ஆர் சீனிவாசன் ஒப்புக்கொள்கிறேன். நான் தான் உரசலை ஆரம்பித்தேன். வேலை அழுத்தத்தின் பின் விளைவுகளை நாவு வரை செல்ல அனுமதித்திருக்க கூடாதுதான். வீட்டிற்கு வந்தவுடனே அலர் “ஏன் இவ்வளவு லேட்டு. இன்னைக்கு வெளியில சாப்பிடலாம்னு நினைச்சோமே” என்றதிற்கு முகம் சுளித்திருக்க கூடாததுதான். “ஏன் இப்படி…” என வாக்கியத்தை முடிக்காமல் ‘உம்’மென முகத்தை வைத்துக்கொண்டு போனவளை சமாளிக்க முடியாமல் அன்று மாலை முழுவதும் மூலைக்கு ஒருவராக கழித்தோம். படுக்கையில் சீண்டி கொஞ்சம் அத்து மீறலாமா என நினைத்தேன். ஆனால் […]
உஷாதீபன் சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி. நீட்டிய தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். . தபாலை நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை உணர்ந்தார். எழுத்தர் அவிநாசிக்கு அனுப்பிய கடிதம்தான அதன் ஜெராக்ஸ் இணைப்போடு திரும்பியிருந்தது. நாம அனுப்பிச்சதே திரும்பிடுச்சு? என்றவாறே அந்தக் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும் கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க ஏறினார்.. கும்பிடறேனுங்க ஐயா, அம்மா வணக்கம் என்றார் நடத்துநர் ஓட்டுநர் திரும்பிப் பார்த்து,’ அம்மா வணக்கமுங்க, பெரியம்மா வரலியா? ‘.. மாடு, கண்ணுங்களை யாரு பாக்கறது?அதான் கெழவிய பாத்துக்கச் சொல்லி வந்துட்டோம்.’ கிழவி என்றது மாமியாரைதான். ‘பெரியவரு தேங்கா மண்டியை […]
“சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும்.நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில்இருந்த என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் பமீலா. கண்ணீரைத் தன்கைகளினால் துடைத்துவிட்டாள். இரவு முழுவதும் நான் உறங்கவில்லைஎன்பதை அவள் அறிவாள்.“இண்டைக்கு கனடாக் கோல் வருமெண்டு ராஜன் அண்ணா சொன்னவரா?”“ஓம் சாகித்தியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை வந்து சொல்லிட்டுப்போனவர். நான் மாத்திரம் போய்க் கதைச்சிட்டு வாறேன்.”நான் சென்றால் அழுது ஒப்பாரி வைப்பேன் என்பதால், என்னைக் கூட்டிச்செல்வதைத் தவிர்த்தாள் பமீலா. அவள் […]
சசிகலா விஸ்வநாதன் ராம திலகம் நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள். எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி இவளையே பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. “சட்” என் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அருகில் இருந்த குத்து விளக்கை ஏற்றும் போதும் அவளுடைய பார்வை குறுகுறு வென அவள் மேல் படர்ந்தாற் போல் உணர்ந்தாள். எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆசி அளிக்கிறாளா? வீடு […]
சோம. அழகு தேநீர் கடைக்கும் நகல் எடுக்கும் கடைக்கும் பொதுவான இடத்தில் நின்று இனிப்பு தூக்கலான ஒரு கோப்பை பாலை ஆதினி மிடறுகளாய் மாற்றிக் கொண்டிருந்த வேளையில், வெகு நாட்களாகக் கேட்டிராத ஆனால் மனதிற்கு மிகவும் நெருக்கமான, கேட்டவுடன் மொத்தமாக உருகச் செய்கிற பாடல் ஒன்றை ஒலித்தவாறே பேருந்து ஒன்று சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தது, இல்லை! இல்லை! ஆதினிக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பிடித்த பாடலை நினைத்தபொழுதெல்லாம் கேட்கக் கிடைப்பதை விட இவ்வாறு அரிதாக ஒரு அற்புதமாக போகிற […]
ஆர் சீனிவாசன் சில நாட்களாய் ப்ரசாத் கவனித்து வந்தான். அன்புமணி அவனுக்கு வீடியோ கால் செய்யும்போதெல்லாம் சரியாக பேசுவதில்லை. ஒரு விஷயத்தில் ஆரம்பித்து வேறு எங்கோ பேச்சு போய்விடும். அமேரிக்காவில் வசித்த ப்ரசாத் அன்புமணியிடம் ஒரு நாள் கூட தவறாமல் பேசுவான் ஆனால் சமீபகாலமாக அப்பாவின் பேச்சில் மாற்றங்கள் தெரிந்தன. அம்மாவின் மறைவுக்கு பின் அப்பாவிடம் “அமேரிக்கா வந்துவிடு” என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ப்ரசாதின் அம்மா காலமான பிறகும் சொந்தவீட்டில் தனிமையில் வசித்துவந்தார் அன்புமணி. […]
ஜெ. ஜெயகுமார் ஆஸ்திரேலியா நியூஸ் சேனலின் “செய்திகள்” வாசிப்பில் வந்த கொலை வழக்கு தன்னை ஆஸ்திரேலியா முழுக்க அறியச் செய்யும் என்று ரம்யா சற்றும் நினைக்கவில்லை. வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று அறுபதாம் அகவையை எட்டிவிட்ட ரம்யா, முரளி தம்பதியினர் மூன்றாவது முறையாக சென்னையிலிருந்து மெல்போர்ன் வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான ஒரு தினசரி வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ரம்யா அதிகாலை ஐந்து மணி அளவில் எழுந்து மகன், மருமகள் இருவருக்கு புதிதாக […]
அந்த வீட்டுவசதிக் கழக வீட்டுக்கு நாங்கள் புதிதாக குடிவந்திருக்கிறோம். புதுக்கோழிகளாக பண்ணையில் சேர்ந்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழகிய கோழிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் 6 பேர். என் மகள், மருமகன், அவர்களின் இரண்டு குழந்தைகளோடு நாங்கள் இருவர். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை 50 உருப்படிகள் துவைத்தாக வேண்டும். மூன்று ஆயாக்கள் சேர்ந்தாலும் முடியாத காரியத்தை நகராமலேயே என் துவைக்கும் இயந்திரம் துவைத்துவிடுகிறது. பாவம் அது. மேற்கூரையில் கொண்டி அடித்து ஆறு மூங்கில் கழிகளைக் கிடத்தி […]
வெ.தி.சந்திரசேகரன் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த தமிழ்க்கொடியை, இன்றைக்கு கால்குலஸ் நடத்தும் புரபசர் பொன்னுச்சாமி வராத காரணத்தால், அவளோடு படிக்கும் அருண் சினிமாவிற்கு அழைக்க, அவளும், சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி’ யென்று தலையாட்டினாள். நாளையும், நாளைமறுநாளும் சனி, ஞாயிறு ஆதலால் கல்லூரிக்கு விடுமுறை. அதனால் கிராமத்திலிருந்து பேருந்தில் தினமும் கல்லூரிக்கு வரும் தமிழ்க்கொடியால் இரண்டுநாட்கள் திண்டுக்கல்லுக்கு வரமுடியாது என்பதும் அவள் ஒத்துக்கொண்டதுக்கு ஒரு காரணம். தமிழ்க்கொடி, ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சில்வார்பட்டி என்னும் சின்ன […]