ஊதா நிற யானை

சுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. யானைக்கு ஊதாநிறமா? அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை இரண்டு கால் யானை எங்குள்ளது…

வாழ்தலை மறந்த கதை

அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும் முடிவற்ற சந்தேகங்களையும் சுமந்து கொண்டு மிகுந்த…

கவிஞனின் மனைவி

அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள். அவன் எழுதும் எதையும் அவள் வாசித்ததில்லை…

என்னைக் கைது செய்யப் போகிறார்கள்

தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத்…
அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்

அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை விவரிக்கிறபோது அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கையில்…

மேலதிகாரிகள்

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும்…
விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

ஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.'எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி' என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள் மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன் திரைப்படம். விஷால் வாழ்ந்திருக்கிறார் படத்தில் ஜி.எம்.குமாருடன்.விளையாட்டு…

அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்

திலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய…

காகித முரண்

ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன்.

சின்னப்பயல் கவிதைகள்

ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த…