“இது ஒரு புது யுகத்தின் தொடக்கம். வேலியே பயிரை மேய்ந்த காலம் கரைந்து விட்டது. உங்கள் பயிரை நீங்களே அறுவடை செய்யும் யுகம் தொடங்கிவிட்டது! திருமணம், குலம், குடும்பம், என்று பல்வேறு பிணைப்புகளால் கட்டுண்டு கிடந்த உங்கள் வாழ்க்கை, இன்று முதல் அன்பிற்கும் கட்டுப் படட்டும். சமுதாயம், ஒழுக்கம் இவற்றிற்கு பயந்து சிறை பட்டிருந்த அன்பு, இன்று முதல் உங்களுக்கு நெருக்கமானவரிடம் அடிமையாகட்டும். அடக்குமுறைக்கும், சுதந்திரத்திற்குமான போரில் வெற்றி பெற்று, உங்களுக்கெல்லாம் புதிய வாழ்க்கை அளித்த என்னை […]
பிரசன்னா சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம். அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் […]
நரியும் பேரிகையும் ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப் பார்த்தது. அங்கே நரி ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதும் நரிக்கு மனக்கலக்கமும் கவலையும் உண்டாயிற்று. ”ஐயோ, ஆபத்து வந்து விட்டதே! இனி நான் செத்த மாதிரிதான். யார் இப்படிச் சத்தமிடுகிறார்கள்? என்ன மிருகமாயிருக்கக் கூடும்?” என்றது யோசித்தது. இங்குமங்கும் […]
CAKES AND ALE WILLIAM SOMERSET MAUGHAM A NOVEL >> தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 வில்லியம் சாமர்செட் மாம் பாரிசில் 1874ல் பிறந்தார். லண்டனின் மருத்துவராகப் பயின்றுகொண்டிருந்தபோது தமது ஆரம்பகட்ட நாவல்களை அவர் எழுத ஆரம்பித்தார். 1907ல் அவர் ‘சீமாட்டி ஃப்ரிதரிச்’ நாவல் மூலம் புகழ்பெற்றார். 1908ல் ஒரே சமயத்தில் அவரது நான்கு நாடகங்கள் லண்டனில் அடுத்தடுத்து பலமுறை அரங்கேறின. 1926ல் பிரான்சின் ஃபெரத் முனையில் வீடுவாங்கிக் குடியமர்ந்தார். அது அநேக எழுத்தாளர்களின், கலைஞர்களின், […]
சபா தயாபரன் வாசலில்; அம்மா புதிதாக நட்ட செவ்வரத்தம் மரத்தில் இரண்டு பெரிய செவ்வரத்தம் மலர்கள் கொஞ்சிக் குலவியபடி இருந்தன..பனிக்கு மதாளித்து வளர்ந்து , பச்சை இலையில்; வெள்ளை புள்ளி வைத்த குரோட்டன் இலைகள் , மஞ்சள் வெயிலில் வண்ணம் காட்டி நின்றன அவற்றின் அடியில் துளிர்த்து நின்ற பனித் துளிகளை கைகளினால் உதறி விடுகையில் ஐpல் என்று குளிர்ந்தது.அம்மா ஞாபகம் ஷாந்தனுக்கு சின்னவனாய் இருக்கையில் முழுகிவிட்டு வரும் இவனை அம்மா கைகளினால் கோதி விடுவாள் அப்Nபுhது […]
“சாமி கும்பிடறேங்க” *** *** *** சாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான். நன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு பாத்தியா .ரண்டு தரம் கூப்டியே ,திரும்பினாரா.அதா(ன்) இந்த எடதுக்கெல்லாம் வரமாட்டேன்குறேன். மூதி .சும்மா கிடடா .பெரிசா பேச ஆரம்பிச்சுட்டான் .இந்த கொழுப்பெடுத்ததனத்தை படிப்புலே காட்டமுடிலே.சாமி நாலு பேரோட பேசிட்டிருக்காரில்லே .ஒரு அஞ்சு நிமிசம் சவக்களையா கிடந்தா என்ன கேடா? முன் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “உணவு, உடை, வீடு ஆகியவற்றை மனித ஊழியத்தால் உண்டாக்க முடியும். ஆனால் அவை உண்டாக்கப் பட்ட பிறகு களவாடப் படலாம். குதிரையைக் கையாளுவது போல் நீ மனிதரை நடத்தலாம். அதிகாரப் பலத்தால் உன் கை ஓங்கி அவரை நீ ஆட்டிப் படைக்கலாம். அல்லது அவரது உரிமையை நமக்காகத் தியாகம் செய்வது அவரது மதக் கடமை என்று விதிமுறை போதித்துக் கட்டுப்படுத்தலாம்.” […]
காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார். இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இல்லையென்றால் ஹார்ட் அட்டாக் வந்தேவிடுமென்று பயங்காட்டியதால், அவர் பேச்சைக் கேட்டே ஆகவேண்டியதாகிவிட்டது. இல்லையென்றால், காசிம் ஹாஜியாராவது நடக்கிறதாவது? பக்கத்து தெருவிலிருக்கும் அவருடைய ஜவுளிக் கடைக்கே காரில்தான் போவார். இப்பக் கூட டாக்டர் காண்பிச்ச அந்தப் படம் மனக்கண்ணில் வந்து நின்றது. அதாவது இரத்தக் குழாயில் கொழுப்பு அடைச்சா எப்படியிருக்கும், அது இதயத்தை எப்படி […]
தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான். சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான் அந்தக் குணத்தை விருத்தி செய்து காப்பாற்ற வேண்டும். பெருவழக்காய்ப் பேசப்படும் சொற்களை இன்னும் கேள்: அரசன் வீழ்ச்சியை விரும்பாதவன் அரசன் உத்தரவை எதிர்பாராமலே பேசட்டும். அதுவே நல்லவனுக்குத் தர்மம்; மற்றறவையெல்லாம் அதர்மமாகும். இதைக்கேட்ட கரடகன், […]
எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு உண்டுதான். அதன் கூர்த்த மௌனத்தில் காதுகள் தானறியாமல் ஒரு பாதுகாப்பு பிரக்ஞையுடன் எதிர்பார்ப்புடன், அதாவது எதிர்பாராத ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கவே செய்கின்றன. சப்தங்களின் ஊடே இந்த எதிர்பாராத்தன்மை இல்லை தான். சப்தங்களின் ஊடே மௌனந்தான் […]