குடிமகன்

தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா  நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும் நதியை போலவே அது ,என்றொருநாள்  அது நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின்…

சௌந்தர்யப்பகை

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. லாவா உக்கிரத்துடன் வார்த்தைக் கண்ணிகளை அங்கங்கே புதைத்து மாட்டும் கால்களுக்காக காத்து பயணப்பாதைகள் பழக்கமற்று தாறுமாறாய்த் துள்ளியோடும் குறுமுயல்கள்…

மௌனம்

மனதோடு மௌனம் பழக்கி பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரண கூச்சல் .... சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பி தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் அழைப்பிதழ்... சுயம் அடிபடும் வேளைகளில் ரௌதரம் பழகவில்லை மௌனம் பழக்கி கொள்கிறேன் வெளியிட விரும்பா…

ரகசிய சுனாமி

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான தளர்ந்த அயர்ச்சியில் கரையோர நண்டுகள் மண்கிளறி…

தவிர்ப்புகள்

வருபவர் தூரத்துச் சொந்தம் என அறிந்தும் தடம் மாறிப்போன நண்பன் எனத் தெரிந்தும் முகம் தெரிந்தும் பெயர் தெரியாதவன் என புரிந்தும் பேசச் செய்திகளின்றி விருப்பமுமற்று தவிர்த்தோ அல்லது வெற்றுப் புன்னகையுடனோ முடிகின்றன நிறைய சந்திப்புகள் பொன்.குமார்

மனிதநேயர் தி. ஜானகிராமன்

முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் தி.ஜா என்ற தி.ஜானகிராமன் ஆவார். பாலுணர்வால் எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடியவர்கள் சமுதாயத்தில் பலநிலைகளிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்…

இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?

அஸங்க சாயக்கார தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக…

பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய…

உலரும் பருக்கைகள்…

கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள். சம்பிரதாயங்களுக்குள்ளும் சமூகச் சடங்குகளுக்குள்ளும் குறுக்கு மரச்…
இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:

இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:

நானொரு மிகச் சாமானிய இந்தியன். நமது பிரதமந்திரி போன்று உலகப்பிரசித்தி பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயின்று அவர்களால், அளிக்கப்பட்ட பட்டம் பெற்றதில்லை. மேலும் நமது நாட்டின் ரிசர்வ் வங்கியின் தலைவராகி பதவி ஒய்வுபெற்று, ராஜ்ய…