Posted inகவிதைகள்
கவிதை
ஆதியோகி அனுபவம்+++++++++பார்க்கவே கொள்ளை அழகு அந்த மலர்...!அருகில் செல்லும்போதேஇதமாய் நாசியுள்நுழைந்து கிறங்கடிக்கும்அப்படியொரு நறுமணம் அதனிடத்து...! பெயர்தான் தெரியவில்லை,"என்ன மலர்?" என்று கேட்பவர்களுக்குச் சொல்ல...! அதனாலென்ன?ரசித்து, அனுபவித்துகிறங்கிப் போதலினும்,பெயர் தெரிதலும்,பிறருக்கு விளக்கிப்புரிய வைத்தலுமா முக்கியம்...? - ஆதியோகி *****