Posted inகவிதைகள்
ஸ்வரதாளங்கள்..
காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்காலத்துளிகளில், மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன தட்டில்விழும் வட்ட நாணயங்கள்; ஸ்வரம் தப்பாமல் இறைஞ்சும் குரலுடன் இழைந்து.. அமைதிச்சாரல்