சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்

This entry is part 18 of 42 in the series 22 மே 2011

வசந்தகாலம் துவங்கியதால் சாலையின் இருபுறமும் பசுமை துளிர்க்க ஆரம்பித்து விட்டது.அமெரிக்க கிராமபுற சாலையொன்றில் தனியாக என் காரில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.கேரிகன் பிரதர்ஸ் வைனரி 1 மைல் என்ற போர்டு என்னை வரவேற்றது.வைனரியை நெருங்கினேன்.காரிகன் பிரதர்ஸின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரம் வெளியே என்னை வரவேற்றது. சாதா விவசாயிகள்…குடும்ப தொழிலாக விவசாயம் செய்து மது விற்கிறார்கள்.சர்வசாதாரணமாக விளம்பரம் செய்கிறார்கள்.எந்த பிரச்சனையுமின்றி தொழிலில் ஈடுபடுகிறார்கள்.அமெரிக்க அரசு மதுவிற்பனையை தேசியமயமாக்கவில்லை.மது விற்க மந்திரியின் கையை காலை பிடித்து லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை.மதுக்கடை  […]

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….

This entry is part 8 of 42 in the series 22 மே 2011

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளான தேமுதிக, இடதுசாரி கட்சிகள், மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் எதிர்பார்த்த படியே மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளுடன், சில வார்த்தைகள்.  இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான வாக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் நிலவும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான எதிரான, இலங்கை போன்ற நாடுகளுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் வாக்களிப்பாகவும் கொள்ளலாம். இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு […]

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

This entry is part 5 of 42 in the series 22 மே 2011

எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்’ மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.   நான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பிண்ணனிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் […]

பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை

This entry is part 7 of 48 in the series 15 மே 2011

  கோல்கொடாவின் மையப் பகுதியில் ஒரு மாடியறை. சற்று விசாலமான அறையில் 20 லிருந்து நாற்பது பேர் உட்காரலாம். நாற்காலிகள் சுற்றி போடப்பட்டிருக்கின்றன. நாடக அரங்கின் உள்ளேயே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிற முறையில் நிகழ்த்துனர்கள் சுற்றிவர நிகழ்த்துநர்கள் செல்ல வழி விட்டு நாற்காலிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. நாடகம் பார்வையாளர்கள் நடுவிலும் சுற்றிலும் நிகழ்கிறது. இது இந்த திருப்பம், இது இந்தத் திருப்பம் என்று நாடக நடிகர் ஒவ்வொரு திருப்பமாக அந்த வட்ட அரங்கில் செல்லும் போது ஊர்வலம் ஆகிறது. […]

இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை

This entry is part 6 of 48 in the series 15 மே 2011

ஒசாமா கொலை. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை. அவரது குறியெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்தான். அமெரிக்கா அரேபிய புனித பூமியில் கால் வைத்தததால் கோபம் கொண்டு அழிக்க கிளம்பியவர் அவர். ஒசாமா இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்தது வரை இந்தியாவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாத செயல்கள் பயங்கரவாத செயல்களாக அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் பார்க்கப்பட்டதே […]

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

This entry is part 5 of 48 in the series 15 மே 2011

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் […]

பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்

This entry is part 4 of 48 in the series 15 மே 2011

நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவரது கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர்கள் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல. இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியை தண்ணீரில் மிதந்துசெல்ல விட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி […]

மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்

This entry is part 3 of 48 in the series 15 மே 2011

தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், ஜி.கே.மூப்பனார் இல்லாதது. ஏன்…? காமராஜார் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன், சிவாஜி கணேசன், மூப்பனார் ஊர் ஊராக சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். பெரிவாரியான காங்கிரஸார் இந்திரா காங்கிரஸில் இணைவதையே விரும்பினர். மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே முடிவெடுத்தார். சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் இணைப்பு நடந்தது. அதில், யாருமே எதிர்பாராத நிலையில் இந்திரா காந்தி, மூப்பனாரை […]