெரிய வெற்றிக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், மற்ற இடதுசாரி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் பல கட்சிகளும் இணைந்து, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய இலங்கையின் மீதான பொருளாதார தடை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன ஒழிப்பையும் (ethnic cleansing), இனபடுகொலைகளையும் (genocide) 60 ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்த்திவரும் இலங்கை அரசை கண்டித்தும், இவற்றையே தனது கொள்கைகளாக கொண்டு தமிழக மீனவர்களையும் கொல்ல துணிந்துவிட்ட சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளுக்கும்/கட்சிகளுக்கும் எதிராகவும் […]
தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. முதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொலைக்காட்சியின் நேரடி சாட்சியமாகப் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தையையும், வன்முறையாக அவர்கள் மக்களை அப்புறப்படுத்தியதையும் இடைவிடாது பார்க்க நேரிட்டதால் வேறு வழியின்றி மைதானத்தில் இருந்தவர்களை அகற்றுவதற்காகக் குறைந்தபட்ச வன்முறை பிரயோக்கிப்பட்டதாகச் சொல்லத் தொடங்கினார்கள். […]
அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகங்கொடுத்த விஜிதா நால்வர் அடங்கிய குடும்பத்தின் மூன்றாமவள். அப்பொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லத் தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக அவள் அவசர அவசரமாக தனது தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள். தப்பிச் செல்வது ஷெல் குண்டுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் கட்டளையை செயற்படுத்தாது விடின் வரும் ரீ56 குண்டுகளிலிருந்தும் காத்துக் கொள்ளத்தான். […]
சமீபத்தில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 100 கணினி ”வல்லுனர்கள்” சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து தங்கள் கணினி அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் தங்களுக்கு 2 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்றும் முறையிட்டார்கள். குறைகளை கேட்டறிந்த ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு குறைகளை ஒரு மனுவாக எழுதி தரும்படி கேட்டிருக்கிறார். யாருக்குமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள். மறுநாள், இது செய்தியாக சில தினசரிகளில் வெளியாகி […]
சீனுவாசன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நண்பர். சுவாரஸ்யமான என்றால், அவர் பேச்சில், பார்வையில், ரசனையில், சில பிரசினைகளை அணுகும் முறையில் அவர் வித்தியாசமானவர். சாதாரணமாக அவர் செய்வதையும், சிந்திப்பதையும், பேசுவதையும் இன்னொருவர் பேசக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கவியலாது. முன்னரே ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்லியிருக்கிறேன். இதன் காரணமாக அவருடன் பழகுவதில் எங்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியதை அவர் செய்வதில்லையாதலால் எங்களுக்கு அதனால் லாபமே தவிர கஷ்டங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. முதலில் எப்படி எங்கள் அறைக்கு […]
எம் எஃஃப் ஹுசைன் தன் 95-ஆம் வயதில் மரணமுற்ற போது மீண்டும் அவர் குறித்து எழுந்த விவாதங்களில் அவர் கலைச் சிறப்புப் பற்றி கொஞ்சமாகவும், இந்துக் கடவுளர்களை அவர் நிர்வாணமாக வரைந்திருந்ததால் எழுந்த எதிர்ப்பு அலை பற்றி அதிகமாகவும் இருந்தது. இந்தியாவிற்கு வெளியே இருந்த ஒரு இந்தியக் கலைஞனின் மரணம் இது. ஆனால் ஹுசைனின் மனம் முழுக்க இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும். அவர் கிட்டத் தட்ட அறுபதாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்ததாய்த் தெரிகிறது. ஆனால் அடிப்படையில் […]
எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக தமிழக மக்கள் தங்களிடமுள்ள வன்முறை சாரா எனில் வலுவான ஒரே ஆயுதமான ‘வாக்குரிமையை’ப் பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மக்களின் வாக்குரிமையை, வாழ்வுரிமையை மதித்துநடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தோல்வியடைந்தவர்களுக்கும் சரி வெற்றியடைந்தவர்களுக்கும் சரி தேர்தல் தரும் பாடமாக இருந்துவருகிறது. தேர்தல் முடிவுகளை தமிழக மக்களின் தோல்வி என்று திருவாய் மலர்ந்தருளினார் குஷ்பு. இதுநாள்வரை இன்னலுறும் தமிழக மக்களுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பாராமல் அவர் ’வெயிலே படாமல் அரசியல் நடத்துபவராக இன்றை தமிழக முதல்வர் […]
நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பெருமை சேர்த்தது. இதெல்லாம் தற்செயலாக நேர்ந்தது தான். இதே போல இன்னொருவருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியாது. செல்வாக்கே ஏதும் இல்லாத எனக்கு, சந்தர்ப்பங்கள் கூடி வந்ததால் கிடைத்த ஒன்றே அது அல்லாது என் சாமர்த்தியத்தால் அல்ல. […]
நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. சரி. முதலில் என் வருத்தத்தை சொல்லி விடுகிறேன். கால் பிரதமராகிய என்னிடம் பத்து கேள்விகளை கேட்கிறீர்களே, முக்கால் பிரதமரிடம் ஏன் முந்நூறு கேள்விகளை கேட்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. (எனக்கு வருத்தப்படக்கூட உரிமை இல்லையா என்ன?) சரி. அதிருக்கட்டும். நான் ஒன்றும் உங்கள் குறைகளை தீர்க்கப்போவதில்லை. ஆனால், எனக்கும் கேள்வி […]